விக்ரம்

விக்ரம்

பிறப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எனும் ஊரில் கென்னடி ஜான் விக்டர் என்ற இயற்பெயர் கொண்டு 17 ஏப்ரல் அன்று பிறந்தவர் தான் கென்னடி என்ற விக்ரம்.


குடும்பம்:
அப்பா ஜான் விக்டர்(alies vinod raj ) சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தன் சொந்த ஊரான பரமக்குடியை விட்டு சென்னைக்கு வந்தவர். சினிமாவில் பெரிதும் பிரபலமாகாத இவர் சப்போர்டிங் ரோல் ஆகா பல படங்களில், தொடர்களில் நடித்து உள்ளார். கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு  அப்பாவாக, தம்பி படத்தில் மாதவனுக்கு அப்பாவாக என சிறு வேடமாக இருந்தாலும் அனைவரும் பேசக்கூடிய தனக்கென்று கொடுத்த ரோல்-ஐ கட்சிதமாக நடிப்பவர். அம்மா ராஜேஸ்வரி சப்-கலெக்டர், இவர் ஓர் மலையாளி, இவருடைய தம்பி நடிகரும் மற்றும் இயக்குனருமான தியாகராஜன் அவருடைய மகன் நடிகர் பிரசாந்த் விக்ரமுடைய உறவினர்கள். தம்பி அரவிந்த் மற்றும் தங்கை அனிதா. அப்பா சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்ததை நாம் சாதிக்க வேண்டும் என்பதை உத்வேகமாக எடுத்து கொண்டு 1990 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். தற்போது முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.  


இளமை பருவம்:
கிறிஸ்டின் அப்பா, ஹிந்து அம்மாவிற்கு பிறந்தவர் தான் கென்னடி ஜான் விக்டர்  என்ற விக்ரம். Montfort Matric School, Yercaurd,  அங்கு தனது பள்ளி படிப்பை முடித்தார், தனது கல்லூரி படிப்பை லயோலா காலேஜ், சென்னையில் முடித்தார். BA English , MBA  பட்டதாரியான விக்ரம் அதன் பிறகு சினிமா உலகத்திற்கு அடியெடுத்து வைத்தார். அவர் தனது பள்ளி பருவத்திலேயே கராத்தே, ஹார்ஸ் ரைடிங், ஸ்விம்மிங் போன்றவையில் ஆர்வமோடு பங்கெடுத்துளார்.  பள்ளியில் நடைபெறும் மேடை நாடகங்களில் முன்னணி கதாபாத்திரங்களாக பல தொகுப்புகளில் நடித்துள்ளார். மேடையேறவும் அந்த நாட்களில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிவிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே ஒரு நாள் வண்டியில் தனது வீட்டிற்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் 3 வருடம் ஹோச்பிடலில் இருக்க வேண்டிய கட்டாயம், மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தன்னை மீண்டும் மீட்டுயெடுத்து சினிமாவிற்குள் நுழைவது என்பது சாத்தியமாகாது. இந்த விபத்தினால் காலில் அடிபட்டு அதை சரி செய்ய 23 அறுவை சிகிச்சைகள் நடந்தது. இருந்தும் சினிமாவிற்காக மிக குறுகிய காலத்திலே இந்த விபத்தில் இருந்து வெளியே வந்து அவரை மீண்டும் தயார்படுத்தி இருக்கிறார்.


சினிமா பங்களிப்பு:
1990 "என் காதல் கண்மணி" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சினிமா உலகிற்குள்  நுழைந்தார்.முதலில் பெரிதாக அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும், 1999 சேது படத்தின் மூலம் தன்னை யார் என்று இந்த உலகிற்கு நிரூபித்தார். சேது படத்தில் இருந்து அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. சேது படத்திற்காக மொட்டை போட்டுக் கொண்டு, 21 கிலோ தனது எடையை குறைத்து, பெரிதாக நகம் வளர்த்து கொண்டு 1997 லில் இப்படம் பாலாவின் இயக்கத்தால் ஆரம்பித்தது, 1999 டிசம்பர் மாதம் வெளியானது. இதற்கிடையில் விக்ரம் வேறு எந்த படத்திற்கும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சேது படத்தில் தனது கதாபாத்திரத்தை அருமையாக வெளிக்கொணர்ந்து  மக்களிடையே பெரும் புகழையும் பெற்றுக்கொண்டார். மக்களிடம் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்கள் பலரிடமும் நல்ல பெயர் பெற்றார். அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு கதையும் சிறப்பாக அமைந்து மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பையும் பெற்றது. சினிமாவை நேசிக்கும் இவர், இந்த உலகிற்குள்ளே  வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பினால் யாருடைய துணையும் இன்றி இப்போது சினிமா துறையில் முன்னணி காதநாயகராகவும்   திகழ்கிறார். இந்த காரணத்தினாலே இவரை வெறுப்பவர் எவரும் இல்லை. விக்ரம் என்றாலே அனைவரும் கொண்டாடக்கூடிய  ஒரு  நபர்.


