ஜான் பேகஸ்


இடப்பக்க புகைப்படம் [ 9 ] : தலைப்பின்படி : ஜான் பேகஸ், ஆரம்பகால  SSEC புரோகிராமர். FORTRAN (195-57)-ஐ உருவாக்கிய குழுவின் தலைவர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய பிறகு , பேகஸ் 1949ல் கொலம்பியாவின் பொதுக் கல்வியியல் கல்லூரியில் கணிதத்தில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றார் ( வருடம் தெரியவில்லையாயினும், அவர் முதுகலை பட்டத்தினையும் பெற்றிருப்பார் என்று நம்புகிறேன்). 1950 லிருந்து 1952 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஐ.பி.எம்.வாட்சன் ஆய்வகத்தில் ( Watson Lab ) பணியாற்றிய அவர் அதன்பின் ஐ.பி.எம் –ன் புரோகிராமிங் ஆய்வுக் குழுவினை முன்னெடுத்துச் சென்றார். 1963-ல் அவர் ஐ.பி.எம் குழுவின் உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார்.  FORTRAN தவிர, அவர் BNF (Backus Normal Form அல்லது Backus Naur Form - Noam chomsky கணினி மொழிகளுக்கான பொது இலக்கணம் கூறும் ஒரு செயலி) என்ற கணினி மொழிகளை விவரிக்கப் பயன்படும் ஒரு பொது கணினி மொழியினை உருவாக்கினார். Algol 60 என்ற திருத்தப்பட்ட அறிக்கையின் முதன்மை ஆசிரியராக இருந்த அவர் 1991-ல் பணி ஓய்வு பெற்றார். ஏ.சி.எம். டுரிங் விருதுச் சான்றில் (ACM Turing award)..,

“நடைமுறை உயர் மட்ட நிரலாக்க அமைப்புகளின் வடிவமைப்புக்கு  ஆழமான, முக்கியமான  மற்றும் நீடித்த பங்களிப்பிற்கு, குறிப்பாக FORTRAN –ல் தனது பணியின் மூலம், கணினி மொழிகளை முறைப்படுத்தி வெளியிட்டமைக்காக” , இந்த விருது அவருக்கு  வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

ஜான் பேகஸ் மார்ச் 17, 2007 அன்று ஓரிகோனில் மாகாணம் ஆஸ்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார்.


2004-ல் நான் அறிமுகமான பின்பு, பின்வரும் அவருடனான கடிதப் போக்குவரத்தினைக் கொண்டிருந்தேன்:

_______________________________________

Date: Wed, 31 Mar 2004, 12:06:14 EST
From: Frank da cruz <fdc@columbia.edu>
To: John Backus <jbackus1@xxxx.xxx>
Subject: Columbia university computing history

வணக்கம் ஜான், உங்களுடன் தொடர்பு கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வாட்சன் ஆய்வகத்தில் பணியாற்றிய நாள் முதல் நீங்கள் தான் அங்கு கதாநாயகன்.

நான் முதன்முதலாக 1965-ல் ராணுவத்தில் பணியாற்றிய நாட்களில் கணினிக்கும் Fortran-க்கும் அறிமுகமான பின்பு  1966ம் ஆண்டில் கொலம்பியாவிற்கு வந்தேன் . அந்த நாட்களில், வாட்சன் ஆய்வகம் ப்ளக்போர்டுகள், கார்டு டெக்ஸ்கள் மற்றும் சிறிய வயர்களால் சிதறிக்கிடந்தது. இன்னும் கூட 1940களில் யாரோ ஒருவர் பயன்படுத்திய இரும்பு மேஜை மற்றும் EAM கையேடுகள் முதற்கொண்டு இங்கு உள்ளது (என்னுடைய முதல் புரோராமிங் அனுபவம் 407).

கொலம்பியா கணினி வரலாற்றில் என்னுடைய இணைய அனுபவங்களை, பவுல் [மெக்ஜோன்ஸ்] பகிர்ந்துள்ளார்:

http://www.columbia.edu/acis/history/

இந்த  இணைப்பில் நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இது முடிவில்லாத  உப-தலைப்புகள், கருவிகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இதில் வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் இங்கு உள்ளவர்களிலேயே வயதானவன் நான் என்பதையும் அனைவரும் விரும்பக்கூடிய ஏக்கத்திற்குரியவனாக இருக்கிறேன் என்பதையும் கண்டுகொண்டேன். 

