FrontPage 2003 – அடிப்படைகள்
தொடங்குவது:
ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் அதன் உள்ளடக்கம் மற்றும் அதன் வலைத்தளத்தில் அதன் முகவரி குறித்தும் விவரிக்குமாறு ஒரு தலைப்பு இருத்தல் வேண்டும். குறிப்புச்சொற்களாக இவை இருத்தல் கூடாது. (எ.டு) – IUSON X100 INTRODUCTION TO EVERYTHING NURSING இத்தலைப்பில், வலைமுகவரி, அறிமுகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
1. ‘மெனு’வில் இருந்து file ஐத் தேர்வு செய்து propertiesஐச் சொடுக்கவும்.
2. ‘New Page 1’ என்பதற்குப் பதிலாக, உங்களுடைய தலைப்பை எழுதி ‘OK’ஐச் சொடுக்கவும்.
நிறங்களைத் தேர்வு செய்தல் :
Frontpageக்கு என்றே தனியாக உள்ள தீம்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அவை கூடுதலாகக் கோப்புகளை உருவாக்கிப் புதிதாக வலைத்தளம் உருவாக்குபவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.
இயல்பாக, மாற்றங்கள் எதுவும் நிகழாத பட்சத்தில், பின்னணி நிறம் வெள்ளையாகவும், எழுத்துருக்கள் கருப்பு நிறத்திலும், மீத்தொடுப்பு(hyperlink) நீல நிறத்திலும், ஏற்கனவே கண்ட மீத்தொடுப்புகள் ஊதா நிறத்திலும் இருக்கும். நீங்கள் வேறு நிறங்களையும் தேர்வு செய்யலாம்.
1. மெனுவில் இருந்து FORMATஐத் தேர்வு செய்யவும். அதில் Backgroundஐச் சொடுக்கவும்.
2. புதிய நிறங்களைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மாறிலிக்கும் வலதில் உள்ள optionஐத் தேர்வு செய்யவும். வலைத்தளத்துக்கென்றே உள்ள அடிப்படை நிறங்களையும் தேர்வு செய்யலாம். அல்லது, more colorsஐத் தேர்வு செய்து முற்றிலும் புதுமையான நிறங்களையும் தேர்வு செய்யலாம். எழுத்துருக்கள், மீத்தொடுப்புகள், ஏற்கனவே கண்ட மீத்தொடுப்புகள் ஆகிய அனைத்திற்கும் வெவ்வேறு நிறங்களைத் தேர்வு செய்வது அவசியம்.
பின்னணியில் உள்ள நிறங்களில் இரண்டு படிமங்களுக்கு மேல் தேர்வு செய்ய வேண்டாம்.
உங்கள் வலைப்பக்கத்திற்கு எழுத்துருக்களின் பின்னணியில் வண்ணங்கள் குறித்த அமைப்புகளையோ படிமங்களையோ வைத்திருத்தல் wallpaper எனப்படும். உங்கள் வலைப்பக்கத்திற்குக் குறிப்பிட்ட wallpaperஐத் தேர்வு செய்ய menuவிற்குச் செல்லவும்.
1. FORMATஇல் BACKGROUNDஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. browse ஐச் சொடுக்கி, உங்கள் wallpaperஐச் சேமித்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று, உங்கள் கோப்பைத் தேர்ந்தெடுத்து okஐச் சொடுக்கவும். உங்கள் வலைப்பக்கத்தின் பின்னணி மாறுவதற்கு அனுமதி அளிக்கவும்.
Frontpage உங்களுக்கு ஒரே நேரத்தில் பின்னணி நிறத்தையும், wallpaperஐயும் வைத்துக்கொள்ள அனுமதி அளித்தாலும், பின்னணி நிறம் என்பது wallpaperக்குப் பின்புறமே இருக்கும் என்பதை அறிக.
Toolbar :
toolbar என்று குறிப்பிடப்பட்டுள்ள இவற்றில் நமக்குத் தேவையான கருவிகள் உண்டு என்றறிக.
