தொடக்கத்தில் கதைகள் இருந்தன

வேஸ் சாப்மன்

உங்களுடன் உரையாட வாய்ப்பினை ஏற்படுத்திய சாப்லைன் ஒயிட் அவர்களுக்கும், அடுத்து “நான் ஏன் கிருத்துவன் இல்லை” தொடரின் பெர்தாந்து ரஸ்ஸல், அவர்க்கும் நன்றியுடன் தொடங்குகிறேன். கடந்த ஆண்டு பேசிய பெர்தாந்து ரஸ்ஸலின் பேச்சாளர் லார்ரி கால்டர் காலடிதடத்தை பின்பற்றுவது மிகவும் கடினம். மரபியல் பகுத்தறிவு மற்றும் யதார்த்தவாதி கால்டர் கலந்துரையாடலை கடந்த ஆண்டு கலந்து கொண்டவர்கள் அறிவர். என்னுடைய கையாளும் முறைகள் சற்று வேறு வைகையை சேர்ந்தவை, மேலும் நான் கூறும் பலவற்றில் கால்டர் அவர்கள் பெரும்பாலும் வேறுபட்டு நிற்பார் என நம்பிக்கையுடன் கூறுகிறேன். அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணி உயர்வு பெற்று வேறு கல்லூரிக்கு சென்றுவிட்டார், அதனாலே நான் அவருடன் இவை தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இந்த பேச்சு முடிந்தபின் பார்வையாளர்களோடு உங்களுடன் கலந்துரையாடுவதை நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், அதற்காக நிறைய நேரம் செலவழிக்க முயற்சிக்கிறேன். பெர்தாந்து ரஸ்ஸலின் தொடரை பற்றிய விவாதங்கள் கருத்து வேறுபாடுகளுடனும் கூடிய பார்வையில் இருக்கவேண்டும் என்ற காரணமே, எனக்கு இங்கு இருக்க வாய்ப்பளிக்கிறது.

தொடங்கும்போதே சிக்கலக்களை அனுமதிக்கிறேன்: நான் ஒரு கிருத்துவன் அல்ல என எனது முழுமையான உணர்வுடன் என்னால் சொல்ல முடியாது. உண்மை என்னவெனில், என்னை அடையாளபடுத்த முதலானதாக அது இருக்க கூடாது என்பதே. மேலும், நான் ஒரு கிருத்துவனாக இருக்கும் அதே உணர்வில் நான் ஒரு பெளத்தவாதியாக, நாத்திகராக, தத்துவவியலராக, ஆன்மாவில் நம்பிக்கை உடையவனாக, தோயிஸ்ட்டாக, யூதனாக இருக்கிறேன். நான் ஒரு குழப்பமான மனிதன் என்று ஒப்புக்கொள்கிறேன், நான் பல விசயங்களில் குழம்பியதை விட, மதத்தைப் பற்றி குறைவாக குழப்பமடைந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய ஆதயாத்திர்காக, நான் கிருத்துவன் என்று அளவிட இந்த ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும்: 

    1. என் பெற்றோரிடம் பெரிய அளவிலான பக்தி இல்லாததால், நான் ஒரு கிறிஸ்தவனாக, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியப்பட்டேன். என் சிறிய வயதில் நாங்கள் வருடத்திற்கு இருமுறை சர்ச்சிற்கு சென்றோம். ஒருமுறை, அம்மா வாரத்திற்கு ஒருமுறை செல்ல முடிவெடுத்தார். ஆனால் முதல் ஞாயிறு அன்றே நானும், என் சகோதரியும் வம்பு வளர்த்துக்கொண்டதால் அந்த திட்டம் நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டது. ஏன் தந்தைக்கு இதனால் எல்லாம் தேவாயம் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படவேயில்லை, அவர் மதச்சுதந்திரத்தில் கொண்டிருந்த நம்பிக்கையை, முறைபடுத்தப்பட்ட மதம் வழங்கவில்லை. அவர் மிகவும் தனது மதத்துடன் தனிப்பட்ட போக்குடையவர். உண்மையில், இது கிறித்துவ உலக கண்ணோட்டத்தில் பேரசிரியராக செய்வதுக்கு நிகரானது என என் கல்லூரி வயதில் புரிந்துகொள்ளும்போது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். நான் பத்து வயதில் இருந்தபோது, இரவு உணவிற்கு முன் சொல்லும் கிருபையை நிறுத்திவிட்டோம். ஒரு நாள் நானும் ஏன் சகோதரியும் தேபாயம் செல்வது பற்றி பேசியபோது, நான் போகமல் இருப்பதை தேர்வு செய்தேன். நான் பதினைந்து வயதில் இருந்தபோதே என்னை ஒரு நாதிகவாதி, தத்துவவாதி என்று அழைத்துக்கொண்டேன். இப்போது நான் தவறாக இருந்தேன் என ஒப்புக்கொள்கிறேன்.

