சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் நகைச்சுவைகள்

 

ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு ஹார்ட்வேர் என்ஜீனியர் மற்றும் டிபார்ட்மெண்ட் மேனேஜர் ஆகிய மூவரும் சுவிட்சர்லாந்திற்கு ஒரு மீட்டிங்கிற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு மலையின் செங்குத்தான சாலையில் வந்து கொண்டிருக்கும் போது திடிரென்று காரின் ப்ரேக் பழுதடைந்துவிட்டது. கார் கட்டுபாட்டை மீறி மோதல்களுக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக மலையின் ஒரு பகுதியில் மோதி, கார் நின்றுவிட்டது.

உள்ளே இருந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை, இருந்தாலும் ஒரு பிரச்சனை. ப்ரேக் இல்லாத ஒரு காரில் மலையின் பாதியில் அவர்கள் மாட்டிகொண்டனர். என்ன செய்திருப்பார்கள்?

டிபார்ட்மெண்ட் மேனேஜர் கூறுகிறார், ”நாம் இங்கேயே மீட்டிங் வைத்துக் கொள்ளலாம். நமது விஷன், மிஷன், கோல்ஸ் மற்றும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம், அதற்கு பிறகு நாம் இங்கிருந்து கிளம்பலாம்” என்கிறார்.  

ஹார்ட்வேர் என்ஜீனியர் கூறுகிறார், “இல்லை, இல்லை அதற்கு நீண்ட நேரம் ஆகும். என்னிடம் சுவிஸ் ராணுவ கத்தி உள்ளது, அதைவைத்து இந்த ப்ரேக் பழுதை சரி செய்துவிடலாம், பிறகு நாம் இங்கிருந்து கிளம்பலாம்” என்கிறார்.  

சாஃப்ட்வேர் என்ஜீனியர் கூறுகிறார், ”சரி, நாம் வேறு எதுவும் செய்வதற்கு முன், மீண்டும் இந்த காரை சாலையிலேயே தள்ளிவிட்டு, விபத்து மறுபடியும் நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்” என்கிறார்.


படைப்பாளர்கள் C மற்றும் யுனிக்ஸ் புரளியை ஏற்றுக்கொள்ளுதல்

இது கம்ப்யூட்டர் தொழிற்துறையை அதிர்ச்சியுறச் செய்த ஒரு அறிவிப்பு. கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி மற்றும் பிரையன் கர்னிங்கான் ஆகியோர் அவர்கள் உருவாக்கிய யுனிக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் C ஆனது 30 வருடங்களாக நடைமுறையில் உள்ள ஒரு ஏப்ரல் ஃபூல்ஸ் ப்ராங்க் என்பதை ஒப்புக்கொண்டனர். அண்மையயில் யுனிக்ஸ்வேர்ல்டு மென்பொருள் மேம்பாட்டு மன்றத்தில் பேசிய தாம்சன் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

”1969 இல் AT&T அப்பொழுதான் GE/Honeywell/ உடனான தங்களது மல்டிக்ஸ் திட்டத்துடன் பணியை முடித்துக் கொண்டது. பிரையனும் நானும் சுவிட்சர்லாந்தில், பேராசிரியர் நிச்லஸ் வ்ர்த் இன் ETH ஆய்வகங்களில் பாஸ்கலின் ஆரம்ப வெளியீட்டில் பணிபுரிய ஆரம்பித்தோம், அந்த நேரத்தில்தான் டென்னிஸ் “போர்ட் ஆஃப் தி ரிங்ஸ்” புத்தகத்தை படித்து முடித்திருந்தார். “லார்ட் ஆஃப் தி ரிங்ஸின்” ஒரு போலிதான் “போர்ட் ஆஃப் தி ரிங்ஸ்”. ஒரு வேடிக்கைக்காக, நாங்கள் மல்டிக்ஸ் மற்றும் பாஸ்கலின் போலியை உருவாக்க முடிவு செய்தோம். நானும், டென்னிஸும் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு பொறுப்பாளியாக இருந்தோம். நாங்கள், மல்டிக்ஸை வைத்து, ஒரு புதிய முறையை வடிவமைத்தோம். அது கடினமாகவும், புரியாததாகவும், சாதாரண பயனர்களுக்கு ஏமாற்றத்தை அதிமாக்குவதாகவும் இருந்தது. இதுவே யுனிக்ஸ் ( மல்டிக்ஸின் போலி) என்று அழைக்கப்பட்டது. டென்னிஸும், பிரையனும் பாஸ்கலின் வேறுபட்ட வடிவத்தை உருவாக்கினர். இது “ A “ என்று அழைக்கப்பட்டது. மற்றவர்கள் “A” வை வைத்து உண்மையான ப்ரோக்ராம்களை எழுதுவதைக் கண்டறிந்தபோது, நாங்கள் உடனடியாக சில புரியாத அம்சங்களை வைத்து “A” விலிருந்து “B” வை உருவாக்கினோம். BCPL என்ற பல வடிவங்களுக்கு மாறி கடைசியாக “C” வடிவத்தோடு நிறுத்தினோம்.

