புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள்

 

பண்டைய காலம்

வில்லியம் கில்பெர்ட்

1544-1603

ஆங்கிலேயர்

புவி மிகப் பெரியகாந்தமாக செயல்படுகிறது என கூறியவர்

கலிலியோ கலிலி

1564-1642

இத்தாலியர்

விண்வெளி மற்றும் இயற்பியல் துறையில் பல அடிப்படை ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கணித ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் நிலவில் மலைகள் மற்றும் எரிமலைகள் இருந்ததையும், வெள்ளிக் கோளின் பல்வேறு கட்டங்களையும் கண்டறிந்தவர். வியாழனை சுற்றி ஐஓ, யுரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ போன்ற துணைக்கோள் இருப்பதை கண்டறிந்த பெருமையும் இவரையே சேரும்.

வில்லிப்ராட் ஸ்நெல்

1580-1626

டச்சுக்காரர்

ஒளி விலகல் விதியை கண்டுபிடித்தவர்.

பிலைசு பாஸ்கல்

1623-1662

பிரஞ்சுக்காரர்

பாஸ்கல் விதியை கண்டுபிடித்தவர். அந்த விதியின் படி முழுவதும் திரவத்தால் நிரப்பபட்ட ஒரு கலனில் தரும் அழுத்தமானது அந்த கலனின் அணைத்துப் பகுதிகளுக்கும் சம அளவில் பரவும்.

கிறித்தியான் ஐகன்சு

1629-1695

டச்சுக்காரர்

அலைக் கோட்பாட்டினை உருவாக்கியவர். இது ஐகன்சு தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதியே கடிகாரங்களின் ஊசல் அசைவிற்கு முன்னோடியாக பயன்படுத்தபடுத்தப்படுகிறது.

ராபர்ட் ஹூக்

1635-1703

ஆங்கிலேயர்

மீள்திறனுக்கான விதியை கண்டுபிடித்தவர். இது ஹூக் விதி என்று அழைக்கப்படுகிறது.

சர் ஐசக் நியூட்டன்

1643-1727

ஆங்கிலேயர்

புவி ஈர்ப்பு மற்றும் இயக்க விதிகளை உருவாக்கியவர். இவர் வகை நுண்கணித்தையும் கண்டுபிடித்துள்ளார்.

டேனியல் பெர்னௌலி

1700-1782

சுவிஸ்காரர்

திரவ ஓட்டத்திற்கான பெர்னௌலி தத்துவத்தை உருவாக்கியவர்.

பெஞ்சமின் பிராங்கிளின்

1706-1790

ஆங்கிலேயர்

முதல் அமெரிக்க இயற்பியலாளர். மின்னூட்டங்களை நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் என்று வகைப்படுத்தியவர்.

லியோனார்டு ஆய்லர்

1707-1783

சுவிஸ்காரர்

திரவ இயக்கவியல், லூனார் கோட்பாடு மற்றும் இயக்கவியலுக்கு அடிப்படை பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் கணித்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்கை அளித்துள்ளார்.

ஹென்றி கேவண்டிஷ்

1731-1810

பிரிட்டிஷ்காரர்

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர். புவியின் நிறை, எடை மற்றும் நியூட்டனின் புவி ஈர்ப்பு மாறிலியையும் மதிப்பிட்டவர்.

சார்லசஸ் அகஸ்டின் டெ கூலும்

1736-1806

பிரஞ்சுக்காரர்

மீள்திறன், மின்விசை, காந்த விசை போன்றவற்றில் பல சோதனைகளை செய்துள்ளார். நிலை மின்னியலுக்கான கூலும் விதியை கண்டுபிடித்தவர்

ஜோசப் லூயி லாக்ராஞ்சி

1736-1813

பிரஞ்சுக்காரர்

நிலை இயக்கவியலில் புதிய முறைகளை உருவாக்கியவர்

ஜேம்ஸ் வாட்

1736-1819

ஸ்காட்டிஷ்காரர்

நவீன நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்.

அலெஸாண்ட்ரோ வோல்ட்டா

1745-1827

இத்தாலியர்

மின்சார ஆய்வில் முன்னோடியாக திகழ்ந்தவர். முதல் மின்சார பேட்டரியை கண்டுபிடித்தவர்.

ஜோசப் ஃபோரியர்

1768-1830

பிரஞ்சுக்காரர்

ஃபோரியர் தேற்றத்தை உருவாக்கியவர்.

தாமஸ் யங்

1773-1829

பிரிட்டிஷ்காரர்

புகழ் பெற்ற இரட்டை பிளவு சோதனையை நடத்தியவர். ஒளியின் அலை இயல்பை நிருபித்தவர்.

ஜீன் பாப்டிஸ்ட் பயோட்

1774-1862

பிரஞ்சுக்காரர்

பயோட்-சாவர்ட் விதியை கண்டுபிடித்தவர்.

ஆந்த்ரே-மாரி ஆம்பியர்

1775-1836

பிரஞ்சுக்காரர்

மின்னியக்கவிசையியலின் தந்தை என அழைக்கப்படுபவர்.

அமடோ அவகாதட்ரோ

1776-1856

இத்தாலியர்

அவகாதட்ரோ விதியை கண்டுபிடித்தவர். அந்த விதியின் படி, ஒரே கொள்ளளவு உள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே அழுத்ததில் ஒரே வெப்பநிலையில் இருக்கும் பொது அதன் அணுக்களும் ஒத்த எண்ணிக்கையில் இருக்கும்.

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்

1777-1855

ஜெர்மானியர்

காஸ் விதியை கண்டுபிடித்தவர். எண் கோட்படு, வகைப்பாட்டு வடிவியல், வானியல் போன்ற பலவற்றில் முக்கிய பங்கு வகித்தார்

ஆன்சஸ் கிருஸ்டியன் ஆர்ஸ்டெட்

1777-1851

டேனிஷ்காரர்

ஒரு கம்பிடில் உள்ள மின்சாரம் காந்த விளைவுகளை உருவாக்கும் என்று கண்டறிந்தவர்.

சர் டேவிட் புரூஸ்டர்

1781-1868

ஆங்கிலேயர்

புரூஸ்டர் விதியை கண்டுபிடித்தவர். கெலைடொஸ்கோப், ஸ்டீரியோஸ்கோப் போன்றவற்றைக் கண்டுபிடித்தவர்.

அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்

1788-1827

பிரஞ்சுக்காரர்

அலை ஒளியியல் கோட்பாட்டை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்

ஜியார்ஜ் ஓம்

1789-1854

ஜெர்மானியர்

ஓம் விதியை கண்டுபிடித்தவர். ஒரு கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் ஆனது அந்த கடத்தியின் இடையில் இருக்கும் மின்னழுத்ததிற்கு நேர் விகிதத்திலும், மின் தடைக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும் என்பதே ஓம் விதியாகும்

மைக்கேல் ஃபாரடே

1791-1867

ஆங்கிலேயர்

மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தவர். முதல் எலெக்ட்ரிக் ட்ரான்ஸ்ஃபார்மரை வடிவமைத்தவர்

ஃபெலிக்ஸ் சாவர்ட்

1791-1841

பிரஞ்சுக்காரர்

பயோட்-சாவர்ட் விதியை கண்டுபிடித்தவர்.

சாடி கார்னட்

1796-1832

ஆங்கிலேயர்

தெர்மோடைனமிக்ஸை கண்டுபிடித்தவர்

ஜோஸப் ஹென்றி

1797-1878

அமெரிக்கர்

முதல் எலெக்ட்ரிக் மோட்டாரை வடிவமைத்தவர்

கிறிஸ்டியன் டாப்ளர்

1803-1853

ஆஸ்திரியர்

டாப்ளர் விளைவை கண்டுபிடித்தவர்

வில்ஹெல்ம் ஈ. வெபர்

1804-1891

ஜெர்மானியர்

மேக்னட்டோமீட்டரை வடிவமைத்தவர்

சர் வில்லியம் ஹாமில்டன்

1805-1865

ஐரியர்

குறைந்தபட்ச செயல் கொள்கையை உருவாக்கியவர். ஹாமில்டன் மெக்கானிக்ஸை முறைப்படுத்தியவர்.

ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்

1818-1889

பிரிட்டிஷ்காரர்

வெப்பத்திற்கும் இயந்திரத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தவர்.

ஹிப்போலிட்டி ஃபெஸிவ்

1819-1896

பிரஞ்சுக்காரர்

முதன் முதலில் ஒளியின் வேகத்தை அளக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். இண்டர்ஃபெரோமீட்டரை வடிவமைத்தவர். சூரியனின் முதல் டகெரோடைப் படங்களை எடுத்தவர்.