எழுத்துருக்கள்(Fonts) :
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் பயன்படுத்தியுள்ள எழுத்துருக்கள் உங்களுடைய வாசகர்களின் கணினிகளிலும் தரவிறக்கம் செய்யப்பட்டு இருந்தால்தான், அவர்களால் உங்கள் வலைபக்கத்தைப் பயன்படுத்த இயலும். எனவே, பொதுவாகப் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களைப் பயன்படுத்துவது அவசியம். வலைப்பக்கத்திற்கு verdana எனும் எழுத்துருவைப் பயன்படுத்துவது நன்று. arial மற்றும் comic sans ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். arial என்பது verdanaவை விடச் சிறியது ஆகும். comic sans சற்று அழகாக இருக்கும்.
bold மற்றும் italics ஆகியவை நமது எழுத்துருக்களை மாற்றம் செய்யப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் வலைப்பக்கங்களில் மீத்தொடுப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டப்படுவதால், நாம் நம்முடைய எழுத்துருக்களை அடிக்கோடிடுவதைத் தவிர்க்கலாம். கூடுதலாக எழுத்துருக்களில் மாற்றம் செய்ய superscript அல்லது subscript ஆகியவற்றை FORMATஇல் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
Bullets மற்றும் எண்கள்:
உங்கள் பத்தியில் புல்லடின்கள் மற்றும் எண்களைப் புகுத்த,
1. எங்கு உங்களுக்கு தேவைப்படுகிறதோ அங்கு உங்கள் கர்சரை வைக்கவும்.
2. Number and bullet tool ஐத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தேவயானவற்றைத் தட்டச்சு செய்தி, உங்கள் விசைப்பலகையில் enterஐ அழுத்தவும்.
உங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்படும் பத்தியில் எங்கள் தேவைப்படவில்லை என்றால், மீண்டும் tool barகுச் சென்று, சேவையை நிறுத்திவிடவும்.
உங்களுடைய புல்லட்டின் அல்லது எண்களின் உருவத்தை மாற்ற வேண்டும் என்ற நீங்கள் நினைத்தால்( எ.டு வட்டமாக, சதுரமாக, அல்லது superscript subscript போன்றவை) மெனுவில் formatஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதில், உங்கள் புல்லட்டின்களின் உருவங்களை மாற்றுவதும் அடங்கும். புல்லட்டின்களில் நீங்கள் படம் இடம் ஒஏற நினைத்தால், நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்த படங்ககைப் பயன்படுத்தலாம். browseஐச் சொடுக்கி, உங்களுக்குத் தேவையான படத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வரிகளை உள்ளே தள்ளுதல் :
வரிகளை உள்ளே தள்ளிச் சமன் செய்யும் indent tool, உங்களுடைய பக்கத்தின் இரண்டு எல்லைக்கோட்டையும் மாற்றுவதற்கு வல்லது.
வரிகளுக்கு இடையே ஒற்றை வெற்றிடம் உருவாக்குதல் :
நீங்கள் விசைப்பலகையில் <Enter>ஐ அழுத்தும்போது, இரட்டை வெற்றிடம் உருவாகும். இதனைத் தவிர்க்க, நீங்கள் <Shift>ஐ அழுத்திக்கொண்டே <Enter>ஐச் சொடுக்க வேண்டும். முக்கியமாக, நீங்கள் உங்கள் வலைப்பக்கதிற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கும்போது, உங்கள் பத்திகளில் நீங்கள் சரியான இடத்தில் வெற்றிடம் இடுவது அவசியம் ஆகும். ஏனெனில், நீங்கள் ஒரு இடத்தில் இடும் வேற்றிடம், உங்கள் வாசகருக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். உங்களுடைய வரிகளில் முகவரி, அல்லது பல வரி கொண்ட தலைப்புக்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தால் அவற்றை மாற்றம் செய்வதும் அவசியமாகும்.