பின்வரும் தொடரின் சரியான கம்பைல் கிடைத்ததும், நாங்கள் இந்த செயல்முறையை நிறுத்திவிட்டோம்.

for(;P("\n"),R--;P("|"))for(e=C;e--;P("_"+(*u++/8)%2))P("|"+(*u/4) %2);


நாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு அப்பால் உள்ள ஒரு தொடரை அனுமதிக்கும் ஒரு மொழியைப் பயன்படுத்த முயற்சிப்பதாக நினைப்பார்கள் தற்காலத்தில் உள்ளவர்கள். நாங்கள் உண்மையில்  இதை சோவியத்திற்கு விற்க  இருந்தோம். AT & T மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் யூனிக்ஸ் மற்றும் C ஆகியவற்றைப் பயன்படுத்தத் துவங்கியபோது எங்கள் ஆச்சரியத்தை கற்பனை செய்து பாருங்கள்! இந்த 1960 களின் தொழில்நுட்ப கேலியைப் பயன்படுத்தி ஓரளவு பயனுள்ள பயன்பாடுகளை உருவாக்குவதற்கு 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் நாங்கள் யுனிக்ஸ் மற்றும் C புரோகிராமரின் விடாமுயற்சியை எண்ணி மகிழ்கிறோம். எப்படியிருந்தாலும், பிரையன், டென்னிஸ் மற்றும் நான் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் மேகிண்டோஷின் அடாவின் மீது பிரத்தியேகமாக வேலை செய்து வருகிறோம். இப்படி ஒரு குழப்பமான, தெளிவில்லாத ப்ரோக்ராமை உருவாக்கியதை பற்றி நினைக்கையில் உண்மையில் ஒரு குற்றவாளியாக உணர்கிறேன்.”

முக்கியமான யூனிக்ஸ் மற்றும் சி விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் , AT & T, மைக்ரோசாப்ட், ஹெவ்லெட்-பேக்கார்ட், GTE, NCR மற்றும் DEC உள்பட இந்த நேரத்தில் தங்கள் கருத்தை கூற மறுத்துவிட்டனர். போர்லாந்து இண்டர்நேஷ்னல் பல ஆண்டுகளுக்கு முன்னே இதை சந்தேகித்ததாகவும், C மேலும் உருவாக்குவதற்கான முயற்சிகளை நிறுத்தியதாகவும் கூறினர். ஒரு ஐபிஎம் செய்தித் தொடர்பாளர் கட்டுபடுத்த முடியாமல் சிரித்துவிட்டார். RS-6000 இன் தலைவிதி குறித்து அவசரமாக கூட்டப்பட்ட செய்தி மாநாட்டை ஒத்திவைத்து விட்டு 'VM இப்போது விரைவில் கிடைக்கும்' என்று கூறிவிட்டார்.


ஒரு நாள், ஒருவர் சாலையை கடந்து கொண்டிருந்தபோது, ஒரு தவளை அவரை அழைத்து,  "என்னை முத்தமிட்டால், நான் அழகான இளவரசியாக மாறிவிடுவேன்"  என்றது. அவர் குனிந்து, அந்த தவளை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

மீண்டும் அந்த தவளை அவரிடம் “என்னை முத்தமிட்டு அழகான இளவரசியாக மாற்றினால், நான் உன்னுடன் ஒரு வாரம் தங்குவேன்” என்றது. அவர், அந்த தவளையை பாக்கெட்டில் இருந்து எடுத்துப்பார்த்து சிரித்து விட்டு, மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