தனிப்பட்ட வாழ்க்கை:
சைலஜா பாலகிருஷ்ணன், விக்ரம் மனைவி, இவர் பல சமூக சேவை செய்பவர் அது மட்டுமல்லாது போதைக்கு அடிமையாக இருக்கும் பலருக்கு அதில் இருந்து மீண்டு வர உதவுகிறார் ஆலசோனையும் கூறுகிறார். அக்சிதா என்ற மகள், துருவ் என்ற மகன் உள்ளனர்."விக்ரம் மகள் அக்சிதா" என்று சொல்வதை விட "அக்சிதா அப்பா விக்ரம்" என்று சொல்வதையே அக்சிதா விரும்புவார். ஆனால் துருவ் நேர் உல்ட்டா "எங்க அப்பா யாருனு தெரியுமா ஆக்டர் விக்ரம்" என்று ஒரு தியேட்டரில் கலாட்டாவே நடந்தது என்று தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். தனது மனைவி சைலஜா பற்றியும் அவர் கூறியுள்ளார், தெருவில் ’ஐயோ பாவம்’என்று நாம் இரக்க பட்டால் உடனே தனது கையில் எது வைத்திருந்தாலும் கொடுத்து விடுவார், "அவன் உன்ன ஏமாத்துறான்பா என்று நான் சொன்ன" ‘ஏமாத்துறதுக்காக பிச்சை எடுக்கிற அளவுக்குக் கீழே இறங்கிட்டார்ல. அதைவிட அவருக்கு பனிஷ்மென்ட் எதுவும் இல்லை. அவர் நம்மை ஏமாத்தலை. தன்னைத்தானே ஏமாத்திக்கிறார். அதுக்காக நாம நம்மால முடிஞ்சதைச் செய்யாம வரக் கூடாது’னு சொல்வாங்க. சினிமா, வீட்டுக்குள்ள வரக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பாங்க. அதே மாதிரி வீட்டையும் சினிமாவுக்குள்ள நுழைக்க மாட்டாங்க. ஷைலா இல்லைன்னா, எங்கேயோ மாசச் சம்பளத்துக்கு வேலைபார்க்கிற கென்னியாவே என் வாழ்க்கை முடிஞ்சுபோயிருக்கும். என் கிராஃப் இன்ச் இன்ச்சா ஏறினது ஷைலாவால்தான். உலகம் எப்பவுமே என்கிட்ட இருந்து மட்டும்தான் தொடங்குதுன்னு நினைச்ச என்னை, அது எதிர்ல இருக்கும் மனுஷங்ககிட்ட இருந்தும் தொடங்குதுனு எனக்குப் புரியவெச்சது ஷைலா. இதை விகடனிற்கு ஒருமுறை அளித்த  பேட்டியில் அவர் கூறினார். விக்ரம் என்ற பெயர் கூட “Vi” victor என்ற பெயரின் துவக்கத்திலும், “K” Kennedy என்ற பெயரின் துவக்கத்திலும் “Ra” அம்மா  Rajeswari  பெயருடைய துவக்கம் இப்படி Kennedy என்ற தனது உண்மையான பெயரை விக்ரம் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவிற்குள் அறிமுகமானார். சீயான் என்ற பெயர் கூட சேது படத்தின் மூலம்தான் உருவானது. அன்றிலிருந்து இன்றுவரை சீயான் விக்ரம் என்றே அழைக்கப்படுகிறார்.


