பால் ஆட்லெட், தகவல் மேலாணையத்தின் முன்னோடி

Paul-Otlet

ஸ்கூல் ஆஃப் இண்ஃபர்மேசன்இது முன்பு ஸ்கூல் ஆஃப் லைப்ரரி & இன்ஃபர்மேசன் ஸ்டடீஸ் என்றிருந்தது.

மைக்கேல் பக்லேண்ட், எமிரேட்ஸ் பேராசிரியர்.

பால் ஆட்லெட், தகவல் மேலாணையத்தின் முன்னோடி

 

 

பால் ஆட்லெட் (Portrait) 1868 இல் பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியத்தில் பிறந்தார். டிரெட் டி டாகுமெண்டேஷன் அவருடைய புகழ் பெற்ற புத்தகம். பிரஸ்ஸல்ஸ், தகவல் அறிவியலுக்கு மையமாகவும், அடையாளமாகவும் திகழ்ந்த ஒரு இடம். பிறகு இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இது ”ஆவணப்படுத்தல்” என்று அழைக்கப்பட்டது. மேலும், நாம் மறந்து போன் ஒரு விஷயத்தையும் இது நினைவுபடுத்துகிறது. அதாவது, இருபதாம் நூற்றாண்டில் இந்தத் துறை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. நவீனத்துவம் பற்றிய கோட்பாடுகளும், தகவல் தொழில்நுட்பங்களும் மக்களை வியப்படைய வைத்துள்ளது.

ஆவணப்படுத்தல் துறையில் பால் ஆட்லெட் ஒரு முக்கிய நபர். பதிவு செய்யப்பட்ட ஒரு விஷயத்தை அது தேவைப்படுபவர்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அவர் பல வருடங்கள் சகிப்புத்தன்மையுடன் போராடினார். அவர் ஆழமாக சிந்தித்து, பிரஸ்ஸல்ஸில் உள்ள தனது நிறுவனத்தில் இதற்கான தீர்வையும் எழுதினார்.

அவர் தனது கருத்துக்களை சுருக்கமாக இரண்டு புத்தகங்களாக வெளியிட்டார். அவை 1934 ஆம் ஆண்டில் டிரெட் டி டாகுமெண்டேஷன் மற்றும் 1935 ஆம் ஆண்டில் எசாய் டி யுனிவர்சலைஸம். சமீபத்திய காலமாக ஆட்லெட்டின் வேலைகள் புதிப்பிக்கப்படுகின்றன. 1989 ஆம் ஆண்டில், டிரேடி, நீண்ட காலத்திற்குபின் மறுபதிப்பு செய்யப்பட்டது. 1990 ஆம் ஆண்டில், அவருடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் அவருடைய சிறந்த எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். பால் ஆட்லெட்,  International Organization and Dissemination of Knowledge: Selected Essays. (FID 684).

இப்போது ஆட்லெட்டின் கருத்துக்களும், எழுத்துக்களும் தகவல் அறிவியலுக்கு மூலப்பொருளாய் உள்ளது. நூற்றாண்டுகளுக்கு முன்தான் ஆட்லெட் மற்றும் லாஃபொன்டைன் உடைய இந்த இலட்சியத் திட்டம் ஆரம்பித்தது. அதுதான் இப்போது தகவல் மற்றும் ஆவணத்தின் சர்வதேச கூட்டமைப்பாக செயல்படுகிறது.(FID). ஆட்லெட் மற்றும் லாஃபொன்டைன் சர்வதேச சங்கம் ஒன்றை ஆரம்பிபதிலும் ஆர்வமாக இருந்தனர்.

ஆட்லெட்டின் ஆவணங்களும், அருங்காட்சியகங்களும், தற்போது,  பெல்ஜியத்தில், தி முண்டனியம் என்ற பெயரில் உள்ளன. முண்டானத்தில் , இப்போது இங்கு இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி வெளியிடத் துவங்கியுள்ளனர் , குறிப்பாக சென் அன்ட் டி லா'ஸ் இன்டர்நேஷனல் டி பிபிளோகிராஃபி: 1895 - 1995; லெஸ் பிரமிசஸ் டூ முண்டனியம் . - மோன்ஸ்: எடிஷன்ஸ் முண்டானம், 1995.

ISBN 2-930071-05-2.

பால் ஆட்லெட் பற்றிய சில நூல்கள்:

- அலெக்ஸ் ரைட்.  கேட்டலாகிங்  தி வோர்ல்டு: பால் ஆட்லெட் அண்ட் தி ப்ர்த் ஆஃப் தி இன்ஃபர்மேஷன் ஏஜ். ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், 2014.

- ஆட்லெட் ட்ரான்ஸ்லேஷன் அசோசியேஷன்ஸ் சிறப்பு வெளியிடு 2003, 1-2. பிடிஎஃப்

-பிரான்கோஸ் லெவி: எல் மம்மி குய் வொலேட் க்ளாசர் லெ மோன்ட் [ உலகத்தை வகுக்க விரும்பியவர்]. வாழ்க்கை வரலாறு மற்றும் ஆவணப்படம்.

-ரேவார்ட்டின் 1975 வாழ்க்கை வரலாறு இப்போது http://hdl.handle.net/1854/3989 இல் ஆன்லைனில் கிடைக்கிறது.

- பி. ரேவார்ட்(ஆங்கிலம்) மற்றும் எஃப். ஃபியூக் (பிரெஞ்சு) அவர்களுடைய ஆவணம். ஆல்ல் கென்னன் வான் டி எர்ல்ட் (நோடார்லிலிச், 9). http://archive.org/details/paulotlet இல் கிடைக்கும்.

-பிரான்சில் இருந்து ஒரு கருத்து: அமெரிக்கா பால் ஆட்லெட்டை கண்டுபிடிக்கும் போது.

 

Source:  http://people.ischool.berkeley.edu/~buckland/otlet.html