மீண்டும் அந்த தவளை நன்றாக சத்தமிட்டு “என்னை முத்தமிட்டு அழகான இளவரசியாக மாற்றினால், நான் உன்னிடம் ஒரு வாரம் தங்குவேன், நீ உனக்கு தேவையான எதை வேண்டுமானலும் செய்து கொள்ளலாம்” என்றது. அவர், அந்த தவளையை பாக்கெட்டில் இருந்து எடுத்துப்பார்த்து சிரித்து விட்டு, மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

கடைசியாக, அந்த தவளை கேட்டது, “என்னதான் உன் பிரச்னை? நான் அழகான இளவரசி என்று கூறினேன், உன்னிடம் ஒரு வாரம் தங்குவேன் என்றேன், உனக்கு தேவையான எதை வேண்டுமானலும் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன். ஆனால் ஏன் என்னை முத்தமிடாமல் இருக்கிறாய்” என்றது. அதற்கு அவர், "இதோ பார் நான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர். காதலிக்காக ஒதுக்குவதற்கு என்னிடம் நேரமில்லை. ஆனால் எப்பொழுதும் ஒரு தவளையிடம் பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.


ஒரு சமீபத்திய ஜாவா மாநாட்டில், பங்கேற்பாளர்களிடம் வினோதமான கேள்விக் கேட்கப்பட்டது.

”நீங்கள் புறப்படத்தயாராக இருக்கும் ஒரு விமானத்திற்குள் இருக்கிறீர்கள். விமான மென்பொருள் கட்டுப்பாட்டிற்கு உங்கள் ப்ரோக்ராமர் குழுதான் பொறுப்பு என்று தெரிய வருகிறது. நீங்கள் எத்தனைபேர் உடனடியாக விமானத்தை விட்டு இறங்குவீர்கள்?"

எல்லோரும் கைகளை உயர்த்த.. ஒரு மனிதர்  மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். "நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று அவரிடம் கேட்டதற்கு, ”எங்கள் ப்ரோக்ராமர் குழுவைக் கொண்டு, விமானத்தை டாக்சி நகரும் அளவிற்கு கூட நகர்த்த முடியாது. அதனால் நான் தாரளமாக அதில் தங்கி இருப்பேன் “ என்றார்.


நியூயார்க் - சாஃப்ட்வேரை சோதனை செய்யும் நிறுவனங்கள், தங்களது கண்காணிப்பு பட்டியலில் பல சாஃப்ட்வேரை உருவாக்கும் நிறுவனங்களை சேர்துள்ளதாக PETS அறிவித்துள்ளது.

ஆனால், PETS இன் செய்தித் தொடர்பாளர் கென் கிரானோலா, “இது போன்று சாஃப்ட்வேரை சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இவ்வாறான நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தலாம். இந்த தயாரிப்புகளை பரிசோதிக்கும் மாற்று வழிமுறைகள் உள்ளன." என்று தெரிவித்தார்.

PETS இன் படி, இந்த நிறுவனங்கள் மென்பொருளை நீண்ட கால மற்றும் கடினமான சோதனைக்கு உட்படுத்துகின்றன - பெரும்பாலும் ஓய்வு இல்லாமல் - ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை.  மற்றும் உள்ளேயுள்ள ஆதாரங்கள், இதை மென்பொருளை சித்திரவதை செய்வது" பற்றி நகைச்சுவையாக கூறுகின்றன.

"இது நகைச்சுவை இல்லை," அவை கம்பைல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு சிறிய அறைக்குள் அடைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் சில மணி நேரங்களிலேயெ செயலிழந்து விடுகிறது. மேலும், அவை தங்கள் வாழ்நாளை சுத்தமில்லாத, பராமரிக்கபடாத கணிணிகளிலேயே செலவிடுகின்றன, தேவைப்படாத போது, சத்தமில்லாமல் அவை அழிக்கப்பட்டும் விடுகின்றன” என்றார் கிரானோலா.

கிரானோலா மென்பொருளானது சுகாதாரமற்ற நிலைமைகளில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பிழைகளால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.

"இந்த பயங்கரவாதத்திற்கு மாற்று வழிகளை நாங்கள் அறிந்திருக்கிறோம், மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மென்பொருளை சோதனைக்கு உட்படுத்தாமல் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக உள்ளது” என்பதை மேற்கோளிட்டு கூறினார்.