சாதனைகள், விருதுகள்:
சேது படத்திற்காக 1999 TamilNadu State Film Award. 2001 தில் படத்தில் நடித்த படத்திலே முதன் முதலாக அதிக வசூலை எட்டியது, அது மட்டுமல்லாமல் முதன் முதலாக ஆக்ஷ்ன் ரோல் கொடுத்து அசத்தினார், தரணி இயக்கத்தில் வெளியான இப்படம் ஒவ்வொரு திரையரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. காசி 2001 படத்திற்காக Best Actor என்று Filmfare வழங்கியது. 2002,2003[ Dhool, Gemini, Sami ] என்று பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். 2003 பிதாமகன் மீண்டும் பாலாவோடு இணைந்த படம் அதற்காக National Film Award, Third Filmfare Award. பிதாமகன் படத்தில் அவரது நடிப்பை பாராட்டி " இவர் ஓர் சினிமா வெறியன்" "இந்த கதாபாத்திரம் இவரை போல் வேறு எவராலும் நடிக்க முடியாது" என்று பல சினிமா நட்சத்திரங்கள் இவரை புகழ்ந்து கூறியதாக பேட்டி ஒன்றில் அவரே கூறினார். 2005 அந்நியன் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் முற்றிலும் வித்தியாசமாக, மூன்று வித கதாபாத்திரத்தில் ஒரே படத்தில், இதற்காக Fourth Filmfare Award அதுமட்டுமல்லாது box office success. ராவணன் 2011 படத்திற்காக Fifth Filmfare Award. தெய்வதிருமகள் 2011 படத்திற்காக விமர்சகர்கள் விருது Best Actor என்ற விருதினை பெற்றார், இதுவரை தான் நடித்த படங்களிலேயே முயற்சிக்காத ஒன்றை இப்படத்திற்காக முயற்சி செய்து நடித்து, அதற்கான விருதை Filmfare-டம் இருந்து பெற்றுள்ளார். 2015 “I” மீண்டும் சங்கர் அவர்களோடு இணைந்து இப்படத்திற்காக PopularTamil Actor, Best Actor விருதினை பெற்றார். “ஒரு படத்திற்காக இவ்வளவு செய்ய முடியுமா”, “என்ன மனுஷன் சார் இவன்”, “படத்துக்காகவா”  என்று யாருமே நினைக்க முடியாத கதாபாத்திரம், படம் முழுக்க விக்ரம் ஆனால் வேறு வேறு தோற்றம், எடை, கதாபாத்திரம், அனைவரையும் வியக்க வைக்கும் ஒருத்தர். 

`விக்ரம் கண்டுகொள்ளவில்லை' பேட்டியளித்த இயக்குநர் அனுராக்; `நடந்தது இதுதான்' பதிலளித்த விக்ரம்!
மு.பூபாலன்

`விக்ரம் கண்டுகொள்ளவில்லை' பேட்டியளித்த இயக்குநர் அனுராக்; `நடந்தது இதுதான்' பதிலளித்த விக்ரம்!

Rajini 170: ரஜினி படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? உண்மை என்ன?
நமது நிருபர்

Rajini 170: ரஜினி படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? உண்மை என்ன?

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

ரஜினி, விக்ரம், சிவகார்த்திகேயன், ஜோதிகா, த்ரிஷா மற்றும் பலர்...
ஆர்.வைதேகி

ரஜினி, விக்ரம், சிவகார்த்திகேயன், ஜோதிகா, த்ரிஷா மற்றும் பலர்...

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

மறைந்தார் மனோபாலா! - Mr. கழுகு: கலங்கிய பிடிஆர்- 'இலவசப் பேருந்து' சர்ச்சை -ஆபத்தான 6 சாக்லேட்டுகள்
Mukilan P

மறைந்தார் மனோபாலா! - Mr. கழுகு: கலங்கிய பிடிஆர்- 'இலவசப் பேருந்து' சர்ச்சை -ஆபத்தான 6 சாக்லேட்டுகள்

Thangalaan & Kanguva Production Cost | Exclusive Update From Producer K.E.Gnanavel Raja | Suriya
ஹரி பாபு

Thangalaan & Kanguva Production Cost | Exclusive Update From Producer K.E.Gnanavel Raja | Suriya

தங்கலான்: படப்பிடிப்பில் ஏற்பட்ட  விபத்து; நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!
நந்தினி.ரா

தங்கலான்: படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து; நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு!

"அஜித்துக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கியவர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார்!"- `முகவரி' இயக்குநர் V.Z.துரை
மை.பாரதிராஜா

"அஜித்துக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கியவர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சார்!"- `முகவரி' இயக்குநர் V.Z.துரை

Ponniyin Selvan 2: `நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' - மணிரத்னம் சொல்வது என்ன?
நா.கதிர்வேலன்

Ponniyin Selvan 2: `நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' - மணிரத்னம் சொல்வது என்ன?

பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்: EPS - அமித் ஷா சந்திப்பு தகவல் -P.T.உஷா விமர்சனத்துக்கு எதிர்ப்பு!
Mukilan P

பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்: EPS - அமித் ஷா சந்திப்பு தகவல் -P.T.உஷா விமர்சனத்துக்கு எதிர்ப்பு!