எழுத்துருவின் நிறம் :
உங்கள் மொத்தக் கோப்பிற்கும் நீங்கள் இயல்பான நிறங்களையே தேர்ந்தெடுத்தாலும் நீங்கள் முன்னிலைப்படுத்த விரும்பும் நிறங்களுக்கு நீங்கள் வேறு நிறங்களைக் கொடுக்கலாம். ‘A’ எனும் எழுத்தை நீங்கள் உங்கள் toolbarஇல் உள்ள colortoolஇல் காணலாம். அதில் உங்களுக்கு விருப்பமான் நிறத்தைத் தேர்வு செய்யலாம்.
நீங்கலாக விரும்பி உங்கள் வரிகளுக்கு நிறங்களைத் தேர்வு செய்யும் பட்சத்தில், அவை, இயல்பாக உள்ள நிறங்களை மீறிச் செல்வதற்கு வாப்பு இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் பத்தியில் குறிப்பிட்ட மீத்தொடுப்புகள் மற்றும் ஏற்கனவே கண்ட மீத்டோடுப்புகள் ஆகியவை தங்களது நிறக்குறியீடுகளை இழப்பதால், அவற்றின் முக்கியத்துவம் உங்கள் வாசகருக்கு அறியாமல் போய்விடும் வாய்ப்பும் இருக்கின்றது.
மீத்தொடுப்புகள் :
உங்கள் பத்தியின் சில இடங்களை சொடுக்கினால், அது உங்கள் வாசகர்களை வலையின் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
1. முதலில் உங்கள் மீத்தொடுப்பைத் தட்டச்சு செய்யவும்
2. உங்கள் வரியை முன்னிலைப்படுத்தவும்.
3. Hyperlink tool ஐச் சொடுக்கவும்.
Hyperlink dialog boxஇல்
1. வேறொரு வலைத்தள முகவரிக்கு அழைத்துச் செல்ல, அந்த dialog box இல் முழுமையான URLஐத் தட்டச்சு செய்யவும்.
2. உங்கள் வலைத்தளத்திற்கு உள்ளேயே வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் கொப்பிற்குச் செல்லவும்; ( look in பெட்டிக்குக் வலது புறத்தில் கீழே இருக்கும் அம்புக்குறியையோ அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் fileஐயோ நீங்கள் சொடுக்குவதன் மூல, நீங்கள் விரும்பும் கொப்பிற்குச் செல்லலாம் )
3. மின்னஞ்சலுக்குத் தேவையான மீத்தொடுப்பை உருவாக்க, hyperlink dialog boxஇற்குக் கீழே இடது புறத்தில் இருக்கும் மின்னஞ்சல் சின்னத்தைச் சொடுக்கி, அங்கே முழுமையான மின்னஞ்சலைத் தட்டச்சு செய்யவும்.
4. ok ஐச் சொடுக்கவும்
உங்கள் மீத்தொடுப்பைச் சரி செய்ய, உங்கள் மீத்தொடுப்பைச் சொடுக்கிய பின்பு, hyperlink dialog boxஇல் edit/remove ஆகியவற்றைச் சொடுக்கவும்.
ஆயத்தப்படம்(clip art)
1. உங்கள் வலைப்பக்கத்திற்குள் நீங்கள் ஆயத்தப்படதைக் கொண்டு வர, உங்களுக்கு எங்கே தேவையோ அங்கு உங்கள் சுட்டியை( cursor) ஐ வைக்கவும். பின்பு, menu > insert > picture > clip art என்று தேர்வு செய்யவும்.
2. உங்களுக்கு எந்த ஆயத்தப்படம் தேவையோ, அதைச் சொடுக்கி உங்கள் வலைப்பக்கத்தில் சேர்க்கவும்.