நான் எழுத ஆரம்பித்த காலங்களில் குறிப்பாக எக்கெர்ட் மற்றும் வாட்சன் ஆய்வகங்களில் பணியாற்றிய காலங்களில் எதை நினைத்தாலும் மிக ஆர்வமாக இருந்தேன். குறிப்பாக முன்னால் ராணுவ வீரர்களின், ஹெர்ப் க்ரோச்ச், எரிக் ஹான்கம், எல்லி கிராவிட்ச், கென் ச்ரீனர் மற்றும் செய்மூர் கொய்நிக் உட்பட உங்களுக்கு யாரெல்லாம் நியாபகம் இருக்கிறதோ ,( மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பில் உள்ளவர்கள்)  மற்றும் நீங்கள் அங்கிருந்து சென்ற ஆண்டுமுதல் அங்கு வந்தவர்கள் என அனைவருடைய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பெறத் தொடங்கிய நாட்களில் நான் மிக ஆர்வமாக இருந்தேன். எரிக் இன்னும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். எல்லி நியூயார்க்கிலும், ஹெர்ப் டொராண்டோ பல்கலைக்கழகத்திலும் உள்ளனர்.

உலகின் மற்ற பகுதிகளுக்கு இருப்பதுபோல் அல்லாமல் கொலம்பியாவிற்கென்று ஒரு தனி வரலாறு உள்ளது. கொலம்பியாவில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தெரியாத ஒன்று அது. கொலம்பியா இந்த ஆண்டு 250வது ஆண்டுவிழா கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கான தற்கால கணினி வரலாற்று ஆசிரியராக நான் மாறிவிட்டேன். அதற்கான தகவல்களை  C250 இணையதளத்திலிருந்து பெறுகிறேன் :

http://www.columbia.edu/c250/

உதாரணமாக: ‘ஹோல்லேரித்’ என்பது “கொலம்பியர்களுக்கு முன்பு இருந்த அவர்களின் காலகட்டம்” .

http://www.columbia.edu/acis/history/ssec.html

சரி, இந்த கடிதம் மிக நீளமாக செல்வதை நான் விரும்பவில்லை.  இத்துடன் உங்களிடமிருந்து மகிழ்ச்சியான விஷயங்களைப் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கிறேன். எனக்கு இங்கே மிக இழிவானதொரு  வாழ்க்கை குறிப்பு உள்ளது:

http://www.columbia.edu/acis/history/backus.html

மேலும் வாலஸ் எக்கெர்டினைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு ஏதேனும் இருப்பின், நான் அவற்றை அவரின் சுயவிவரத்தில் சேர்க்கலாம்:

http://www.columbia.edu/acis/history/eckert.html

நன்றி..!

-பிரான்க்

Frank da Cruz
The Kermit Project
Columbia University
612 West 115th street
New york NY 10025-7799
USA.

_____________________________________________________

Date: Sun, 11 Jul 2004 15:00:37 -0400 (EDT)
From: Frank da Cruz <fdc@columbia.edu>
To: “John Backus” <jbackus1@xxxxxxx.xxx>
cc: “Dr.Herbert  R.J. Grosch” <hgrosch@xxxxxxx.xxx>
Subject: Columbia Computing History (again)

வணக்கம் ஜான், உங்களை மீண்டும் தொடர்பு கொள்வதற்கு ஹெர்ப் என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் செய்தியில் சேர்ப்பதற்கு என்னிடம் நிறைய இல்லை. அப்போதிலிருந்து தோண்டி எடுத்து சில விஷயங்களை சேகரித்துள்ளேன் :

http://www.columbia.edu/acis/history/navalobservatory.html

http://www.columbia.edu/acis/history/almanac.html

http://www.columbia.edu/acis/history/tableprinter.html

இந்த விஷயங்கள் அனைத்தும் கொலம்பியாவோடு எக்கெர்ட் சம்மந்த்தப்பட்டவையாக இல்லையாயினும் கூட, போருடன் நான் சம்மந்தப்பட்டவனாக இருந்தேன். என் பெற்றோர் இருவரும் போரில் ஈடுபட்டது கூட காரணமாக இருக்கலாம். என்னுடைய சிறிய நூலகத்தின் புத்தக  அலமாரியில் போர்கால ஏர் அல்மனக்ஸ்கின் புத்தகம் கூட இருக்கிறது. 