ஜான் பெர்னாட் லியோன் ஃப்ளோகால்ட்

1819-1868

பிரஞ்சுக்காரர்

ஒளியின் வேகத்தை துல்லியமாக அளந்தவர். இவர் கிரையோஸ்கோப்பை வடிவமைத்தார். பூமியின் சுழற்சியை நிகழ்த்தி காண்பித்தவர்.

சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்

1819-1903

பிரிட்டிஷ்காரர்

ஸ்டோக்ஸ் தேற்றத்தை உருவாக்கியவர். ஃப்ளோரசன்ஸை கண்டுபிடித்தவர்.

ஹெர்மன் வோன் ஹெல்ம்ஹோல்ட்ஸ்

1821-1894

ஜெர்மானியர்

தெர்மொடைனமிக்கின் முதல் விதியை உருவாக்கியவர்.

 

ருடால்ப் கிளாசியாஸ்

1822-1888

ஜெர்மானியர்

தெர்மொடைனமிக்கின் இரண்டம் விதியை உருவாக்கியவர்.

லார்ட் கெல்வின் (எ) வில்லியம் தாம்சன்

1824-1907

பிரிட்டிஷ்காரர்

வெப்பநிலை அளவை முன்மொழிந்தவர் இது தெர்மொடைனமிக்ஸ் வளர்ச்சிக்கு பங்கு வகித்தது.

குஸ்டாவ் கிர்ச்சோஃப்

1824-1887

ஜெர்மானியர்

மின்னோட்டம் பற்றிய கிர்ச்சோஃப் விதிகளுக்கு அறியப்படுபவர். நிறமாலை பற்றிய மூன்று விதிகளை உருவாக்கியவர்.

ஜொஹான் பால்மர்

1825-1898

சுவிஸ்காரர்

ஹைட்ரஜன் நிறமாலைக்கான விதியை உருவாக்கியவர்.

சர் ஜோசப் வில்சன் ஸ்வான்

1828-1914

பிரிட்டிஷ்காரர்

கார்பன் இழையிலான மின்விளக்கை கண்டுபிடித்தவர்.

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்

1831-1879

ஸ்காட்டிஷ்காரர்

மின்காந்தவியல் தத்துவத்தை எடுத்துரைத்தவர். வாயுக்களுக்கான இயக்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர்.

ஜோசப் ஸ்டீபன்

1835-1893

ஆஸ்திரியர்

கரும்பொருள் ரேடியேஷனை ஆராய்ந்தவர்.

எர்ன்ஸ்ட் மாச்

1838-1916

ஆஸ்திரியர்

மாக் கொள்கையை முன்மொழிந்தவர்.

ஜோஸிய கிப்ஸ்

1839-1903

ஆங்கிலேயர்

கெமிக்கல் வெப்பமானியை உருவாக்கியவர்.

ஜேம்ஸ் டேவர்

1842-1923

பிரிட்டிஷ்காரர்

திரவ நைட்ரஜன் மற்றும் டேவர் ஃப்ளாஸ்க்கை கண்டுபிடித்தவர்.

ஆஸ்போர்ன் ரேய்னால்ட்ஸ்

1842-1912

பிரிட்டிஷ்காரர்

ஹைட்ராலிக்ஸ் மற்றும் ஹைட்ரோடினாமிக்ஸ் துறைகளுக்கு பங்களித்தவர். ரேய்னால்ட்ஸ் எண்ணை அறிமுகப்படுத்தியவர்.

லுட்விக் போல்ட்ஸ்மான்

1844-1906

ஆஸ்திரியர்

புள்ளியல் மற்றும் வெப்ப இயக்கவியலில் முக்கிய பங்காற்றி உள்ளார்.

ரோலண்ட் எவோட்ஸ்

1848-1919

ஹங்கேரியர்

ஈர்ப்பிற்கும் , நிலைம நிறைக்கும் இடையேயான சமநிலையை நிகழ்த்திக் காண்பித்தவர்.

ஆலிவர் ஹெவிசைடு

1850-1925

ஆங்கிலேயர்

மின்காந்தவியல் வளர்ச்சிக்கு பங்களித்தவர். நவீன வெக்டர் கால்குலஸை கண்டுபிடித்தவர்.

ஜார்ஜ் பிரான்சிஸ் பிட்ஸ்ஜெரால்ட்

1851-1901

ஐரியர்

மைக்கேல்சன்-மோர்லே சோதனையை விளக்க முயற்சிகளை மேற்கொண்டவர்

ஜான் ஹென்றி போயிங்டிங்

1852-1914

பிரிட்டிஷ்காரர்

போயிங்டிங் வெக்டாரை நிகழ்த்தி காண்பித்தவர்.

ஹென்றி பாயின்கேர்

1854-1912

பிரஞ்சுக்காரர்

சிறப்பு சார்பியல் வளர்ச்சிக்கு பங்களித்தவர். தரமான இயக்கவியலை நிறுவியவர்.

ஜேன் ரிட்பெர்க்

1854-1919

ஸ்வீடஷ்காரர்

நிறமாலையை உருவாக்கியவர். ரிட்பெர்க் மாறிலியைத் தோற்றுவித்தவர்.

எட்வின் எச். ஹால்

1857-1894

ஜெர்மானியர்

மின்காந்த பின்னணியில் பணிபுரிந்தவர். ரேடியோ அலைகள் மற்றும் ஒளிமின் விளைவை கண்டுபிடித்தவர்.

நிகோலா டெஸ்லா

1857-1943

செர்பியர்

மாறுதிசை மின்னோட்டத்தினை உருவாக்கியவர்.

நோபல் பரிசு பெற்றவர்கள்

ஜோகன்னஸ் வான் டெர் வால்ஸ்

1837-1923

டச்சுக்காரர்

வாயுக்கள் மற்றும் திரவங்களின் பற்றிய சமன்பாட்டினை உருவாக்கியவர்.

லார்ட் ராலே (எ) சான் வில்லியம் ஸ்ட்ரட்

1842-1919

பிரிட்டிஷ்காரர்

ஆர்கானைக் கண்டுபிடித்தவர். சூரியன் மறைவின் போது ஏற்படும் சிவப்பு நிறத்திக்கும், வானத்தின் நீல நிறத்திற்குமான ஒளிச் சிதறல் காரணத்தைக் கூறியவர்.

வில்ஹெல்ம் ரோண்ட்ஜென்

1845-1923

ஜெர்மானியர்

X கதிர்களை ஆய்வு செய்தவர்.

ஆன்டெய்ன் ஹென்றி பெகுவெரல்

1852-1908

பிரஞ்சுக்காரர்

இயற்கை கதிர்வீச்சைக் கண்டறிந்தவர்.

ஆல்பர்ட் ஏ. மைக்கேல்சன்

1852-1931

ஜெர்மானியர்

பூமியின் முழுமையான இயக்கத்தை அளவிடுவதற்கு முயற்சி செய்தார். ஒளியின் வேகத்தினை துல்லியமாக அளவு செய்தார்.

ஹென்றிக் அண்டூன் லாரென்ஸ்

1853-1928

டச்சுக்காரர்

ரிலேட்டிவிட்டிக்கான லாரென்ஸ் ட்ரான்ஸ்ஃப்ர்மேசன் சமன்பாடுகளை உருவாக்கியவர். மின்காந்தவியல் கோட்பாட்டில் பங்களித்தவர்.

ஹெய்கே காமர்சிங்-ஓனன்ஸ்

1853-1926

டச்சுக்காரர்

திரவ ஹீலியம் மற்றும் மீக்கடத்தலை கண்டுபிடித்தவர்.

சர் ஜோசப் ஜான் தாம்சன்

1856-1940

பிரிட்டிஷ்காரர்

எலக்ட்ரான் இருப்பதை நிருபித்தவர்.

மேக்ஸ் பிளாங்க்

1858-1947

ஜெர்மானியர்

குவாண்டம் கோட்பாட்டை உருவாக்கியவர்.

பியர் கியூரி

1859-1906

பிரஞ்சுக்காரர்

மேரி கியூரியுடன் சேர்ந்து பீசோஎலக்ட்ரிசிட்டியை உருவாக்கியவர்.

சர் வில்லியம் ஹென்றி பிராக்

1862-1942

பிரிட்டிஷ்காரர்

எக்ஸ்ரே நிறமாலையில் ஆய்வு செய்தவர்.

