விவேக் ஜெயராமன் | Latest tamil news about Vivek Jayaraman | VikatanPedia
Banner 1
ஜெயா டிவி சி.இ.ஓ

விவேக் ஜெயராமன்

ஜெயாராமன், இளவரசி தம்பதியின் மகன் தான் விவேக் ஜெயாராமன். இவர் “ஜாஸ்” நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். ஜெயாராமன், சசிகலாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் தனித்துவிடப்பட்ட ஜெயராமனின் மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையாக இருந்தவர் விவேக். அப்போதுதான், 'தனியா கஷ்டப்பட வேண்டாம். என்கூடவே இரு' என இளவரசியை ஜெயலலிதா அழைத்துக் கொண்டார். 

பள்ளிப் படிப்பு முடித்த விவேக், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் சென்றார். பி.பி.ஏ. ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். ஆனால், கார்டனுக்குள் வராமல் புனேவில் எம்.பி.ஏ படிப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருந்தார். எந்த இடத்திலும் ஜெயலலிதாவைப் பற்றி அவர் சொன்னதே இல்லை. தான் யார் என்பதையே காட்டிக் கொள்ளாமல்தான் வளர்ந்தார்.

எம்.பி.ஏ படிப்பு முடிந்ததும், கல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்கெட்டிங் பிரிவில் அவர் செய்த முதல் வேலை சிகரெட் விற்பனை! எந்தச் சுணக்கமும் இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பெங்களூரு ஐடிசி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்தார். 

குறிப்பிட்ட காரணுங்களுக்காக வேலையை விட்டுவிட்டு, கார்டனுக்குள் வந்த விவேக்குக்கு கொடுக்கப்பட்ட பதவி தான் ”ஜாஸ்” நிறுவனத்தின் சி.இ.ஓ

தொகுப்பு : விகடன் டீம்