நான் இப்போது இணையத்தில் பேகஸ் பொருள் மூலம் பார்த்து சில சமாசாரங்களைக் கவனித்தேன்:

    * நீங்கள் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்கு முன்னரே ராணுவத்தில் சேர்ந்தது விட்டீர்கள். நானும் தான் .

    * இராணுவத்தில் சில தொழிற்முறை பயிற்சி பெற்றுள்ளீர்கள். நானும் தான்.

    * ராணுவத்திற்குப் பிறகு கொலம்பியா சென்றுவிட்டீர்கள். நானும் தான்.

    * உங்களது இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை கொலம்பியாவில் பெற்றீர்கள். நானும் தான்.

உங்களைப் போலவே, எதிர்பாராத வேலை எனக்கும் கணினித் துறையில் கிடைத்துவிட்டது. வயதும் 35 ஆகிவிட்டது.  உங்களைப் போலவே ராணுவ அனுபவத்தினைக் கொண்ட எரிக் ஹான்கம், தனது மொத்த வாழ்க்கையையும் பள்ளிக்கூடத்தில் கழித்தார். என்னிடம் அவருடைய சுயசரிதை உள்ளது:

http://www.columbia.edu/acis/history/hankam.html

எப்படியோ, உங்களைப் பற்றிய விவரங்களை உங்களுடைய நியாபகத்தின் மூலமாகவோ, கொலம்பியாவில் இருக்கும்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் மூலமாகவோ தந்தால் நான் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன். என்னுடைய சிறிய பேகஸ் சரிதை :

http://www.columbia.edu/acis/history/beckus.html

வாட்சன் ஆய்வகத்தில் உங்களுடைய முக்கியமான  வேலை SSEC ஆக தான் இருக்கும் என நினைக்கிறேன். அதைப் பற்றி நான் வைத்திருப்பவை:

http://www.columbia.edu/acis/history/ssec.html

நான் அதை பின்வரும் வகையில் முடித்துள்ளேன்: SSEC தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட புரோக்ராம் கணினியா?.  இதைப் பற்றிய உங்களுடைய பதில்களைக் கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன். வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தில்  SSEC நினைவுச்சின்னத்தைப் பற்றிய பெரிய புதையலே உள்ளது:

http://www.lib.ncsu.edu/archives/collections/pdf/brooke_mc268.pdf

அதை அணுக ஒரே வழி, அது அந்த நபரின் வசம்தான் உள்ளது.

நன்றி!

-பிரான்க் 

_______________________________________________________

From: “john beckus” <jbackus1@xxxxxxx.xxx>
To: “’Frank da Cruz”’  <fdc@columbia.edu>
Cc: “’Dr.Herbert.R.J.Grosch”’  <hgrosch@xxxxxxx.xxx>
Subject: RE: Columbia computing History (again)
Date: Sun, 11 Jul 2004 14:26:03 -0700

 

வணக்கம் பிரான்க்,

உங்களுடைய முந்தைய ஈமெயிலிற்கு பதில் அனுப்பாததற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மனைவி இறந்த அன்று அந்த ஈமெயில் வந்தது, அன்று செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருந்ததால் என்னால் பதில் அனுப்ப முடியவில்லை. சொல்லப்போனால் என் மனைவி கடைசி ஏழு வருடங்களாக மெனக்கெட்ட புத்தகத்தின், திருத்தம் மற்றும் அதன் வெளியீட்டு வேளைகளில் பிஸியாக உள்ளேன்.