பிலிப் வான் லெனார்ட்

1862-1947

ஜெர்மானியர்

ஒளிநாடா கதிர்கள் மற்றும் ஒளிமின் விளைவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்

வில்ஹெல்ம் வியன்

1864-1928

ஜெர்மானியர்

வெப்பத்தை கதிர்வீச்சு கட்டுப்படுத்தும் சமன்பாடுகளை கண்டுபிடித்தார்.

பீட்டர் ஜீமன்

1865-1943

டச்சுக்காரர்

காந்த மண்டலத்தில் நிறமாலை கோடுகள் பிளவுபடுவதைக் கண்டுபிடித்தார்.

மேரி கியூரி

1867-1934

போலந்துக்காரர்

தோரியத்தின் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார். மேலும் ரேடியம் மற்றும் பொலெனியத்தையும் கண்டுபிடித்தார்.

ராபர்ட் மில்லிகன்

1868-1953

அமெரிக்கர்

எலெக்ட்ரான் சார்ஜை அளவிட்டார். ’காஸ்மிக் கதிர்கள் “ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர். ஒளிமின் விளைவை ஆராய்ந்துள்ளார்.

சார்லஸ் வில்சன்

1869-1959

பிரிட்டிஷ்காரர்

க்ளௌடு சேம்பரை உருவாக்கியவர்.

ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின்

1870-1942

பிரஞ்சுக்காரர்

கத்தோட் கதிர்கள் எதிர்மறையானத் துகள்களைக் கொண்டவை என நிருபித்தவர். ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின் பிரௌனிய இயக்கத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்தினார். அவோகாதோவின் எண்ணை உறுதிப்படுத்தினார்.

குலீல்மோ மார்க்கோனி

1874-1937

இத்தாலியர்

வயர்லெஸ் டெலிகிராபியை முதன் முதலில் நடைமுறைக்கு கொண்டுவந்தவர்.

ஜோகன்னஸ் ஸ்டார்க்

1874-1957

ஜெர்மானியர்

வலுவான மின்புலத்தில் ஸ்பெக்ட்ரல் கோடுகள் பிளவுபடுத்தப்பட்டதை கண்டுபிடித்தார்.

சார்லஸ் க்ளோவர் பார்க்லா

1877-1944

பிரிட்டிஷ்காரர்

எக்ஸ் கதிர்கள் மூலம் கதிர்வீச்சு செய்யும் போது ஒவ்வொரு வேதியியல் தனிமமும் இரண்டு வரிசை x-ray ஸ்பெக்ட்ரத்தினை வெளியீடு செய்யும், அதை அவர் K- தொடர் மற்றும் L தொடர் என்று பெயரிடப்பட்டார், அவை அணு கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

1879-1955

ஜெர்மானியர்

பிரவுனிய இயக்கம் மற்றும் ஒளிமின் விளைவை விளக்கியவர். அணு ஸ்பெக்ட்ரா கோட்பாட்டிற்கு பங்களித்தவர்.

ஓட்டோ ஹான்

1879-1968

ஜெர்மானியர்

கனரக அணுக்களின் பிளப்பை கண்டறிந்தவர்.

மேக்ஸ் வான் லாவ்

1879-1960

ஜெர்மானியர்

படிகங்கள் மூலம் x கதிர்களின் விளிம்பு விலகலைக் கண்டுபிடித்தார்.

சர் ஓவன் ரிச்சர்ட்சன்

1879-1959

பிரிட்டிஷ்காரர்

தெர்மோனோனிக் உமிழ்வு அடிப்படை விதியைக் கண்டுபிடித்தார், இப்போது ரிச்சர்ட்சன் (அல்லது ரிச்சர்ட்சன்-துஷ்மேன்) சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு சூடான கடத்தியிலிருந்து எலக்ட்ரான்களை வெளியேறுவதைப் பற்றியது.

கிளின்டன் ஜோசப் டேவிஸன்

1881-1958

அமெரிக்கர்

எலெக்ட்ரான் விலகலைக் கண்டுபிடித்தவர்.

மேக்ஸ் பார்ன்

1882-1970

ஜெர்மானியர்

குவாண்டம் மெக்கானிக்ஸ் உருவாக்க பங்களித்துள்ளார். படிகங்களின் தத்துவத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

பெர்சி வில்லியம்ஸ் ப்ரிட்மேன்

1882-1961

அமெரிக்கர்

மிக அதிக அழுத்தங்களை உருவாக்குவதற்கு ஒரு கருவியைக் கண்டுபிடித்தார்; உயர் அழுத்த இயற்பியலில் பல கண்டுபிடிப்புகளை செய்தார்

ஜேம்ஸ் பிராங்க்

1882-1964

ஜெர்மானியர்

அணு ஆற்றலை அளவிட முடியும் என்று சோதனை மூலம் நிருபித்தவர்.

விக்டர் பிரன்ஸ் ஹெஸ்

1883-1964

ஆஸ்திரியர்

காஸ்மிச் கதிர்வீச்சை கண்டுபிடித்தவர்.

பீட்டர் டீபே

1884-1966

டச்சுக்காரர்

மூலக்கூறு கட்டமைப்பில் பங்கு வகித்தார்

நீல்ஸ் போர்

1885-1962

டேனிஷ்காரர்

குவாண்டம் கோட்பாட்டு, அணுக்கரு வினை, அணுக்கரு பிளவுகளில் பங்களித்தார்.

கார்ல் மான்னே ஜியார்ஜ் சிக்பான்

1886-1978

ஸ்விடிஷ்காரர்

எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி துறையில் முக்கிய பரிசோதனைகள் செய்தார்.

குஸ்டாவ் ஹெர்ட்ஸ்

1887-1975

ஜெர்மானியர்

அணு ஆற்றலை அளவிட முடியும் என்று சோதனை மூலம் நிருபித்தவர்.

எர்வின் ஷரோடிங்கர்

1887-1961

ஆஸ்திரியர்

குவாண்டம் மெக்கானிக்ஸ் உருவாக்க பங்களித்தவர்; ஷ்ரோடிங்கர் அலை சமன்பாட்டை உருவாக்கியவர்.

சர் சந்திரசேகர ராமன்

1883-1964

ஆஸ்திரியர்

ராமன் விளைவைக் கண்டுபிடித்தவர்.

ஓட்டோ ஸ்டெர்ன்

1884-1966

டச்சுக்காரர்

மூலக்கூறு கற்றை முறையின் வளர்ச்சிக்காக பங்களித்தவர்; புரோட்டானின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர்.

ஃப்ரைட்ஸ் ஜெர்னிக்கே

1888-1966

டச்சுக்காரர்

மைக்ரோஸ்கோப்பை உருவாக்கியவர். உயிரியல் செல்கள் மற்றும் திசுக்களை ஆய்வு செய்ய இது உதவுகிறது.

சர் வில்லியம் லாரன்ஸ் பிராக்

1890-1971

பிரிட்டிஷ்காரர்

படிக அமைப்பு மற்றும் x கதிர்களை ஆய்வு செய்தார்.

வால்டர் பாத்தே

1891-1957

ஜெர்மானியர்

காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்தார்.

சர் ஜேம்ஸ் சாட்விக்

1891-1974

பிரிட்டிஷ்காரர்

நீயுட்ரானைக் கண்டுபிடித்தவர்.

சர் எட்வர்ட் ஆப்லடோன்

1883-1964

ஆங்கிலேயர்

பூமியின் வளிமண்டலத்தின் அடுக்கு கண்டுபிடித்தவர், இது ஆப்பிள்டன் அடுக்கு என்று அழைக்கப்படுகிறது, இது அயனி மண்டலத்தின் பகுதியாகும், இது எலக்ட்ரான்களின் மிகுந்த செறிவு அடுக்கு, ரேடியோ பரப்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பிரின்ஸ் லூயிஸ்-விக்டர் டி ப்ரோல்லி

1892-1987

பிரஞ்சுக்காரர்

எலக்ட்ரானின் அலைப் பண்புகளை கண்டறிந்தவர்.

ஆர்தர் காம்டன்

1892-1962

ஆங்கிலேயர்

ஒரு எலக்ட்ரான் மூலம் சிதறிய போது x கதிர்கள் அலைநீளம் அதிகரிப்பதை கண்டுபிடித்தார்.

சர் ஜார்ஜ் பேஜட் தாம்சன்

1892-1975

பிரிட்டிஷ்காரர்

எலெக்ட்ரான் விலகலைக் கண்டுபிடித்தார்.

ஹரோல்ட் கிளேட்டன் யூரி

1893-1981

ஆங்கிலேயர்

டிட்டேரியத்தைக் கண்டுபிடித்தார்.