    2. நான் இன்னமும் கிறித்துமஸ் கொண்டாடுகிறேன், குறைந்தபட்சம் ஒரு கிருத்துமஸ் மரம் வைத்து, பரிசுகளை வாங்கி, கரோல்களைப் பாடி நானும் கொண்டாடுகிறேன். பிரார்த்தித்தல் எந்த உணர்வையும் எனக்கு வழங்குவதில்லை, ஏனெனில் நான் கடவுளின் மீது குறிப்பான எந்த நம்பிக்கையும் கொள்வதில்லை, ஆனாலும் வருடத்தின் அந்த பகுதியில் மட்டும் தெளிவற்ற சிந்தனையுடன் கிறித்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் அர்த்தத்தை அறிவதாக என்னைப்பற்றி கண்டறிந்துள்ளேன்.

    3. நான் கிறித்துவ மரபுகள் மற்றும் நம்பிக்கைகளால் முழுமையாக நனைந்த கலாச்சாரத்தில் வாழ்கிறேன். இது “நாம் யூதோ-கிறித்துவ கலாச்சாரத்தில் வாழ்கிறோம்” என்ற கூற்றுக்கு இணையானது அல்ல, நான் இதை தவறாக கருதுகிறேன் ஏனெனில் இது அமெரிக்காவில் உள்ள பல மதங்களை தன்னுள் கொண்டிருக்கவில்லை மேலும் இது யூத எதிர்ப்பு கிரித்துகளை திரியிட்டு மறைப்பதாக உள்ளது. ஆனால் கிருத்துவ மரபுகளும் நடைமுறையில் உள்ளன. மேலும் ஆங்கில மற்றும் அமெரிக்க இலக்கியத்தினை கற்பித்ததால், நான் தொடர்ந்து கிருத்துவ மரபுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் வேலை செய்கிறேன். இவை ஏன் வாழக்கையில் ஒரு பகுதியை உருவாக்குகின்றன, என்மீது அன்பை வைத்துள்ளன.

சரி, இப்போது உங்களில் சிலர் என்னை உங்களுக்குள் நிலைநிறுத்திக் கொண்டுள்ளீர். அந்த வகையில் என்னை மதசார்பற்ற கிருத்துவன் என சொல்வீர். ஆனால் நான் நம்பிகையனவன் அல்ல மேலும் உண்மையான கிருத்துவனே அல்ல. மிய கப்லா எல்லாவற்றையும் எண்ணுகிறார்- ஆனால் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன் “மிய கப்லா,” கிறித்துவனாக அறியப்பட்டவன் என்பதே நான் சொல்லவேண்டியது. அது எண்ணப்பட்டதா இல்லையா? நான் நினைக்கிறன் இது நடந்ததாக: நான் நினைக்கிறேன் இது அனைத்தும் எண்ணப்பட்டதாக. அதனனல், ஏன் இது எண்ணப்படுகிறது என நான் நினைபதற்கான மாதிரியை  காண்பிக்கிறேன், நான் ஏன் கிருத்துவனாக அளவிடப்படுகிறேன்— நான் ஏன் கிருத்துவன் அல்ல எனவும் கூட இந்த மாதிரியில் காண்பிக்கிறேன். பெரும்பாலும் நான் கதைகளை பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்—அதனாலே ஏன் பேச்சுக்கு “கதைகளின் தொடக்கத்தில்” என தலைப்பிட்டுள்ளோம்.

