S6 : செமண்டிக்ஸ் அடிப்படையிலான கோட் சர்ச்
எங்களுடைய இந்த கோட் சர்ச் ப்ரொக்ராமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்னதாக உள்ள கூகுள் கோட் சர்ச், க்ரூகெல், கோடர்ஸ் அதிகமான தகவல்களைத் தந்தாலும், அவை ப்ரொக்ராமர்களின் வேலையை எளிமையாக்கவில்லை. அவை ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு நூற்றுக்கணக்கான நிரல் தகவல்களைத் தருகின்றன. ஒவ்வொரு தகவல்களுக்குள்ளும் சென்று இது தனக்கு தொடர்புடையதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்புடைய ஒன்றை கண்டபின், ப்ரோக்ராமர் அதனை நன்றாக ஆராய்ந்து தனக்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
எங்களுடைய இந்த கோட் சர்ச் ப்ரோக்ராமர்க்கு தேவையான துல்லியமான நிரல் தகவலை வழங்குவதற்கு ஒரு சிறந்த அணுகுமுறையாகும். மேலும் இது, அந்த நிரல் தகவல்களை சரி பார்க்கும், அத்தகவல்களை ப்ரோக்ராமர்க்கு தேவையானதைப் போல மாற்றியும் தரும். எங்களுடைய இந்த கோட் சர்ச், டிஸ்க்ரிப்ஷன், சிக்னேச்சர், டெஸ்ட் கேஸஸ் போன்ற பலவற்றை கீவேர்ட்ஸாக எடுத்துக் கொள்ளும். மேலும் பயனாளர் இந்த நிரல் எதற்கு பொருந்தும் என்ற சூழலையும் அதில் விளக்கலாம்.
இது கீவேர்ட்ஸை பயன்படுத்தி, தேவையான ஃபைல்களை நிரல் சர்ச் என்ஜீனில்(அல்லது அந்த இடத்திற்கு உரிய சர்ச் என்ஜீன்) இருந்து பெற்றுத்தரும். இந்த ஃபைலில் உள்ள ஒவ்வொரு மெத்தேடும், சரியான தகவல்களாக (பயனர் தேடுவதைப் பொறுத்து) கருதப்படுகிறது. பின்னர், இந்த தகவல்கள், 30 ப்ரொக்ராம்களை உபயோகித்து பயனர்க்கு தேவையான நிரலாக மாற்றித்தரப்படுகிறது. இவ்வாறு மாற்றித்தருவதில் கடினமானது முதல் எளிமையானது வரை என அனைத்தும் உள்ளது( உதாரணமாக தரப்பட்ட சிக்னேச்சர்க்கு பொருந்தக்க்கூடிய ஒரு தகவலைத் தேர்ந்தெடுப்பது). தரப்பட்ட சிக்னேச்சர்க்கு பொருந்தக்க்கூடிய ஒரு தகவல், மேலும் டெஸ்ட் கேஸஸ், JVM ரூல்ஸ் ஆகியவற்றைக் கொண்டு பரிசோதிக்கப்படும். இந்த பரிசோதைனைகளைக் கொண்டு அந்த தகவலில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படும். பரிசோதனைகளை பூர்த்தி செய்த தகவல்கள் பயனர் குறிப்பிட்ட அளவு, செயல்திறன் போன்றவற்றை பொருத்து வரிசைபடுத்தப்பட்டு, மீண்டும் பயனருக்கே அனுப்பப்படும்.
இந்த லிங்கில் இதனை நீங்கள் முயற்சி செய்து பாக்கலாம். http://conifer.cs.brown.edu/s6
பேப்பர்ஸ்:
செமன்டிக்ஸ் பேஸ்டு கோட் சர்ச், ICSE 2009, மே 2009.
ஸ்பெசிஃபையிங் வாட் டூ சர்ச் ஃபார், SUITE 2009, May 2009.
சீக்கிங் தி யூசர் இண்டர்ஃபேஸ், ASE 2014.
க்ரியேட்டிங் டெஸ்ட் கேஸஸ் யூசிங் கோட் சர்ச், வெளியிடப்படாதது.
படங்கள்:
ஃப்ரண்ட் எண்ட்:
ஃப்ரண்ட் எண்ட் காண்பிக்கும் முடிவுகள்:
வரைபடம்:

சாஃப்ட்வேர்:
இந்த சாஃப்ட்வேர் இங்கே கிடைக்கும் ftp://ftp.cs.brown.edu/u/spr/s6.tar.gz
Source : http://cs.brown.edu/~spr/research/s6.html