பிஜோத்ரி லியோனிடோவிச் கபிட்சா

1894-1984

சோவியத்

திரவ ஹைட்ரஜனைக் கொண்டு முந்தைய குளிரூட்டல் முறை இல்லாமல் திரவ ஹீலியத்தை உற்பத்தி செய்யும் ஒரு சாதனம் கண்டுபிடித்ததன் மூலம் குறைந்த வெப்பநிலை இயற்பியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார்; ஹீலியம் II ஒரு குவாண்டம் சூப்பர்ஃப்லுயுட் என்று நிரூபணம் செய்துள்ளார்.

இகோர் ஒய் டாம்

1895-1971

சோவியத்

ஒளியின் வேகத்தை விட எலக்ட்ரான்களின் கதிர்வீச்சின் வேகமாக நகரும் ("செரென்கோவ் விளைவு")கோட்பாட்டு விளக்கத்தை உருவாக்கியவர், மேலும் காஸ்மிக் கதிர்களின் மழை கோட்பாட்டை உருவாக்கியவர்.

லார்ட் பேட்ரிக் மேனார்டு ஸ்டூவர்ட் பிளாகெட்

1897-1974

பிரிட்டிஷ்காரர்

ஆட்டோமெடிக் க்ளௌவ்டு சேம்பரை உருவாக்கினார். காஸ்மிக் கதிர்களில் எலக்ட்ரான் - பாசிட்ரான் ஜோடி இருப்பதை கண்டுபிடித்தார்.

சர் ஜான் காக்ரோட்ஃப்ட்

1897-1967

பிரிட்டிஷ்காரர்

முதல் துகள் முடுக்கத்தைக் கண்டுபிடித்தார்.

இர்னே ஜியோலிட்-கியூரி

1897-1956

பிரஞ்சுக்காரர்

செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

ஐசடோ ஐசக் ரபி

1898-1988

ஆஸ்திரியர்

அணுக்கரு அணுக்களின் காந்த பண்புகளை அளவிடுவதற்கான அதிர்வு நுட்பத்தை உருவாக்கியவர்.

ஃப்ரெடெரிக் ஜோலியட்-கியூரி

1897-1956

பிரஞ்சுக்காரர்

செயற்கை கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

டென்னிஸ் கபோர்

1900-1979

ஹங்கேரியர்

ஹாலோகிராபிக் முறையை உருவாக்கியவர். இதன் மூலம் முப்பரிமாண படங்களை காட்சிப்படுத்த முடியும்

வொல்ப்காங் பாலி

1900-1958

ஆஸ்திரியர்

விலக்கு கொள்கை கண்டுபிடித்தவர் ; நியூட்ரினோவின் இருப்பதை கூறியவர்.

என்ரிகோ பெர்மி

1901-1954

இத்தாலியன்

அணுசக்தி சங்கிலி எதிர்வினை தொடர்பான சோதனைகளை நடத்தியவர். பீட்டா சிதைவின் கோட்பாட்டை உருவாக்கியவர்.

வெர்னர் ஹெய்சன்பெர்க்

1901-1976

ஜெர்மானியர்

குவாண்டம் மெக்கானிக்ஸ் உருவாக்க பங்களித்தவர்.

எர்னஸ்ட் ஆர்லாண்டோ லாரன்ஸ்

1901-1958

அமெரிக்கர்

சைக்ளோட்ரோனை கண்டுபிடித்தவர்.

பால் அட்ரியன் மௌரிஸ் டிராக்

1902-1984

பிரிட்டிஷ்காரர்

குவாண்டம் எலக்ட்ரோடினாமிக்ஸ் கண்டுபிடிக்க உதவியவர். ஆன்டிமைட்டர் இருப்பதைக் கணித்தவர்.

ஆல்ஃபிரெட் கஸ்டெர்

1902-1984

பிரஞ்சுக்காரர்

ஒளியியல் முறைகளை கண்டுபிடித்தவர்

யூஜின் விக்னர்

1902-1995

ஹங்கேரியர்

அணு கோட்பாட்டு மற்றும் அணு இயற்பியலில் பங்களித்தவர்.

செசில் எஃப். பவல்

1903-1969

பிரிட்டிஷ்காரர்

அணுசக்திப் படிப்புகளைப் படிக்கும் புகைப்பட எமுல்ஷன் முறையை உருவாக்கியவர். சார்ஜ் பியோன் கண்டுபிடித்தவர்.

எர்னஸ்ட் வால்டன்

1903-1995

ஐரியர்

முதல் துகள் முடுக்கத்தை கண்டுபிடித்தார்

பவெல் ஏ. செரென்கோவ்

1904-1990

சோவியத்

"செரென்கோவ் விளைவு" கண்டுபிடித்தவர்.

கார்ல் டேவிட் ஆண்டர்சன்

1905-1991

அமெரிக்கர்

மியுயான் மற்றும் பாஸிட்ரானை கண்டுபிடித்தவர்.

ஃபெலிக்ஸ் ப்ளாக்

1905-1983

சுவிஸ்காரர்

என்எம்ஆர் நுட்பத்தை மேம்படுத்துவதில் பங்களித்தவர். உலோகங்கள் கோட்பாட்டில் பங்களித்தவர்.

சர் நெவில் எஃப். மோட்

1905-1996

பிரிட்டிஷ்காரர்

குவாண்டம் கோட்பாட்டை அணுசக்தியில் சிக்கலான நிகழ்விற்குப் பயன்படுத்துவதன் மூலம் கோட்பாட்டு ரீதியான சுருக்கமான இயற்பியலுக்கான பங்களித்தவர்.

எமிலியோ சீர்கே

1905-1989

இத்தாலியர்

ஆண்டி ப்ரோட்டான் மற்றும் டெக்னிடியத்தைக் கண்டுபிடித்தவர்.

ஹான்ஸ் பெத்தே

1906-2005

ஜெர்மானியர்

அணு இயற்பியல் கோட்பாட்டில் பங்களித்தவர்.

மரியா கோபர்பெர்ட்-மேயர்

1906-1972

ஜெர்மானியர்

அணு கட்டமைப்பில் பங்களித்தவர்.

எர்ன்ஸ்ட் ரஸ்கா

1906-1988

ஜெர்மானியர்

முதல் எலக்ட்ரான் நுண்ணோக்கி வடிவமைத்தவர்

ஷின்-இசிரோ டோமோனாகா

1906-1979

ஜப்பானியர்

குவாண்டம் எலக்ட்ரோடினாமிக்ஸ் உருவாக்கியவர்

ஜே. ஹன்ஸ் டி. ஜென்சென்

1907-1973

ஜெர்மானியர்

அணு கட்டமைப்பில் பங்களித்தவர்.

எட்வின் எம். மில்மில்லன்

1907-1991

அமெரிக்கர்

ட்ரான்ஸ்னுரியம் எலமெண்ட்ஸ் பற்றிய கண்டுபிடிப்புகளை செய்தார்.

ஹிடிக்கி யுகவா

1907-1981

ஜப்பானியர்

பியோன் இருப்பதை கண்டறிந்தவர்.

ஜான் பார்டீன்

1908-1991

அமெரிக்கர்

டிரான்சிஸ்டர் விளைவுகளை கண்டுபிடித்தவர். மீக்கடத்தல் கோட்பாட்டை உருவாக்கியவர்.

இலியா எம். பிராங்

1908-1990

சோவியத்

"செரென்கோவ் விளைவு" கண்டுபிடித்தவர். மேலும் காமா கதிர்கள் மூலம் ஜோடி உருவாக்கும் சோதனைகளை மேற்கொண்டவர்.

லெவ் லண்டுவே

1908-1968

சோவியத்

மீக்கடத்தல் மற்றும் சூப்பர்ஃபியுடிலிட்டி போன்ற தத்துவங்களில் பங்கேற்றவர்.

சுப்ரமணியன் சந்திரசேகர்

1901-1958

இந்தியர்

நட்சத்திரங்கள் சம்பந்தபட்ட ஆய்வில் பங்கேற்றவர்.

வில்லியம் ஷாக்லி

1910-1989

அமெரிக்கர்

டிரான்சிஸ்டர் விளைவைக் கண்டுபிடித்தவர்.

லூயிஸ் வால்டர் அல்வாரெஸ்

1911-1988

அமெரிக்கர்

பெரிய குமிழி அறைகளை கட்டியதோடு, பல குறுகிய வாழ்நாள் உடைய ஹாட்ரான்ஸை கண்டுபிடித்தவர். டைனோசர் அழிவு சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டவர்.