அது இங்கே.

சரி, அங்கே அது இருந்தது. உங்களுக்குப் புரிகிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. எனவே நாம் என்ன நடந்தது என கண்டறிய வேண்டும். ஆனால் என்ன நடந்தது என்பது இன்னும் இல்லை; அது முடிந்துவிட்டது. நினைவில் உள்ள பகுதியாகவே அது மீதமுள்ளது, உண்மையில் பல நினைவுகளில், நாம் சற்று வித்தியாசமாக பார்ப்போமேயானால்— இந்த  நிகழ்வை உற்றுநோக்குதல் அந்தபக்கம் உள்ள ஒருவரின் பார்வையாளருக்கும், இந்தப்பக்கம் உள்ள வேறொருவருக்கும் வித்தியாசமானது. என்னைப்போல் மேடையில் இருப்பவர்க்கோ அது இவை இரண்டும் அல்லாது வேறொன்று. மேலும், என்ன நடந்தது என்பதற்கான உங்களது நினைவு மிகவும் சிறப்பானதாகா இல்லை; உங்கள் நினைவில் இருப்பதெல்லாம் நீங்கள் பார்த்தவை மட்டுமே, ஆனாலும் உங்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து ஒரு கதை ஒன்றை உருவாக்க முடியும் வரை அது உங்களுக்கு எந்தவொரு உணர்வையும் ஏற்படுத்தாது. அதுவே கதைகளைப் பற்றி நான் கூறும் முதல் வரி; அவை அனைத்தையும் நீங்கள் கொண்டுள்ளீர். உலகைப்பற்றி நீங்கள் அறிந்தது உலகம் அல்ல. வெள்ளிக்கிழமை இரவு உங்களின் சிறந்த நண்பன் என்ன செய்தார் என்று அவர் உங்களுக்குச் சொல்லும் கதையைத் தவிர வேறொன்றும் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு நேற்று வாஷிங்டனிலோ அல்லது பெய்ஜிங்கிலோ என்ன நடந்தது என தெரியாது; உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் செய்தித்தாள்கள் சொன்ன கதையே. உங்களுக்கு அணு அளவில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. நீங்கள் அறிந்ததெல்லாம் இயற்பியார் கூறும் கதைகளைத்தான். உங்களிடையே உள்ள அறிவியலாளர்கள் அறிவியல் அறிவானது செய்திதாள்களில் வரும் கதைளை போன்றதோ, வெள்ளிகிழமை நடந்த கொந்தளிப்பான அல்லது மூர்க்கமான செய்தியோ அல்ல என என்னை எதிர்க்கலாம். நான் ஒரு அறிவியலாளராக இல்லாத காரணத்தால், நான் வலிமையுடன் இதை எதிகொள்ள போவதில்லை, ஒப்புக்கொள்ள வேண்டியது என்னவெனில் அவை வேறு வைகயான கதைகள், வேறு பொருட்களைப் பற்றியவை, சில கற்பனையானவை, சில அவ்வாறு இல்லாதவை; சில பொருட்களால் பரிசோதனை செய்யப்படுகின்றன, சில செய்யப்படுவதில்லை. வெவ்வேறு வகையான கதைகள், ஆயினும் கதைகளாய் இருப்பவை. 