3. கவனிக்க : உங்கள் ஆயத்தப்படம் வலைத்தளத்தால் அங்கீகரிக்கப்படும் வடிவில் இருத்தல் வேண்டும். இது, உங்கள் ஆயத்தப்படக் கோப்பில் உள்ள படங்களுக்குப் பொருந்தாது. உங்கள் படம் வலைத்தளத்தால் அங்கீகரிக்கப்படாவிடில், உங்கள் வாசகர்களால் உங்கள் படத்தைக் காண இயலாது.
4. உங்கள் ஆயத்தப்படத்திற்கு handles இருக்கும் வண்ணம் இன்னொரு முறை சொடுக்கவும் (உங்கள் படத்திற்கு நாற்புறமும் கருப்பு வண்ணத்தில் சதுரங்கள்’ தோன்றும் )
5. சுட்டியில் வலது பக்கம் சொடுக்கவும். pop up menu > picture properties > general tab > picture file type > ok ஆகியவற்றைச் சொடுக்கவும்.
உங்கள் ஒரே ஆயத்தப்படத்தின் பல நகல்ல்கள் வருவதைத் தடுக்க, உங்கள் ஆயத்தப்படத்தின் கோப்புப் பெயரை மாற்றி வேறொரு பெயரில் வைத்துப் பின்பு அதனைப் பயன்படுத்தவும்.
படங்கள் :
ஆயத்தப்படங்கள் அல்லாத மற்ற படங்களுக்கு, உங்கள் வலைப்பக்கத்தில் menu > insert > picture > from file ( locate and select ) > ok ஆகியவற்றித் தேர்வு செய்யவும்.
உங்கள் படத்தின் வடிவத்தைப் பெரிய அளவில் மாற்ற வலைப்பக்கத்தில் முயலவேண்டாம். அத்தகைய மாற்றங்கள் படத்தைத் தரவிறக்கம் செய்வதற்கும், அதன் நேர்த்திக்கும் பிரச்சனை விளைவிக்கும். படங்களைச் சரி செய்வதற்கென்றே இருக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தவும்.
பயன்பாட்டில் இருக்கும் கோப்புகளைப் பயன்படுத்துதல் :
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கோப்புகளை நீங்கள் மீண்டும் உங்கள் வலைப்பக்கத்தில் பயன்படுத்த இயலும். நீங்கள் மீண்டும் முழுமையாக அவற்றைத் தட்டச்சு செய்ய வேண்டாம். Insert > file ஆகியவற்றைத் தேர்வு செய்து, உங்களுக்குத் தேவையான கோப்பினைத் தேர்வு செய்தால், உங்கள் வலைப்பக்கத்தில் உங்கள் கோப்பு html வடிவில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். நீங்கள் வடிவத்தில் சிற்சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால், உங்களுக்கு உங்கள் எழுத்துருக்கள் வலைப்பக்கத்தில் அங்கீகரிக்கப்படாவிடில், உங்கள் கோப்பினை rtf( rich text format) இற்கு மாற்றி பின்பு பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் rtfஐ save as > file format இல் காணலாம்.
சேமித்தாலும், வெளியேறுவதும் :
நீங்கள் உங்கள் frontpage கோப்பில் இருந்து வெளியேறும்போது file > save / save as ஐத் தேர்வு செய்யவும். நீங்கள் முதல்முறையாக உங்கள் கோப்பினைச் சேமிக்கும்போது, சரியான இடத்தினைத் தேர்வு செய்யச் சொல்லி உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் முன்பே தேர்வு செய்த html படங்கள் தவிர்த்து, புதிதாக நீங்கள் வலைப்பக்கத்திற்குக் கொண்டு வந்த ஆயத்தப்படங்களைச் சரியான வடிவில் வலைப்பக்கத்திற்கேற்ப வைத்துள்ளீர்களா என்பதனையும் சரிபார்க்கச் சொல்லும்.
மொழிபெயர்ப்பு: சிவ. உறுதிமொழி (மாணவப் பத்திரிகையாளர்)
Source : http://www.iupui.edu/~webtrain/tutorials/frontpage_2003_one_pager.html