வில்லியம் பௌலர்

1911-1995

அமெரிக்கர்

அணுசக்தி வினைகளை மேற்கொண்டவர். வேதியியல் கூறுகள் உருவாக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டவர்.

பால்கார் குப்

1911-1993

அமெரிக்கர்

எலக்ட்ரான் ஒரு முரண்பாடான காந்தக் தன்மை கொண்டது என்பதை நிருபித்தவர்.

எட்வர்ட் மில்ஸ் பர்செல்

1912-1997

அமெரிக்கர்

அணுக்கரு ஒத்ததிர்வு உறிஞ்சுதல் முறை உருவாக்கியவர்.

க்ளென் டி. சீபோர்வ்

1912-1999

அமெரிக்கர்

புளூடானியத்தை கண்டுபிடித்தவர்.

வில்லிஸ் ஈ. லாம்ப், ஜூனியர்.

1913-2008

அமெரிக்கர்

ஹைட்ரஜன் அமைப்பைக் கண்டுபிடித்தவர்.

ராபர்ட் ஹோஃப்ஸ்டாடர்

1915-1990

அமெரிக்கர்

உயர் ஆற்றல் எலக்ட்ரான் சிதறலைக் கொண்டு அணுக்கருக்களில் சார்ஜ் பகிர்தலை அளவிட்டவர்.

நார்மன் எஃப். ராம்சே, ஜூனியர்.

1915-2011

அமெரிக்கர்

தனிப்பட்ட அலையியற்றி முறையை உருவாக்கினார். இது சீசியம் கடிகார முறை வருவதற்கு அடிப்படையாக இருந்தது.

கிளிஃபோர்ட் ஜி. ஷல்

1915-2001

அமெரிக்கர்

நியூட்ரான் சிதறல் முறையைக் கண்டுபிடித்தார். இது அணுக் கட்டமைப்பை கண்டறிய உதவியது.

சார்லஸ் எச் டவுன்ஸ்

1915-2015

அமெரிக்கர்

அமோனியா பயன்படுத்தி நுண்ணலை கதிர்வீச்சை உருவாக்கியவர்.

பிரான்சிஸ் கிரிக்

1912-1999

ஆங்கிலேயர்

டி.என்.ஏ யின் இரட்டை ஹெலிக்ஸ் கட்டமைப்பை கண்டறிந்தவர்.

மாரிஸ் வில்கின்ஸ்

1916-2004

பிரிட்டிஷ்காரர்

டி.என்.ஏ. வின் கட்டமைப்பை ஆய்வு செய்தவர்.

பெர்ட்ராம் என். ப்ரோக்ஹவுஸ்

1918-2003

கனடியர்

ஸ்பெக்ட்ரோஸ்கோபி நுட்பத்தை உருவாக்கியவர்.

ரிச்சர்ட் பி. ஃபேய்ன்மேன்

1918-1988

அமெரிக்கர்

குவாண்டம் எலக்ட்ரோடினாமிக்ஸை உருவாக்கியவர். ஃபேய்ன்மேன் வரைபடங்க்ளை உருவாக்கியவர்.

பிரடெரிக் ரைன்ஸ்

1918-1998

அமெரிக்கர்

எலக்ட்ரான் ஆன்டினூட்ரினோ இருப்பதைக் கண்டுபிடித்தவர்.

ஜூலியன் சுவிங்கர்

1918-1994

அமெரிக்கர்

குவாண்டம் எலக்ட்ரோடினாமிக்ஸை உருவாக்கியவர்.

காய் எம். சீக்பான்

1918-2007

ஸ்விடிஷ்காரர்

உயர்தர எலக்ட்ரான் ஸ்பெக்ட்ரோஸ்கோபி உருவாவதற்கு பங்களித்தவர்.

நிக்கோலாஸ் ப்ளூம்பெர்க்

1920

டச்சுக்காரர்

லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி உருவாக்கத்திற்கு பங்களித்தவர்.

ஓவன் சேம்பர்லெய்ன்

1920-2006

அமெரிக்கர்

ஆண்டிபுரோட்டனைக் கண்டுபிடித்தவர்.

யோய்சிரோ நம்பி

1921-2015

ஜப்பானியர்

அடிப்படை துகள் கோட்பாட்டிற்கு பங்களித்தவர்.

ஆண்ட்ரி சாகரோவ்

1921-1989

ரஷ்யர்

சோவியத் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என் அழைக்கப்படுபவர். மனித உரிமைகளுக்கான போராட்டம், ஆயுதக் குறைப்பு மற்றும் அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக்காக நோபல் பரிசு வழங்கபட்டது.

ஆர்தர் லியோனார்ட் ஷாவ்லோ

1921-1999

அமெரிக்கர்

லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி உருவாக்கத்திற்கு பங்களித்தவர்.

ஜாக் ஸ்டெய்ன்பெர்கர்

1921-

ஜெர்மானியர்

துகள் இயற்பியலில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தவர்.

நிகோலாய் பாசோவ்

1918-1998

அமெரிக்கர்

குவாண்டம் எலக்ட்ரானிக்ஸில் பங்களித்தவர்.

ஏஜ் போஹ்ர்

1922-2009

டேனிஷ்

அணுக்கரு ஆய்வில் பங்களித்தவர்.

லியோன் லெட்மேன்

1922-

அமெரிக்கர்

மியோன் நியூட்ரினோ கண்டுபிடிப்புக்கு பங்களித்தவர்.

சென் நிங் யங்

1922

சீனர்

பலவீனமான சமமான மீறல் ஒத்துழைப்பு தொடர்புகளில் பங்களித்தவர்.

வால் லாக்ஸ்ட்ன் ஃபிட்ச்

1923-2015

அமெரிக்கர்

நியுட்ரோன் கான்ஸின் சீர்குலைவுகளைக் கண்டுபிடித்தவர்.

ஜேக் எஸ். கில்பி

1923-2005

அமெரிக்கர்

இவர் கண்டுபிடித்த மைக்ரோசிப்தான் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் துறைக்கு அடிப்படையாக அமந்தது.

வில்லார்டு பாயில்

1924-2011

கனடியர்

சிசிடியைக் கண்டுபிடித்தவர்.

ஜார்ஜ்ஸ் சார்பக்

1924-2010

பிரஞ்சுக்காரர்

மல்டிவயர் ப்ரபோஷ்னல் சேம்பரைக் கண்டுபிடித்தவர்.

ராய் ஜே. கிளெபர்

1925-

அமெரிக்கர்

குவாண்டம் ஒளியியல் மற்றும் உயர் ஆற்றல் மோதல்களின் தத்துவத்தில் முக்கிய பங்களிப்பை செய்தார்.

சைமன் வான் டெர் மீர்

1925-2011

டச்சுக்காரர்

இவரது பல சோதனைகள் கேரியர்ஸைக் கண்டுபிக்க வழி வகுத்தது.

டொனால்ட் ஏ கிளேசர்

1926-2013

அமெரிக்கர்

குமிழி சேம்பரைக் கண்டுபிடித்தவர்.

ஹென்றி டபிள்யூ. கெண்டல்

1926-1999

அமெரிக்கர்

எலெக்ட்ரான் சிதறல் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதன் மூலம் அணுக்கரு உள் அமைப்பில் எலக்ட்ரான் மற்றும் நியுட்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பென் மொட்டெல்சன்

1926-

அமெரிக்கர்

அணு தொடர்பான தத்துவங்களைத் தந்தவர்.

சுங்-டாவ் லீ

1926-

சீனர்

பலவீனமான சமமான மீறல் ஒத்துழைப்பு தொடர்புகளில் பங்களித்தவர்.

அப்துஸ் சலாம்

1926-1996

பாகிஸ்தான்

காஜ் ஃபீல்டு தத்துவத்தை உருவாக்கியவர்.

கே. அலெக்சாண்டர் முல்லர்

1927-

சுவிஸ்

முதல் செராமிக் மீக்கடத்திகளை உருவாக்கியவர்.

மார்ட்டின் எல் பெர்ல்

1927-2014

அமெரிக்கர்

டு லெப்டானைக் கண்டுபிடித்தவர்.

முர்ரே ஜெல்-மன்

1929-

அமெரிக்கர்

துகள்களுக்கான விளக்கத்தை தந்தவர். ஒமேகா - துகள் இருப்பதைக் கணித்தவர்.

ருடால்ப் லுட்விக் மோஸ்பூவர்

1929-2011

ஜெர்மானியர்

காமா கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர். 'மஸ்பௌர் விளைவை” கண்டுபிடித்தவர்.