இதற்கிடையில் ஏதோ நடந்தது, நான் இங்கு ஏதோ ஒன்று செய்தேன், அது என்னவென்று உங்களுக்கு தெரியாது, ஏனெனில் அதைப்பற்றி ஒரு கதையை நான் சொல்லவில்லை. நான் அதை பற்றி சில கதைகளை சொல்லுவேன் என்று சத்தியம் செய்கிறேன், ஆனால் முதலில் கதைகள் பற்றிய இரண்டாவது குறிப்பை நான் அனுமதிக்கிறேன்: அவர்கள் எப்போதுமே இதை உங்களுக்கு பிடித்துக் காட்டியதில்லை. நான் ஏதோ செய்தேன், அதைப் பற்றி உனக்குச் சொல்லுவேன்,  ஆனால் நமக்கு எப்போதுமே அது தெரிந்திருப்பதில்லை, எடுத்துக்காட்டாக, நான் அதைச் செய்கையில், அங்கு செய்கையில் சிலுவைக்கு அருகில் பூச்சி இருந்ததா? இது ஏற்கனவே நடந்து முடிந்த காரணத்தால், நம்மால் மீண்டும் சென்று சரிபார்க்க முடியாது. நம்மிடம் இருப்பதோ கடந்த காலத்தின் கதை மட்டும்தான். இப்போது நீங்கள் கேட்கலாம், யார் கவலைப்படுகிறார்கள்? சிலுவைக்கு அருகில் இருந்ததால் என்ன மாறப்போகிறது? இது பொருத்தமற்றது. ஆனால் பதில் சொல்லும் நான் சொல்ல வேண்டும், கதையில் அதன் பகுதி என்னவென்று. நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லை; நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள் இது கதைக்கு நேரடியான தொடர்புடையது. சரி, நான் நான் உங்களை ஒரு முனையை நோக்கி நகர்த்துகிறேன், இல்லையா. நான் கவலைப்படாத வரை சிலுவைக்கு அருகில் பூச்சி பறப்பது, ஒரு விசயமே அல்ல, நான் அதைப்பற்றி பேசுவதால் கதையில் ஒரு பாகத்தை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இது கதையின் எந்த பகுதி என்பதிலே மாபெரும் சிக்கல் உள்ளது. உதாரணமாக, கடவுள் எல்லா உயிர்களிலும் வாழ்கிறார் என என்னும் நபராயின், அங்கு பறந்த பூச்சி ஒரு புனிததன்மையுடைய ஆன்மாவைக் குறிப்பதாக அமையலாம், இதனால் கதையில் இது ஒரு மாபெரும் பாகமாக அமையும். மற்றொரு உதாரணம்: நான் எங்கே இருக்கிறேன், என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதையோ அல்லது பார்வையாளர்களில் என்ன நடந்தது என்பதையும் உள்ளடக்கியதா “கதை”?  சரி, ஒருவழியில் நீங்கள் கதையில் ஒரு பாத்திரமாக இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் சரி திட்டமிட்ட கதையின் நேரடி பகுதியாக இல்லை. ஆனால் இன்று இங்கு நான் செய்வதும் சொல்வதும் உங்களை யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்; சில உணர்வுகளை தேவாலயத்தைக் கடந்து உங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வீர், அது உங்கள் வாழ்வின் சிறு பகுதியாக இருக்கும். ஒருவேளை அது உங்களை ஏதேனும் சிறிது வித்தியாசமாக செய்யவைக்கலாம், சிலவற்றை மிக சிறியதாக, மௌனமான பேச்சாக, அல்லது அமைதியாக இருக்கலாம். இவை கதையின் ஒரு பகுதியா? அவை கதையின் பகுதியாக இல்லாமல் இருக்கலாம், அவை உங்களின் ஒரு பகுதியாக இருக்கும், இதை யார் சொல்வார்கள்? எந்த கதையும் எல்லாவற்றையும் படம்பிடித்து சொல்வதில்லை, முக்கியாமான எல்லாவற்றையும் கூட படம்பிடிப்பது சொல்ல முடிவதில்லை. அதுவே கதைகளைப் பற்றிய சோகமான ஒன்று.

