விவேகம் | Latest tamil news about Vivegam | VikatanPedia
Banner 1
திரைப்படம்

விவேகம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் 'விவேகம்'. அஜித்தின் 57-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாராகியிருக்கிறது எனச் சொல்கிறது படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் 'விவேகம்' ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

பிப்ரவரி 2: படத்தின் பெயர் வெளியானது.

பிப்ரவரி 2: இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Vivegam-First-look

மே 11: 'தல' அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
 


ஜூன் 15: நள்ளிரவு 12.01-க்கு  அஜித் நடித்து 'சிறுத்தை' சிவா இயக்கும் 'விவேகம்' படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர் வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில், 2 லட்சம் வியூக்களைத் தாண்டியது.

 


ஆகஸ்ட் 17: பல நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர்  இன்று வெளியாகியிருக்கிறது.
 

 

ஆகஸ்ட் 24: ’சிறுத்தை’ சிவா - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.  விவேகம் விமர்சனம் இங்கே!

Vivegam Movie Release

 

தொகுப்பு : விகடன் டீம்