ரிச்சர்ட் இ. டெய்லர்

1929-

கனடா

எலெக்ட்ரான் சிதறல் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதன் மூலம் அணுக்கரு உள் அமைப்பில் எலக்ட்ரான் மற்றும் நியுட்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

லியோன் என். கூப்பர்

1930-

அமெரிக்கர்

மீக்கடத்தல் தத்துவங்களில் பங்கேற்றவர்.

ஜெரோம் ஐ.ஃப்ரிட்மேன்

1930-

அமெரிக்கர்

எலெக்ட்ரான் சிதறல் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதன் மூலம் அணுக்கரு உள் அமைப்பில் எலக்ட்ரான் மற்றும் நியுட்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜார்ஜ் ஈ ஸ்மித்

1930-

அமெரிக்கர்

சிசிடியைக் கண்டுபிடித்தவர்.

ஜேம்ஸ் டபிள்யூ. குரோன்

1931-

அமெரிக்கர்

நியுட்ரோன் கான்ஸின் சீர்குலைவுகளைக் கண்டுபிடித்தவர்.

டேவிட் எம். லீ

1931-

அமெரிக்கர்

ஐசோடோப்பு ஹீலியம் -3 -ஐ கண்டுபிடித்தவர்.

பர்டன் ரிக்டர்

1930-

அமெரிக்கர்

இவரது பரிசோதனை குரோமோனியம் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது.

ஜான் ராபர்ட் ஷெரிஃபர்

1931-

அமெரிக்கர்

மீக்கடத்தல் தத்துவங்களில் பங்கேற்றவர்.

பியர்ரே-கில்லெஸ் டி கென்ஸ்

1932-2007

பிரஞ்சுக்காரர்

திரவ படிகம் மற்றும் பாலிமர் தொடர்பான தத்துவங்களை மேற்கொண்டவர்.

ஷெல்டன் க்ளாஷவ்

1930-

அமெரிக்கர்

காஜ் ஃபீல்டு தத்துவத்தை உருவாக்கியவர்.

மெல்வின் ஸ்வார்ட்ஸ்

1932-2006

அமெரிக்கர்

நியூட்ரினோக்களை உருவாக்கவும், உபயோகிக்கவும் முடியும் என கூறியவர்.

க்ளாட் கோஹென்-டானுட்ஜி

1933-

பிரஞ்சுக்காரர்

லேசர் வெளிச்சத்தைக் கொண்டு ஹீலியம் அணுக்களை 0.18 μK வெப்பநிலை வரை குளிர்விக்க முடியும் என கூறியவர்.

சார்லஸ் கே. காவ்

1933-

சீனர்

ஃபைபர் ஆப்டிக்ஸ் உருவாக்கத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

ஆர்னோ ஏ பென்சியாஸ்

1933-

ஜெர்மானியர்

காஸ்மிக் நுண்ணலை கதிர்வீச்சினைக் கண்டுபிடித்தவர்

ஹெய்ன்ரிச் ரோஹர்

1933-2013

சுவிஸ்

ஸ்கேனிங் டன்னலிங் நுண்ணோக்கியை வடிவமைத்தவர்.

ஸ்டீவன் வீன்பெர்க்

1933-

அமெரிக்கர்

காஜ் ஃபீல்டு தத்துவத்தை உருவாக்கியவர்.

கார்லோ ரூபியா

1934-

இத்தாலியர்

இவரது பல சோதனைகள் கேரியர்ஸைக் கண்டுபிக்க வழி வகுத்தது.

ராபர்ட் டபிள்யூ. வில்சன்

1936-

அமெரிக்கர்

காஸ்மிக் நுண்ணலை கதிர்வீச்சினைக் கண்டுபிடித்தவர்

சாமுவேல் சிசி டிங்

1936-

அமெரிக்கர்

இவரது பரிசோதனை குரோமோனியம் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது.

கென்னத் வில்சன்

1936-2013

அமெரிக்கர்

நிலைமாற்ற குழு முறைகளை கண்டுபிடித்தார்;

ராபர்ட் சி. ரிச்சர்ட்சன்

1937-2013

அமெரிக்கர்

ஐசோடோப்பு ஹீலியம் -3 -ஐ கண்டுபிடித்தவர்.

ஆல்பர்ட் பெர்ட்

1938-

பிரஞ்சுக்காரர்

ஜெயண்ட் மேக்னட்டோரெசிஸ்டன்சை கண்டுபிடித்தார். இது ஜிகாபைட் ஹார்ட் டிஸ்க்களில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்தது.

பிரையன் ஜோசப்சன்

1940-

வெல்ஷ்

சூப்பர்கரண்ட் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

டொஷிஹைட் மஸ்காவா

1940-

ஜப்பானியர்

CP- ன் மீறல் தத்துவங்களில் பங்கேற்றார்.

டேவிட் ஜே. கிராஸ்

1941-

அமெரிக்கர்

”ஆஸ்பிப்டோடிக் ஃப்ரீடம் “ தத்துவங்களில் பங்கேற்றார். ஸ்ட்ரிங் தத்துவ வளர்ச்சிக்கு உதவியவர்.

க்ளாஸ் வான் க்ளிடிங்

1943-

ஜெர்மானியர்

குவாண்டம் ஹால் விளைவைக் கண்டுபிடித்தவர்.

மக்காடொ கொபாயாஷி

1944-

ஜப்பானியர்

CP- ன் மீறல் தத்துவங்களில் பங்கேற்றார்.

டக்ளஸ் டி. ஒசிரோஃப்

1945-

அமெரிக்கர்

ஐசோடோப்பு ஹீலியம் -3 -ஐ கண்டுபிடித்தவர்.

ஜெரார்ட் டி 'ஹூஃப்ட்

1946-

டச்சுக்காரர்

குவாண்டம் தியரி, ப்ளாக் ஹோல்ஸ், காஜ் தியரி போன்றவற்றில் பங்களித்துள்ளார்.

கெர்ட் பினைக்

1947-

ஜெர்மானியர்

ஸ்கேனிங் டன்னலிங் நுண்ணோக்கியை வடிவமைத்தவர்.

ஸ்டீவன் சூ

1948-

அமெரிக்கர்

டாப்ளர் குளிரூட்டும் முறையை உருவாக்கியவர்.

வில்லியம் டி. பிலிப்ஸ்

1948-

அமெரிக்கர்

சீமன் ஸ்லோவர் சாதணத்தை உருவாக்கியவர்.

ஹக் டேவிட் பொலிட்ஸர்

1949-

அமெரிக்கர்

”ஆஸ்பிப்டோடிக் ஃப்ரீடம் “ தத்துவங்களில் பங்கேற்றார். ஸ்ட்ரிங் தத்துவ வளர்ச்சிக்கு உதவியவர்.

ஜோகன்னஸ் ஜார்ஜ் பெட்னோர்ஸ்

1950-

ஜெர்மானியர்

முதல் செராமிக் மீக்கடத்திகளை உருவாக்கியவர்.

ராபர்ட் லாஹ்லின்

1950-

அமெரிக்கர்

குவாண்டம் ஃப்லுய்டு தேற்றத்தை உருவாக்கினார்.

பிராங்க் வில்கெக்

1951-

அமெரிக்கர்

”ஆஸ்பிப்டோடிக் ஃப்ரீடம் “ தத்துவங்களில் பங்கேற்றார்.

ஆண்ட்ரே கீம்

1958-

டச்சு ரஷியன்

கிராபீன் என்றழைக்கப்படும் ஒற்றை அணு அடுக்குகளை பிரித்தெடுக்கும் ஒரு எளிய முறையை கண்டுபிடித்தார்

கோன்ஸ்டான்டின் நோவோஸெலோவ்

1974-

ரஷியன்-பிரிட்டிஷ்

கிராபீன் என்றழைக்கப்படும் ஒற்றை அணு அடுக்குகளை பிரித்தெடுக்கும் ஒரு எளிய முறையை கண்டுபிடித்தார்

மற்றவர்கள்

வாலஸ் கிளெமெண்ட் சபைன்

1868-1919

அமெரிக்கர்

கட்டடக்கலை ஒலியியல் அறிவியலை நிறுவியவர்.

ஆர்னால்ட் சோமர்ஃபீல்ட்

1868-1951

ஜெர்மானியர்

அணுக்களின் சுற்றுப்பாதயை போர் மாதிரியில் இருந்து நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு பொதுமைப்படுதினார். காந்த குவாண்டம் எண்ணை அறிமுகப்படுதினார்.