ஆனால் நான் என்ன நடந்தது என்பதைப் பற்றி சில கதையுடன் நன்றாகப் பழகுவேன், நாம் நீண்ட தூரம் செல்லவதற்கு முன்னால் இவை அனைத்தும் என்னுடன் நடந்தவை, கிருத்துவுடன் நடந்தவை அல்ல என்பதுடன் தொடங்கலாம். எனவே, நான் தனிப்பட்ட முறையில் உண்மையல்ல என நினைக்ககூடிய, என்ன நடந்தது என்பதுபற்றிய உண்மைகளைக்கொண்ட கதையை தொடங்குகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிறிய படைப்பு “முட்டாள் பொம்மை” என்ற பெயரில் விற்கப்பட்டது. இது கோபம் வரும்போதெல்லாம் அதன் கால்களைப் பிடித்து இழுக்கும் வகையிலும், ஏதோ ஒன்றுக்கு எதிராக அதை அடிப்பதற்கு எதுவாகவும், வெறுப்பாக உணரும்போது திட்டுவங்குவாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனாலேயே “முட்டாள் பொம்மை” எனப் பெயர் பெற்றது. எனவே இங்கே என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு கதை: ஒரு பேராசிரியர், கருணையுடன் மற்றும் மரியாதைக்குரிய அவரது மத நம்பிக்கையின் பொருள் மீது, (முட்டாள் பொம்மை முதல் சிலுவை வரை) தேவாலயத்தில் பேச அழைக்கப்பட்டார். நான் அதை ஆர்கஸில் ஒரு தலைப்பாக பார்க்க முடியும் - இது ஒரு தகுதியற்ற ஆசிரிய உறுப்பினரின் மோசமான கனவு போன்றது-- "சேப்பலில் பேராசிரியர் பிளஸ்ஃபீம்ஸ்". இப்போது நான் மீண்டும் சொல்கிறேன், இந்த கதை உண்மையாக இருக்காது என்று நான் நினைக்கவில்லை,  ஆனால் நான் ஏன் சொல்லவில்லை என்றால்,  நான் இன்னொரு கதையை சொல்லும் வரை இது உண்மை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சில நிலைகளில் அது உண்மையா அல்லது இல்லையா என்று நான் நினைக்கவில்லை. இந்த நினைப்பே “முட்டாள் பொம்மை” என அழைக்கப்பட்டது, நான் இதை சிலுவை வரை எடுத்து வந்துவிட்டேன், ஒருவேளை இந்த நிகழ்வின் முடிவில் நீங்கள் எதையாவது நினைவில் வைத்திருந்தால், அது உங்கள் கதை. மேலும் கதைகள் பற்றிய அடுத்த கட்டம் இதுதான்: என்ன நடக்கிறது என்பது பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன, அந்த கதைகள் எப்போதும் கட்டுப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறார்கள்,  நான் இந்த கதையை நம்பவில்லை என நீங்கள் நம்பாத இன்னொரு கதையை சொலவதைத் தவிர, "கதையை" கட்டுப்படுத்த எனக்கு ஒரு விஷயம் இல்லை. (பார்வையாளர்களில் ஒரு அர்குஸ்  நிருபர் இருந்தால்,  கோரிக்கையின்படி  இந்த பேச்சின் முழு உரை கிடைக்கும்.)