நீங்கள் ஆன்லைனில் முன்வைக்கும் பரந்த பொருளின் ஒரு சிறிய பகுதியை மட்டும்தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மிகச் சிறிய விஷயங்களைப் பற்றிய உங்கள் விளக்கங்கள் என்னை ஆச்சர்யமடைய செய்தது. நீங்கள் கொடுத்துள்ள எல்லா உப இணைப்புகளைப் படிப்பதற்கு என்னுடைய மொத்தப் பொழுதினையும் செலவழிக்க வேண்டும் போல் இருக்கிறது.

நம் இருவரின் முந்தைய நாட்களின் பாதை ஒன்றுபோல் இருப்பதை நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது. கொலம்பியாவில் என்னுடைய வேலைக்கு ஜி.ஐ.மசோதாவால் நிதியளிக்கப்பட்டது. கணிதத்தில் நான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்.

மிகக்குறைவான நேரத்தை மட்டுமே வாட்சன் ஆய்வகத்தில் நான் செலவழித்திருக்கிறேன். ஆனால் SSECல் என் பங்களிப்பை ஆசையோடு நினைத்துப்பார்க்கிறேன். உங்களுக்கு சில வகைகளில் நான் உதவ முடியும் என்று நம்புகிறேன்.

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் போதவில்லை. நாம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும். எப்போது பேசட்டும்?

-ஜான்

___________________________________________________

Date: Mon, 12 Jul 2004 12:44:27 EDT
From: “’Frank da Cruz”’  <fdc@columbia.edu>
To: “john beckus” <jbackus1@xxxxxxx.xxx>
Cc: “’Dr.Herbert.R.J.Grosch”’  <hgrosch@xxxxxxx.xxx>
Subject: RE: Columbia computing History (again)

> உங்களுடைய முந்தைய ஈமெயிலிற்கு பதில் அனுப்பாததற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மனைவி இறந்த அன்று அந்த ஈமெயில் வந்தது, அன்று செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருந்ததால் என்னால் பதில் அனுப்ப முடியவில்லை

> இந்த மாதிரியான ஒரு  இக்கட்டான சூழ்நிலையினை என்னால் உணர முடிகிறது. மன்னிக்கவும். கணினி ஏக்கம் என்பது அத்துமீறலாகும்.

> சொல்லப்போனால் என் மனைவி கடைசி ஏழு வருடங்கள் மெனக்கெட்ட புத்தகத்தின் திருத்தம் மற்றும் அதன் வெளியீட்டு வேளைகளில் பிஸியாக உள்ளேன்

> அது கடினமான வேலை தான். அது எதைப்பற்றி என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

>நீங்கள் ஆன்லைனில் முன்வைக்கும் பரந்த பொருளின் ஒரு சிறிய பகுதியை மட்டும்தான் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. மிகச் சிறிய விஷயங்களைப் பற்றிய உங்கள் விளக்கங்கள் என்னை ஆச்சர்யமடைய செய்தது. நீங்கள் கொடுத்துள்ள எல்லா உப இணைப்புகளைப் படிப்பதற்கு என்னுடைய மொத்தப் பொழுதினையும் செலவழிக்க வேண்டும் போல் இருக்கிறது

உங்கள் அன்பிற்கு நன்றி. கணினி உருவாக்கப்பட்ட காலங்களில் அது ஆராய்ச்சியாளர்களின் சில தீவிரமான சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பயன்பட்டது. ஆனால் இப்போதோ வீட்டின் பொழுதுபோக்கு அம்சமாகவும், ஷாப்பிங் சாதனமாகவும் மாறிவிட்டது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

எனக்கு அதில் பிடித்த அம்சம் என்னவென்றால், அதன் கவர்ச்சிதான். இணையத் தேடலில் இருக்கும்போது வேறு சில தளங்கள் தீடீரென தோன்றும். அதைப்பற்றி சிலர் எழுதுவார்கள். இவ்வாறுதான் இது வளர்ந்தது. இதன்மூலம் நீண்ட கால சகாக்களோடு தொடர்பில் இருந்ததும் எனக்கு மழிச்சியைத் தந்தது.

