நட்சத்திரங்களின் வாழ்வும் மரணமும்!


அறிமுகம்


(Token Beauty Photo)

 

நான் கற்றுக்கொண்ட வானியலாளரை கேட்டபோது,
சான்றுகளும் புள்ளிவிவரங்களும் எனக்கு முன் பத்திககளாக இருந்தபோது,
எனக்கு வரைபடங்களும் விளக்கப்படங்களும் காட்டப்படும் போது, அவற்றைச் சேர்த்து, பிரித்து, அளந்து
பெரும் கைதட்டல்களுக்கிடையே வகுப்பெடுத்துக் கொண்டிருந்த
அந்த வானியலாளரின் விரிவுரையை அமர்ந்து கேட்டபோது
எவ்வளவு சீக்கிரமாக நான் சோர்வாகவும் நோய்வாய்ப்பட்டவனாகவும் இருந்தேன்,
நான் எழுந்து நின்று, அலைந்து திரிந்தேன் 
மாய ஈரமான இரவு காற்று,
மற்றும் அவ்வப்போது
மிக மௌனமாக வானில் வின்மீன்களைப் பார்க்கிறேன்.

- வால்ட் விட்மேன்

 

 

வானிலை குறித்த தகவல்களை இணையதளங்களில் புரட்டுவோர்க்கு திரு.விட்மன் அவர்களின் நெருக்கடிநிலை குறித்து தெரிந்திருக்காது. காரணம் இணையதளங்களில் உலா வரும் அனேக ஆஹா, ஓஹோ ரக தகவல்களும் கண்கவர் புகைப்படங்களும் கத்துக்குட்டிகளுக்கு  தேவைப்படுவதாக மட்டுமே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கல்லூரி அளவிலான குறிப்புகளும் கணிதத்தீர்வுகளும்கூட கிடைக்கும்.

நான் 1989-ம் ஆண்டுமுதல் நார்த்வெர்ஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் ஆசிரியராக இருக்கிறேன். தற்போது இணையதளங்களிலும் பாடம் நடத்த விரும்பினேன். இந்த பக்கத்தில் நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெளிவாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் இது போகிற போக்கில் மேலோட்டமாக பார்ப்பதற்கல்ல மாறாக முழுமையாக படிப்பதற்கு உகந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை படித்தால் மட்டுமே பொருளின் சுவையை உணர முடியும். நான் ஒரு ஆசிரியர். கேள்வி-பதில் நிகழ்ச்சி தொகுப்பாளன் அல்ல. நீங்கள் மேம்போக்காக எழுத்துக்களை நோட்டமிடலாம் அல்லது தகவல்களின் பொருள் உணரலாம். விருப்பம் உங்களுடையது.

இந்த பக்கம் மூலம் எளிமைக்கும் எளிதாக்கப்பட்டதற்கும் மிகப்பெரும் வித்தியாசத்தை உணர்த்தியிருக்கிறேன். மேலும் வழக்கத்தில் இல்லாத பல்வேறு விடயங்களை பயன்படுத்தாமல் இருக்க பெரும் முயற்சி மேற்கொண்டேன். ஏனெனில் அவ்விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை. எளிதாக்கப்படுவது நன்றெனினும் அவை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுமாயின், நான் விரிவாகவே கூறுவேன். கூறியிருக்கிறேன்.

சரி, சற்று வான் இயற்பியல் குறித்து பேசுவோம். முதல் பக்கத்திற்கு செல்ல

டேவிட் டெய்லர்
எவான்ஸ்டன், IL
ஜூன், 2012

d-taylor2@northwestern.edu

 

மொழிபெயர்ப்பு : ச.நூருல் இஸ்லாம் (மாணவப் பத்திரிகையாளர்)

Source : http://faculty.wcas.northwestern.edu/~infocom/The%20Website/index.html