அதனால் நான் இன்னொரு கதையை விரைவாக சொல்கிறேன். சரி, இங்கே இன்னொன்று. இந்த ஒன்று, நான் முழுமையாக உண்மையெனக் கருதுவது. ஒரு மனிதன் தென்கிழக்கு நோக்கி ஐந்து அடி கடந்து,  பின்னர் சிவப்பு முக்கோண வடிவிலான ஒரு பொருளை உயர்த்தினான், அது சில அமுக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு,  பல வெள்ளை நூல் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் பொருள்கள் இணைக்கப்பட்திருந்தது. அந்த நேரத்தில் அவர் அந்த பொருளை உயர்த்தியபோது,  மனிதன் ஒரு பெரிய கிடைமட்ட மற்றும் செங்குத்து குறுக்குவழிகளால் இணைக்கப்பட்டிருந்த மர பொருளுக்கு முன் நின்றுகொண்டிருந்தார். அவர் அந்த பொருளை உயர்த்திய பிறகு, அவர் வடமேற்கே ஐந்து அடிகள் நடந்தார். முற்றும். சொல்லப்போனால், இதுதான் நிகழ்வின் நடந்ததன் கதை, இயல்பான விவரங்களைக் கூறும் கதை. இது சிறியதான அமைப்புடயதாயினும், இது நடுநிலையான கதை அல்ல;  குறுக்கினால் இணைக்கப்பட மரச்சட்டதிற்கு அர்த்தம் என்னவெனில், இந்த உலகில் மனிதர்கள் அதற்கு அர்த்தம் தருவதற்கு முன்பு எந்த அர்த்தமும் இல்லை  என்னுடைய கருத்து நாம் பொதுவாக நினைக்கும் அர்த்தத்தில் கடவுள் இல்லை என்பதையே குறிக்கிறது. சொல்லும் போதெல்லாம், இருப்பு சாராம்சத்தை முன்வைக்கிறது. சில நிலைகளில் எதூன்று பறந்தாலும் பறக்காவிட்டாலும் அங்கே சிலுவை இல்லை, ஒரு இறந்த மரம்தான் உள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன், நான் இந்த கதை உண்மை என்று நினைக்கிறேன். ஆனால் அது போதுமானதாக இருப்பதாக நான் கூறவில்லை. இருத்தலியல் கண்ணோட்டத்தை விடுவிக்க முடியும் என்றாலும், நீண்ட காலமாக மக்கள் இத்தகைய வெறுமை மற்றும் அர்த்தமற்ற தன்மையைக் கொண்டிருக்க முடியாது, அதனால்தான், என் நிலைப்பாட்டின்படி,  ஒரு இயக்கமாக இருத்தலியல் மிகவும் அழகானது. இந்த நாட்டில் இருத்தலியல் வாழ்வு மிகவும் உயிரோடு இருந்த நாட்களில், கடவுளே இல்லாத ஒரு உலகில் வாழ முடியாது என்று கூறும் சில கிறிஸ்தவர்களை நினைத்துப் பார்க்கலாம். ஏனென்றால், வெறுமனே வெறுமையாய்,  இயந்திரத்தன்மையுடனான வாழ்வாக, வாழ அர்த்தமின்றி அமையும். இந்த கூற்றுக்கு என்னுடைய பதில்கள் இரு விதமானவை. “அர்த்தத்தை விருபுவதால், அங்கே அர்த்தம் இருக்கவேண்டும் என்றில்லை,” மற்ற சமயங்களில் “உலகில் தானே உருவான அர்த்தங்கள் இல்லாததால், அது நமக்கு சொந்த அர்த்தங்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது.” நான் மிகவும் இளம் வயதில் இருந்தபோது,  இந்த இரு நிலைகளுக்கு இடையேயான முரண்பாட்டை உணர முடியவில்லை, இன்னமும் வாழ்க்கையுடன் குறைவான உண்மைகளே ஒத்துப்போகின்றன,  அந்த வாழ்வு அனைத்து வகையான அர்த்தங்களால் நிரம்பியது, நான் சிலவற்றை பற்றிக் கவலைபடுவதில்லை என்றாலும், அவை அனைத்திலிருந்தும் விடுவித்துக்கொள்ள எனக்கு சுதந்திரமில்லை. இப்போது உலகம் முழுவதும் கதைகள் நிறைந்ததாக நான் சொல்லுவேன், அவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டது உண்மைதான்.