> கொலம்பியாவில் என்னுடைய வேலைக்கு ஜி.ஐ.மசோதாவால் நிதியளிக்கப்பட்டது. கணிதத்தில் நான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன் 

ஜி.ஐ.மசோதா அற்புதமான ஒன்று. அதுமட்டும் இல்லையென்றால் போருக்குப் பின்பு என் பெற்றோர் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. நான் சமூகவியலைக் கற்றிருந்ததால் இந்த உலகத்தை காப்பாற்ற உங்களுக்கு யாரும் பணம் தர மாட்டர்கள் என்பதை அறிந்திருந்தேன்.  அதனால்  டாக்ஸி ஓட்டுனர் முதல் பல வேலைகள் செய்து சிரமப்பட்டு கொலம்பியா பொறியியல் பள்ளியின் இயற்பியல் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பேராசிரியர்கள் சிலர் தங்களது சிறகுகளுக்குக் கீழ் என்னை அரவணைத்தனர். சில புரோக்ராம்மிங் பணிகளைக் கொடுத்தனர் – FORTRANல் உட்பட. மேலும் என்னை பட்டப்படிப்பு பெறுவதற்கு ஊக்கப்படுத்தினர். இறுதியில், நான் பட்டம் பெற்றேன்,  கணினி மையத்தில் பணியமர்த்தப்பட்டேன்.  இதுவரை இங்கு நான் பணியாற்றி வருகிறேன். இதனால்தான் என் குழந்தைகளை கொலம்பியாவில் என்னுடன் வைத்திருக்க முடிகிறது. ஆதலால் என்னால் அதைப்பற்றி புகார் செய்ய முடியாது.

> மிகக்குறைவான நேரத்தை மட்டுமே வாட்சன் ஆய்வகத்தில் நான் செலவழித்திருக்கிறேன். ஆனால் SSECல் என் பங்களிப்பை ஆசையோடு நினைத்துப்பார்க்கிறேன். உங்களுக்கு சில வகைகளில் நான் உதவ முடியும் என்று நம்புகிறேன்

> ஆமாம், உங்களால் முடியும் :-)

> சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் போதவில்லை. நாம் தொலைபேசியில் பேசினால் நன்றாக இருக்கும். எப்போது பேசட்டும்?

9 மணியிலிருந்து 1 மணி வரை அல்லது 2 மணியிலிருந்து 6 மணிவரைக்கும் எந்த நேரம் வேண்டுமானாலும் பேசலாம். வியாழக்கிழமை மதியம் தவிர, ஏனென்றால் அந்த நேரம் நான் பல்மருத்துவமனையில் இருப்பேன்.

 1 xxx xxx-xxxx

என்னைத் தொடர்பு கொண்டமைக்கு நன்றி !

-பிரான்க் 

(அதற்குப்பின்பு அவரிடமிருந்து எனக்கு எந்த தொடர்பும் இல்லை)

2017ல், வாட்சன் ஆய்வகத்தில் 1940-50களில் இருந்த எலீனோர் கோல்சின் ( க்ராவிட்ஸ் ) கூறுகிறார், “ எனக்கு பேகஸை நன்றாகத் தெரியும். FORTRAN -ஐ விரிவாக்கும் பணியில்தான் நானும் வேலை பார்த்தேன்.... கண்களை மூடி என்னால் அவரைப் பார்க்க முடிகிறது.   வாட்சன் ஆய்வகத்தில் முதன்முதலாக FORTRAN-ஐ பயன்படுத்தியது நாங்கள் தான். 612 W 166 வது தெருவில் அந்தஅளவிற்கு மக்கள்கூட்டம் இல்லாத காலத்தில் எல்லா கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் நாங்கள் விருந்து வைப்போம்... ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நன்றாக தெரியும். நான் SSEC யிலும் சில காலங்கள் வேலை செய்திருக்கிறேன். வேறு கிரகங்களின் சுற்றுவட்டப் பாதையினைக் கணித்திருக்கிறோம்.... SSECல் ஒரு வேலை சென்றுகொண்டிருக்கும் போதே, எனக்கு வாட்சன் ஆய்வகத்தின் கணினியை சோதிக்கும் வேலையும் சென்றுகொண்டிருக்கும். வாட்சன் ஆய்வகத்திலேயே வேலை செய்யவேண்டும் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. காரணம் அப்போது நான் கொலம்பியாவில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தேன்”.   (email , April 7, 2017)

__________________________________________

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்புகள்:

     * Backus, John W., "The IBM 701 Speedcoding System", IBM, New York (10 Sep 1953), 4pp.