சன் மைக்ரோசிஸ்டம் ஜாவா தீவின் மீது வழக்கு தொடுத்தல்

மௌண்டெய்ன் வியூவ்- CA : சன் மைக்ரோசிஸ்டம் , தங்களது ட்ரேட்மார்க்கை பயன்படுத்தியதாக ஜாவா தீவின் மீது வழக்கு தொடுத்துள்ளது.

இந்த தீவு பல நூற்றாண்டுகளாக ஜாவா என்று அழைக்கப்பட்டது, சன் வக்கீல் ஃபிராங்க் செத்தம் "சரி, ஆனால், எப்போதுமே அவர்கள் ஒரு ட்ரேட்மார்க் முத்திரைக்கு தாக்கல் செய்ததில்லை, அவர்கள் பெயரை இழக்க தகுதியுடையவர்கள்" என்று விமர்சித்தார்.

உரிம கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக, தீவின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் விஸு அலபாசிக்கு மாற்றுவதற்கு வாக்களித்தனர். ஆனால், ரெட்மாண்ட், வாஷிங்டனில் இருந்து வந்த டெலிகிராம் காரணமாக அந்த நாடு இறுதியாக ஒரு பெயருக்கான ஒரு குறியீட்டில் மாறியது. அதுவே, அழகான, காஃபி கப். பெரும்பாலான பத்திரிகைகள் தீவின் பெயரை அச்சிட முடியாது என்பதால், "இதற்கு  முன்னர் ஜாவா என்று அறியப்பட்ட தீவு" என அச்சிட்டன.

சன் மைக்ரோசிஸ்டமை சேர்ந்த வக்கீல்கள், சோலாரில் உள்ள தீப்பிழம்பின் உரிமையாளரக் கண்டறிந்து, அவர்கள் மேலும் வழக்கு தொடுத்தாலும் தொடுப்பார்கள்.


ஒரு புரோகிராமர் மற்றும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர் சான்காவிலிருந்து பெங்களூருக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர்.  புரோகிராமர், சாஃப்ட்வேர் என்ஜீனியரிடம் நாம் இருவரும் ஒரு கேம் விளையாடுவோமா என்று கேட்கிறார். ஆனால், அந்த சாஃப்ட்வேர் என்ஜீனியர், தான் தூங்க விரும்புவதாக கூறி, விளையாட மறுத்து விட்டு, ஜன்னலில் சாய்ந்து கண்ணை மூடிக்க்கொண்டார்.

ஆனால் புரோகிராமர் விடுவதாக இல்லை, “இந்த கேம் ஈஸியாகவும், ஜாலியாகவும் இருக்கும். நான் உன்னிடம் ஒரு கேள்விக் கேட்பேன், உனக்கு பதில் தெரியவில்லை என்றால் 10 டாலர் தர வேண்டும். அதே போன்று நீ என்னிடம் கேள்விக் கேட்டு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் உன்னிடம் 10 டாலர் தருவேன்” என்றார்.

மறுபடியும் அந்த சாஃப்ட்வேர் என்ஜீனியர், விளையாட மறுத்து விட்டு, தூங்குவதற்கு முயற்ச்சித்தார்.  புரோகிராமர் இன்னும் கொஞ்சம் வேகமாக, சரி, உனக்கு பதில் தெரியலனா 10 டாலர், எனக்கு தெரியலனா 100 டாலர் என்று சொல்கிறார். இது அந்த சாஃப்ட்வேர் என்ஜீனியர் கவனத்தை ஈர்த்தது, நிச்சயம்  இவர் விடமாட்டர் என்றுணர்ந்து, விளையாட ஒத்துக் கொண்டார்.

புரோகிராமர் முதல் கேள்வி கேட்கிறார், ” "பூமியில் இருந்து சந்திரனுக்கு என்ன தூரம்?" சாஃப்ட்வேர் என்ஜீனியருக்கு பதில் தெரியவில்லை அதனால் தனது பர்ஸிலிருந்து 10 டாலரை எடுத்து புரோகிராமரிடம் தருகிறார். இப்போது சாஃப்ட்வேர் என்ஜீனியரின் திருப்பம். அவர் புரோகிராமரிடம்,” மூன்று கால்களோடு மலைக்கு மேலே செல்வது, வரும்போது நான்காக வருகிறது அது என்ன?” என்றார்.