இது சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய இன்னொரு கதையாகும். இது என் கண்ணோட்டத்திலிருந்து ஒரு உண்மையான கதையாகும். இந்த சிறிய பையன் எனக்கு சொந்தம் இல்லை; அவர் என் மகனுக்கு சொந்தமானவர். நான் என் மகனுக்கு நிறைய கதைகள் சொல்கிறேன் – சாதாரண உணர்வுடனான கதைகள், எப்போதும் நடைபெறாதவற்றைவற்றைப் பற்றிய கற்பனைகள்; இரவுநேர கதைகள், சிலநேரங்கள் எழுப்புதல் கதைகள், காரினுள் சில கதைகள், சலிப்பாக உணரும்போது ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்பதர்கான கதைகள். சில கதைகளில் வெளிப்படையான ஒழுக்கங்கள் உள்ளன; சில கதைகள் வெளிப்படையான அறநெறிகளைக் கொண்டிருக்கவில்லை,  ஆனால் அதில் ஒரு புள்ளி உள்ளது; சில கதைகள் எந்த வகையிலும் ஒரு புள்ளியைக் கொண்டிருக்கவில்லை; சில கதைகள் ஒரு புள்ளியில் தொடங்கி மற்றொன்றில் முடிகின்றன; இன்னும் நல்ல பல விசயங்களைக் கொண்டுள்ளன. நான் என் போக்கில் கதைகளை உருவாக்கிக்கொல்வதால், என் கதைகளில் பெரும்பாலும் வேடிக்கையான விசயங்கள் நிறைந்திருக்கும். மேலும் கியும்பியை சந்தியுங்கள். அவர் அவரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருந்தார். இது போன்ற ஒரு சிறிய வேடிக்கையான குரலில் அவர் பேசுகிறார் - "ஹலோ." அவர் தொப்பிகளை மட்டுமே சாப்பிடுகிறார்,  அதனால் தான் - நீங்கள் எங்கிருந்தாலும் மிக தெளிவாக பார்க்க முடியாது - அவர் உருவாக்கிய துணி பல்வேறு வகையான தொப்பிகளைக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு நபர் என்று அவர் நினைக்கிறார்,  எனவே நீங்கள் அவரை ஒரு மென்மையான பொருள் என அழைக்கும்போது வன்முறைக்கு ஆளானார் - "என்ன?" அவர் திருப்பங்களை செய்ய விரும்புகிறார். மற்றும் பல.

நான் செய்தது கடவுளுக்கு எதிரானதா என எனக்குத் தெரியாது என கூறுவதன் மூலம் என்னை  பிரச்சனைகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். மிகவும் எளிமையாக: என் மகனுக்கான எனது அன்பைவிட வேறு எதுவுமே எனக்கு புனிதமானதாக இல்லை,  என் மகனுக்காக என் அன்பை வேறு எங்கும் என் கதைகளில் வெளிப்படுத்தவில்லை. "புனிதமானது" என்பதால் மட்டும் நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை; உண்மையிலேயே “புனித” என்றே நான் அர்த்தம் கொள்கிறேன். உலகத்தைக் கதைகளின் மூலம் புரிந்துகொள்ள நாம் விரும்பினால், நாம் நமது கதைகளை ஒருவரிடமிருந்து மற்றவரிடம் கடத்த வேண்டும்; நம்மை எழுப்பும் கதைகள் மற்றும் தீவிரங்கள்; பிரபஞ்சத்தின் ஆழமான சிக்கலான மற்றும் மர்மம் பற்றிய எங்கள் பிரமிப்பு; நம் அழகு உண்மை மற்றும் காதல்; அபத்தத்தில் நமது சிரிப்பு; மாற்றத்தில் இழப்பினால் ஏற்படும் வருத்தம்; நீதியில் எங்கள் பயம் மற்றும் ஏக்கம்; எங்கள் இரக்கம், மற்றும் மென்மை மற்றும் கொடூர தன்மையை பாதுகாக்கும் தீவிரமான வலி; அநியாயத்தின் மீதான எங்கள் கோபம்,  எல்லாவற்றுக்கும் மேலாக பலவீனத்தினை மன்னித்தல்; எல்லா அன்பிற்கும் மேலான அன்பு, உணர்ச்சியுள்ள மற்றும் நேசிக்கும், நேசமான, நீடித்த காதல், மென்மையான தொடுதலுடன், ஆற்றலான பிடியுடன் காதல்,  காற்று மேகம் என சுற்றி மீண்டும் நதியினை வந்தடையும் நீர் போல காதல். பார்வையாளர்களை விரும்பும் ஒவ்வொரு கதைசொல்லியைப் போலவே என் மகனிடம் ஒவ்வொரு கதையிலும் இது எல்லாவற்றையும் கொஞ்சம் கலந்து சொல்கிறேன். கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் நான் இந்த கதைகளைச் சொல்லாவிட்டால், எளிமையான, மென்மையான நகைச்சுவையான குயும்பியைப் பற்றி யார் சொல்வார்கள்? (“என்ன?” மனிக்கவும், குயும்பி, புனிதமாக இருப்பது.) என்னை நீங்கள் நிச்சயமாக வழிநடத்துபவன் அல்லது தவறானவன் என அழையுங்கள், ஆனால் கடவுளுக்கு எதிரானவன் என்று அழைக்காதீர். 