லிஸ் மீட்னர்

1878-1968

ஆஸ்திரியர்

யுரேனியம் மீது நியூட்ரான் குண்டுவீச்சின் விளைவுகளை ஆய்வுசெய்தவர். புரோட்டினினியத்தைக் கண்டுபிடித்தவர்.

பால் எரென்பெஸ்ட்

1880-1933

ஆஸ்திரியர்

ரொடெடிங் பாடிஸில் குவாண்டம் மெக்கானிஸத்தைப் பயண்படுதியவர்.

தியோடர் வான் கார்மான்

1881-1963

ஹங்கேரியர்

திரவ இயக்கவியல், கொந்தளிப்புக் கோட்பாடு மற்றும் சூப்பர்சோனிக் விமானம் பற்றிய நமது புரிதலுக்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியவர்

வால்டர் மேய்ஸ்னர்

1882-1974

அமெரிக்கர்

"மேய்ஸ்னர் விளைவைக்” கண்டுபிடித்தவர்.

எம்மி நோட்ஹெர்

1882-1935

ஜெர்மானியர்

நோட்ஹெர் தேற்றத்தை உருவாக்கியவர்.

ஹன்ஸ் கிகர்

1883-1945

ஜெர்மானியர்

ஆல்ஃபா துகள்களுக்கான சார்ஜ்-மாஸ் ரேஷியொவினை அளவிட உதவியவர்.

ஹெர்மன் வெய்ல்

1885-1955

ஜெர்மானியர்

மின்காந்தவியலை பொது சார்பியலில் இணைக்க முயர்சித்தவர்.

ஆர்தர் ஜெஃப்ரி டெம்ப்ஸ்டர்

1886-1950

கனடா

ஐசோடோப்பு யூரேனிய -235 கண்டுபிடித்தவர்.

ஹென்றி மோஸ்லி

1887-1915

பிரிட்டிஷ்காரர்

நவீன தனிம அட்டவணையை உருவாக்கினார்.

சர் ராபர்ட் வாட்சன்-வாட்

1892-1973

ஸ்காட்ஸ்

ரேடாரை உருவாக்கியவர்.

சத்யேந்திர போஸ்

1894-1974

இந்தியர்

போஸான்களை கையாளுவதற்கான புள்ளிவிவர முறையை உருவாக்கியவர்

ஆஸ்கர் க்ளீன்

1894-1977

ஸ்வீடிஷ்

களுசா க்ளெய்ன் கோட்பாட்டை உருவாக்கியவர். எலெக்ட்ரான்-ஃபோட்டான் சிதறலை விவரிக்கும் க்ளீன்-நிஷினா ஃபார்முலாவை உருவாக்கியவர்.

விளாடிமிர் ஏ. ஃபாக்

1898-1974

ரஷியர்

குவாண்டம் தியரிக்கு அடிப்படை பங்களிப்புகளை அளித்தவர்.

லியோ சில்லாட்

1898-1964

ஹங்கேரியர்

அணு தொடர் வினைக்கான சாத்தியத்தை முதன் முதலில் பரிந்துரைத்தவர்.

பியர் ஆகெர்

1899-1993

பிரஞுக்காரர்

ஆகெர் விளைவைக் கண்டுபிடித்தவர்.

எர்ன்ஸ்ட் ஐசிங்

1900-1998

ஜெர்மானியர்

ஃபெர்ரோமாக்னிடிசியத்தின் ஐசிங் மாதிரி உருவாக்கியவர்.

ஃபிரிட்ஸ் லண்டன்

1900-1954

ஜெர்மானியர்

மீக்கடத்தல் கொள்கையை உருவாக்கியவர்.

சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர்

1900-1985

அமெரிக்கர்

ரிக்டர் அளவு முறையை உருவாக்கியவர்.

ஜார்ஜ் இ அன்லென்பெக்

1900-1988

டச்சுக்காரர்

எலெக்ட்ரான் ஒரு இண்ட்ரின்சிக் ஸ்பின் என்பதைக் கண்டுபிடித்தவர்.

ராபர்ட் ஜே வான் டி ஃக்ராஃப்

1901-1967

அமெரிக்கர்

வான் டி ஃக்ராஃப் நிலைமின்னியல் ஜெனெரேட்டரைக் கண்டுபிடித்தவர்

சாமுவேல் ஆபிரகாம் கௌட்ஸ்மித்

1902-1978

டச்சுக்காரர்

எலெக்ட்ரான் ஒரு இண்ட்ரின்சிக் ஸ்பின் என்பதைக் கண்டுபிடித்தவர்.

இகோர் வாசிலைவிச் கர்கடோவ்

1903-1960

சோவியத்

சோவியத் அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டு திட்டங்களுக்கு தலைமை ஏற்றவர்.

ஜான் வான் நியூமன்

1903-1957

ஹங்கேரியர்

குவாண்டம் மெக்கானிக்ஸில் பங்களித்தவர்.

ஜார்ஜ் கமோவ்

1904-1968

ரஷியர்

ஹைட்ரஜன் இணைவு மூலம் சோலார் ஆற்றலுக்கு வித்திட்டவர்.

ஜே ராபர்ட் ஓப்பன்ஹேய்மர்

1904-1967

அமெரிக்கர்

அணுப்பிளவு வெடிகுண்டு தயாரிக்க தலைமைத் தாங்கியவர்.

சர் ருடால்ப் பெய்ர்ல்ஸ்

1907-1995

ஜெர்மானியர்

அணுப்பிளவு வெடிகுண்டு தயாரிப்பில் பங்கேற்றவர்.

எட்வர்ட் டெல்லர்

1908-2003

ஹங்கேரியர்

அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகள் உருவாக்க உதவினார்

விக்டர் எஃப். வைஸ்ஸ்காஃப்

1908-2002

ஆஸ்திரியர்

குவாண்டம் மின்னியக்கவிசையியல், அணு கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் துகள் இயற்பியல் போன்ற தத்துவங்களில் பங்களித்தவர்

ஹோமி ஜஹாங்கீர் பாபா

1909-1966

இந்தியர்

இந்தியாவில் அணு ஆராய்ச்சி திட்டங்களை ஆரம்பித்தவர். காஸ்மிக் கதிர்களில் சோதனைகளை மேற்கொண்டவர். எலக்ட்ரான்-பாஸிட்ரான் சிதறலைக் கணக்கிட்டவர்.

நிகோலாய் என். போகோலோபவ்

1909-1992

ரஷியர்

சூப்பர்ப்ளுய்டிட்டி நுண்ணோக்கி கோட்பாட்டில் பங்களித்தவர்.

மாரிஸ் கோல்தாபர்

1911-2011

ஆஸ்திரியர்

நியூட்ரானின் நிறையை அளந்தவர். பீட்டா கதிர்கள் அணு எலக்ட்ரான்களை ஒத்திருந்தன என்று நிருபித்தவர். மாபெரும் இருதுருவ அதிர்வு வழிவகுத்தவர்.

சியன்-ஷிங் வு

1912-1997

சீனர்

அணு பீட்டா சிதைவில் சமநிலை பாதுகாக்கப்படுவதில்லை என்று நிரூபித்தவர்.

ஹென்றி ப்ரிமாக்காஃப்

1914-1983

ரஷியர்

ஸ்பின் வேவ் தியரியை உருவாக்கியவர். ப்ரிமாக்காஃப் விளைவை உருவாக்கியவர்.

ராபர்ட் ராத்பன் வில்சன்

1914-2000

அமெரிக்கர்

கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஃபெர்மிலேப் மற்றும் அணு ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு வகித்தவர். அணு விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு உருவாக்கத்தில் ஒரு தலைவர்;

விட்டலி எல். கின்ஸ்பர்க்

1916-2009

ரஷியர்

மீக்கடத்தல் மற்றும் வானியற்பியலில் பங்களித்தவர்.

ராபர்ட் ஈ மார்ஷாக்

1916-1993

அமெரிக்கர்

துகள் இயற்பியலில் பங்களித்தவர்.

வொல்ப்காங் கே. எ. பானஃப்ஸ்கி

1919-2007

ஜெர்மானியர்

நியுட்ரல் -பியோனைக் கண்டுபிடித்தவர்.

ராபர்ட் வி பவுண்ட்

1919-2010

கனடா

க்ராவிடேஷ்னல் ரெட்ஷிப்ட்டை அளந்தவர்.

வெர்னான் டபிள்யூ ஹியூஸ்

1921-2003

அமெரிக்கர்

QED தொடர்பை சோதிக்க சோதனைகளை செய்தவர்.