புரோகிராமர் ஒரு குழப்பமான தோற்றத்துடன் அவரைப் பார்க்கிறார். தனது லேப்டாப், குறிப்புகள் அனைத்திலும் தேடுகிறார். ஆன்லைன், மொபைல் என அதிலும் அதற்கான பதிலை தேடுகிறார். விரக்தியில், அவர் உடன் வேலை செய்பவர்களுக்கெல்லாம், அந்த பதிலுக்காக மெயில் அனுப்புகிறார். ஆனால், ஒரு பயனுமில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அவர் சாஃப்ட்வேர் என்ஜீனியரை எழுப்பி 100 டாலர்களைத் தருகிறார். சாஃப்ட்வேர் என்ஜீனியர் அமைதியாக அதை பெற்றுக் கொண்டு, மீண்டும் தூங்க செல்கிறார். புரோகிராமர் அவரிடம், “சரி, அதன் பதில் தான் என்ன? என்று கேட்கிறார்.

ஒரு வார்த்தைக் கூட கூறாமல், மீண்டும் 10 டாலரை எடுத்து புரோகிராமரிடம் தந்துவிட்டு, தூங்குவதற்கு திரும்பி கொண்டார் சாஃப்ட்வேர் என்ஜீனியர்.


ஒரு அறுவை மருத்துவர், ஒரு சிவில் பொறியியலாளர் மற்றும் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆகியோர் தங்களில், யாருடைய தொழில் பழமையானது என்று விவாதித்தனர்.

ஆதாமிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விலா எலும்பிலிருந்துதான்  கடவுள் ஏவாளை படைத்தார் என்று பைபிள் சொல்கிறது.  இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். எனவே, என்னுடைய தொழிலே பழமையானது என்றார், அறுவை மருத்துவர்.

சிவில் பொறியியலாளர் குறுக்கிட்டு,  ஆனால், அதற்கு முன்னதான ஆதியாகம புத்தகத்தில், கடவுள் பூமியைதான் முதலில் படைத்தார் என்றுள்ளது. எனவே, நீங்கள் கூறுவது தவறு. என்னுடைய தொழிலே பழமையானது என்றார்.

மென்பொருள் பொறியாளர் தனது நாற்காலியில்  சாய்ந்து, சிரித்துக் கொண்டே, நம்பிக்கையுடன், ஆமாம், ஆனால் இந்த குழப்பத்தை உருவாக்கியவர் யார் என்று நினைக்கிறீர்கள்? என்றார்.


ஒரு ப்ரோக்ராமர் கடற்கரை நடைபயிற்சியின் போது ஒரு விளக்கை கண்டுபிடிக்கிறார். அந்த விளக்கைத் தேய்த்தவுடன் அதிலுருந்து ஒரு பூதம் வெளிவருகிறது.

நான் உலகில் மிகவும் சக்திவாய்ந்த பூதம். நீ எதை கேட்டாலும் நான் நிறைவேற்றுவன். ஆனால், நீ ஒரே ஒரு ஆசையைத்தான் கேட்க வேண்டும் என்றது.

உடனே அந்த ப்ரோக்ராமர் தன்னிடம் இருந்த மேப்பில்,, மத்தியக்கிழக்கு நாடுகளை காண்பித்து எனக்கு இங்கே, அமைதி நிலவ வேண்டும் என்றார்.

அதற்கு அந்த பூதம், அந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நான் வேறு எதையும் செய்ய முடியும், ஆனால் இது என் வரம்புக்கு அப்பாற்பட்டது என்றது.

சரி, நான் ஒரு ப்ரோக்ராமர், என் ப்ரொக்ராமை நிறைய மக்கள் உபயோகிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என் ப்ரோக்ராமில் திருப்தி அடைய வேண்டும். மேலும் அவர்கள் அதில் பல உபயோகமான மாற்றங்களை என்னிடம் கேட்க வேண்டும் என்றார்.

உடனே, அந்த பூதம், ”ஆமாம், அந்த மேப்பில் எதையோ கேட்டாயே? நாம் மீண்டும் அந்த மேப்பையே பார்க்கலாம்” என்றது.