    * Backus, John W., "The IBM Speedcoding System", The Journal of the Association for Computing Machinery, Vol.1 No.1 (Jan 1954), pp.4-6.

    * Backus, John W., and Harlan Herrick, "IBM 701 Speedcoding and Other Automatic Programming Systems", Symposium on Automatic Programming for Digital Computers, Office of Technical Services, US Dept of Commerce, Washington DC (May 1954), pp.106-113.

    * Specifications for the IBM Mathematical FORmula TRANslating System, FORTRAN, IBM Applied Science Division, New York (10 Nov 1954), 43pp.

    * Amdahl, G.M, and J.W. Backus, The System Design of the IBM Type 704, IBM Engineering Laboratory, Poughkeepsie NY (1955), 11pp.

    * Backus, J.W., et al., The FORTRAN Automatic Coding System, Proceedings of the Western Joint Computing Conference 1957, pp.188-198.

    * Backus, J.W., The Syntax and Semantics of the Proposed International Algebraic Language of Zürich ACM-GAMM Conference, Proceedings of the International Conference on Information Processing, UNESCO, 1959, pp.125-132.

    * J.W. Backus, et al., and P. Naur (ed.), Revised Report on the Algorithmic Language ALGOL 60, CACM, Vol. 6, p. 1; The Computer Journal, Vol. 9, p. 349; Num. Math., Vol. 4, p. 420. (1963)

    * J.W. Backus, "The History of Fortran I, II, and III", Annals of the History of Computing, Vol.1 No.1 (July-September 1979).

குறிப்புகள்:

    * Brennan, Jean Ford, The IBM Watson Laboratory at Columbia University - A History, IBM (1971)

    * Shasha, Dennis, and Cathy Lazere, Out of Their Minds: the lives and discoveries of 15 great computer scientists, Copernicus / Springer-Verlag, New York (1995), ISBN: 0-387-97992-1.

    * Papers of John W. Backus 1954-1994, US Library of Congress, 2,540 items.

Fortran மற்றும் Algol குறிப்புகள்:

    * "Preliminary Report, Programming Research Group, Applied Science Division, International Busines Machines Corporation, November 10, 1954, Specifications for The IBM Mathematical FORmula TRANslating System, FORTRAN", in Carr. John W. and Norman R. Scott, editors, Notes: Special Summer Conference on Digital Computers and Data Processors, University of Michigan, College of Engineering (Summer 1955).

    * IBM 704 Fortran Programmer's Reference Manual (15 Oct 1956).

    * IBM 704 Fortran Programmer's Primer (1957)

    * IEEE Annals of the History of Computing, Special Issue, "FORTRAN's Twenty-Fifth Anniversay", vol.6 No.1 (January 1984).

    * Ekman, Torgil, and Carl-Erik Fröberg, Introduction to Algol Programming (Lärobok i ALGOL), Studentlitteratur, Lund, Sweden (1964) and Oxford University Press, London (1967).

இணைப்புகள் (4 September 2012 வரை நன்றாக இருக்கிறது):

   Croatian translation of this page (Jovana Milutinovich, September 2012).

    * John Backus Oral History Interview, Computer History Museum, September 5, 2005.

    * John W. Backus, René Gabrels, Dirk Gerrits, Peter Kooijmans, Technische Universiteit Eindhoven, May 2007.

    * History of FORTRAN and FORTRAN II, Paul McJones (ed.), Computer History Museum.

    * The IBM SSEC

    * Early FORTRAN Days (Bob Bemer)

    * Revised Report on the Algorithmic Language Algol 60 by J.W. Backus, P. Naur, et al.

    * Backus Normal Form vs. Backus Naur Form (Kelly Morrison)

Obituary:

    * New York Times, Business Section, March 20, 2007.


மொழிபெயர்ப்பு:  ஜெயசுப்பிரமணியன்.வெ (மாணவப் பத்திரிகையாளர்)

Source : http://www.columbia.edu/cu/computinghistory/backus.html