ஃப்ரீமேன் ஜே டைசன்

1923-

பிரிட்டிஷ்காரர்

குவாண்டம் ஃபீல்டு தியரியில் பங்களித்தவர்.

கால்வின் எஃப் குவேட்

1923-

அமெரிக்கர்

நானோ அறிவியலில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

லிங்கன் வொல்பென்ஸ்டெயின்

1923-2015

அமெரிக்கர்

நியூட்ரினோ குறித்த ஆய்வில் பங்கேற்றவர்.

ஜேம்ஸ் ஈ ஸிமர்மேன்

1923-1999

அமெரிக்கர்

அதிர்வெண் மீக்கடத்தி குவாண்டம் குறுக்கீடு சாதனத்தை கண்டுபிடித்தவர்.

ஃபெலிக்ஸ் ஹன்ஸ் போஹம்

1924-

ஸ்விஸ்

அணு இயற்பியலில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

ஏர்னஸ்ட் எம். ஹென்லி

1924-

ஜெர்மனியர்

அணு இயற்பியலில் முக்கிய பங்கு வகித்தவர்.

பெனாய்ட் மாண்டெல்ரோட்

1924-2010

பிரஞ்சுக்காரர்

ஃப்ராக்டல்ஸ் தியரியை உருவாக்கியவர்

டி ஆலன் ப்ரோம்லே

1926-2005

கனடியர்

அமெரிக்காவின் தலைமை அறிவியல் ஆலோசகராக பணியாற்றியவர்.

சிட்னி டி. ட்ரேல்

1926-

அமெரிக்கர்

துகள் இயற்பியல் மற்றும் குவாண்டம் மின்னியக்கவிசையியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்

ஆல்பர்ட் வி க்ரூவ்

1901-1967

பிரிட்டிஷ்காரர்

முதல் நடைமுறை ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி உருவாக்கியவர்

ஜான் ஸ்டீவர்ட் பெல்

1928-1990

ஐரியர்

குவாண்டம் மெக்கானிக்ஸில் பங்களித்தவர்.

ஸ்டான்லி மண்டல்ஸ்டாம்

1928-2016

தென் ஆப்பிரிக்கர்

இரட்டை ஒளிச்சிதறலில் முக்கிய பங்களித்தவர்

பீட்டர் ஹிக்ஸ்

1929-

பிரிட்டிஷ்காரர்

ஹிக்ஸ் மெக்கானிஸத்தை முன்மொழிந்தவர்.

அக்கோடோ அரிமா

1930-

ஜப்பானியர்

அணுக்களுக்கான போஸான் மாடலை உருவாக்கியவர்

மில்டன்ட் எஸ் ட்ராஸ்ஸாஸ்

1930-

அமெரிக்கர்

திட நிலை இயற்பியலில் பங்களித்தவர். குறிப்பாக நானோகுழாய்கள் மற்றும் கார்பன் அடிப்படையிலான பொருட்களில் கவனம் செலுத்தியவர்.

ஜோயல் லௌவிட்ஸ்

1930-

செக்

புள்ளியியல் மெக்கானிக்ஸில் பங்களித்தவர்.

ஜான் பி. ஸ்கிஃபர்

1930-

ஹங்கேரியர்

அணு அமைப்பில் பங்களித்தவர்.

டி கென்னத் ஃபவுலர்

1931-

அமெரிக்கர்

பிளாஸ்மா இயற்பியல் மற்றும் காந்த இணைவு தேற்றத்தில் பங்களித்தவர்.

டல்லியோ ரெஜி

1931-2014

இத்தாலியர்

ரெஜி தியரத்தை உருவாக்கியவர்.

ஆஸ்கார் வாலஸ் கிரீன்பெர்க்

1932-

அமெரிக்கர்

நிறத்தை குவாண்டம் எண்ணாக அறிமுகப்படுத்தியவர்.

ஜான் டிர்க் வலேகா

1932-

அமெரிக்கர்

அணுக்கருவின் காந்த தன்மையை அறிந்து கொள்வதற்கு பங்களித்தவர்

டேனியல் க்ளெப்னர்

1932-

அமெரிக்கர்

ஹைட்ரஜன் மேசரை கண்டுபிடித்தவர்.

ஜெப்ரி கோல்ட்ஸ்டோன்

1933-

பிரிட்டிஷ்காரர்

கோல்ட்ஸ்டோன் போஸன்களில் பங்களித்தவர்.

 

ஜான் என் பஹால்

1934-2005

அமெரிக்கர்

சோலார் நியூட்ரான்கள் மற்றும் குவாசார்கள்களை புரிந்து கொள்ள முக்கிய பங்களித்தவர்.

ஜேம்ஸ் பிஜர்க்கன்

1934-

அமெரிக்கர்

துகள் இயற்பியல் மற்றும் குவாண்டம் தியரில் பங்களித்தவர்.

லூத்விக் ஃபடீவ்

1934-

ரஷியர்

குவாண்டம் கோட்பாடு, கணக்கு இயற்பியலில் பங்களித்தவர். ஃப்டீவ் சமன்பாட்டை உருவாக்கியவர்.

டேவிட் ஜே. டால்ஸ்

1934-

ஸ்காட்டிஷ்

குவாண்டம் ஹால் விளைவில் பங்களித்தவர்.

பீட்டர் ஏ கர்ருதெர்ஸ்

1935-1997

அமெரிக்கர்

குவாண்டம் ஆப்டிக்ஸ், அடிப்படைத் துகள் இயற்பியல், மற்றும் ஃபீல்டு தியரியில் பெரும் பங்களித்தவர்.

கோர்டன் ஏ. பேம்

1935-

அமெரிக்கர்

சூப்பர்ப்ளுய்டிட்டி, புள்ளிவிவர இயற்பியல், அணு இயற்பியல் போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவர்.

ஸ்டான்லி ஜெ ப்ராட்ஸ்கி

1940-

அமெரிக்கர்

உயர் ஆற்றல் இயற்பியலில் முக்கிய பங்காற்றியவர்.

ஹைம் ஹாரரி

1940-

இஸ்ரேலியர்

டாப் குவார்க்கை கண்டுபிடித்தவர்.

கிப் எஸ். தோர்ன்

1940-

அமெரிக்கர்

பிளாக் ஹோல்ஸ் மற்றும் க்ராவிட்டேஷனல் ரேடியேஷன் பற்றி அறிந்துகொள்ள உதவியவர்

பிரான்செஸ்கோ

1942-

இத்தாலியர்

அணுக்களுக்கான போஸான் மாடலை உருவாக்கியவர்

கேப்ரியே வெனிசியானோ

1942-

இத்தாலியர்

ஸ்ட்ரிங் தியரியை உருவாக்கியவர்.

கிறிஸ் க்விக்

1944-

அமெரிக்கர்

உயர் ஆற்றல் மோதல்களின் தத்துவத்தில் பங்களித்தவர்.

தாமஸ் ஏ விட்டென்

1944-

அமெரிக்கர்

ஸ்ட்ரக்சர்ட் ஃப்ளுயட் தியரியில் பங்களித்தவர்.

ஹோவர்ட் ஜியார்ஜி

1947-

அமெரிக்கர்

மாடர்ன் QCD மாடலை உருவாக்கியவர்.

நாதன் இஸ்கூர்

1947-2001

அமெரிக்கர்

குவார்க் அமைப்புகளை உருவாக்க பங்களித்தவர்.

எட்வர்ட் விப்டன்

1951-

அமெரிக்கர்

மேனிஃபொல்ட் தியரி மற்றும் ஸ்ட்ரிங் தியரியில் பங்களித்தவர்.

ரால்ப் சார்லஸ் மெர்கில்

1952-

அமெரிக்கர்

மூலக்கூறு நானோதொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர். இணையத்தில் பாதுகாப்பான மொழிபெயர்ப்பிற்கு பங்களித்தவர்.

கிம் எரிக் ட்ரெக்ஸ்லெர்

1955-

அமெரிக்கர்

நானோ தொழில்நுட்பத்தின் தந்தை

நாதன் சீபெர்க்

1956-

இஸ்ரேலியர்

சிம்மெட்ரிக் தியரி மற்றும் ஸ்ட்ரிங் தியரில் பங்களித்தவர்.

ஸ்டீபன் வோல்ஃப்ராம்

1959-

பிரிட்டிஷ்காரர்

முதல் நவீன கணினியின் அல்ஜிப்ரா அமைப்பில் பங்களித்தவர்.


Source: http://cnr2.kent.edu/~manley/physicists.html