நகைச்சுவையான மேற்கோள்கள்

முதல் 90% நிரல், முதல் 90% வளர்ச்சி நேரத்திற்கானது. மீதி உள்ள 10% நிரல், வேறு 90% வளர்ச்சி நேரத்திற்கானது. (டாம் கார்கில்)

 

இன்று ப்ரோக்ராமிங் என்பது பெரிய & சிறந்த ப்ரொக்ராம்களை உருவாக்கும் சாஃப்ட்வேர் என்ஜீனியருக்கும், பெரிய & சிறந்த முட்டாள்களை உருவாக்கும் உலகத்திற்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இதுவரை, உலகமே இதில் வெற்றிபெற்றுள்ளது. (ரிக் குக்)

 

C++: இங்கு நண்பர்கள் உங்கள் தனிப்பட்ட நபர்களையும் தொடர்பு கொள்ளலாம். (காவின் பேக்கர்)

 

எப்போதாவது C++ கம்ப்யூட்டர் மொழியினை வாசித்ததுண்டா? இங்கே நல்ல   

கம்ப்யூட்டர் மொழியினை எதிர்பார்க்கும் நிறைய C++ பயனாளர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.  (வில்லியம் பெக்வித்)

 

டிபக்கிங் என்பது பிழை நீக்குவதாக இருந்தால், ப்ரொக்ராம்மிங் என்பது அந்த பிழைகளை ஏற்படுத்துவதாய் இருக்க வேண்டும். (எட்ஸெர் டிஜ்க்ஸ்ட்ரா)

 

C++ இல் உள்ள , C ஐ தவிர்த்து, ++ ஐ மட்டும் கற்றுக் கொடுத்திருந்தால், C++ ஒரு நல்ல கம்ப்யூட்டர் மொழியாக இருந்திருக்கும்.  (மைக்கேல் ஃபெல்ட்மேன்)

 

C++-- என்பது மீண்டும் மீண்டும் வருவதே ஜாவா. (மைக்கேல் ஃபெல்ட்மேன்)

 

கம்ப்யூட்டர் மொழிகளின் வரலாற்றில் C ++ ஒரு இடம் பிடித்துள்ளது. ரோம சாம்ராஜ்யத்தின் வரலாற்றில் காலிகுலா இடம் பிடித்ததை போல. (ராபர்ட் ஃபிர்த்)

 

C ++  கேண்டுனீஸ் மொழியில் “ C ga ga ” என்று உச்சரிக்கப்படுகிறது. இதற்கு மேலும் நான் வேறெதும் சொல்லவேண்டுமா?

 

C அல்லது C ++ இல் எழுதுவது எல்லா பாதுகாப்புகளையும் அகற்றிய ஒரு செய்ன்சாவில் ஓடுவதைப் போன்றது. (பாப் கிரே)

C ++ உங்கள் சுத்தியலாய் இருக்கும் போது, எல்லாம் ஒரு கட்டைவிரல் போல தோன்றும். (ஸ்டீவ் ஹஃப்லிக்)


ஒரு சாஃப்ட்வேரை வடிவமைக்க இரு வழிகள் உள்ளது. ஒன்று எளிமையாக எந்த குறையும் இல்லாமல் வடிவமைப்பது. இன்னொன்று மிகவும் சிக்கலானதாக, எந்த குறையும் இல்லாமல் வடிவமைப்பது. முதல் வழி மிகவும் கடினமானது. (கார் ஹோரே)


ஐம்பதாண்டுகால நிரலாக்க மொழிகள் ஆய்வு, கடைசியில் C++ போய் முடிந்தது?? - (ரிச்சர்ட் ஓ.கீஃபே)


சாஃப்ட்வேரும் தேவாலயும் ஒண்ணு… முதல்ல உருவாக்குவோம்..அப்பறம் வேண்டிக்க ஆரம்பிச்சுடுவோம். (சாமுவேல் ரெட்வைன்)


நிரலாக்க மொழிகளின் பரிணாம வளர்ச்சி: Forton ஒரு நான் - டைப்டு மொழி,  C ஒரு வீக்லி டைப்ட் மொழி, C++ ஸ்ட்ராங்க்லி ஹைப்டு மொழி. (ரான் செர்ஸ்லி)


எனக்கு ஒரு ஆசை. கம்ப்யூட்டர் பயன்படுத்துவது டெலிபோன் பயன்படுத்துவதைவிட சுலபமாக இருக்கவேண்டும். என் ஆசை நிறைவேறிடுச்சு. ஏன்னா இப்போவரைக்கும் எனக்கு டெலிபோன் எப்படி பயன்படுத்தணும்னு தெரியல. (Bjarne Stroustrup)


C++ என்பது எழுத மட்டுமே பயன்படக்கூடிய ஹைலெவல் லாங்குவேஜ் (ஸ்டீபன் வான் பேலன்)