எனவே ஒரு உணர்வில்—ஒரு முக்கியமான உணர்வில்— எனது பெற்றோரும் கலாச்சாரமும் கதைகளில் கூறும் புனித நதியில் பயணிக்க, நான் கிருத்துவனாக இருக்கிறேன்; அந்தக் கதைகள் பலவையும் கிருத்துவத்தில் இருந்து வந்தவை, குறிப்பாக நாம் பைபிள் என அழைக்கும் கதைகளின் புத்தகத்தில் இருந்து வந்தவை; அந்தக் கதைகள் அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதேபோல், பயபக்தியையும் அன்பையும்,  அழகு,  நீதி  மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கை மற்றும் சத்தியத்தை உலகிற்கு கொண்டு வருவதற்கான எந்தக் கதையையும் நான் ஒப்புக்கொள்கிறேன். மற்றோர் உணர்வுகளில், நான் கதைகளின் புத்தகமான பைபிளானது, குர்ரானையோ அல்லது உபநிஷயங்களை விடவோ புனிதமானதும் அல்ல குறைவான தவறுகளை உள்ளடக்கியதும் அல்ல, கிருத்துவனாக இல்லாததால் பைபிளிற்கு இணையான முக்கியத்துவத்தை இவற்றுக்கும் அளிக்கிறேன், அதே வேளையில் எமிலி டிச்கின்சொன்னின் கவிதைகள் அல்லது விர்கீனியா வோல்பின் கவிதைக்கும் சிறப்பாணவை என எனக்குத் தெரியும். என் மகன், என் மனைவி, என் தங்கை அல்லது என் பெற்றோர் ஆகியோருக்கு எனது அன்பைப் போலவே அவை ஒன்றும்  புனிதமானவை அல்ல. குடும்பத்தின் உண்மைத்தன்மையும் கதைகளும் என் மனதிலிருந்து முழுமையாக பிரிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில், ஏன் கதை வார்த்தை, குறியீடு, படைப்பின் தெய்வ சக்தி, வெளிப்பாடு மற்றும் மீட்பு என செல்லவில்லை, ஆனால் கதைகள் இந்த உலகின் அர்த்தங்களை உருவாக்கும் மோசமான மனித முயற்சிகள்.

பைபிளை ஒரு கதைகளின் புத்தகம் என்று சொன்னால்,  பைபிளை கடவுளால் ஏவப்பட்டதாக அர்த்தப்படுத்தாது,  மேலும் வழக்கமான கிறிஸ்தவ உணர்வில் கடவுள் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால்,  பைபிளை ஒரு கதைகளின் புத்தகம் என்று சொல்லும்போது நான் அதை குறைந்த முக்கியத்துவம் உடையதாக கருதுவதில்லை. வதந்திகளை, கீழ்த்தரமான அர்த்தம் உடையவற்றை, படுக்கைநேர கதைகளை, நகைச்சுவைக்காக கூறப்படும் கதைகளை நான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதில்லை. கதைகளை விட முக்கியமானது அல்லது சக்தி வாய்ந்தது என்று எதுவும் இல்லை. கதையை சொல்ல ஊக்கமளிப்பதைவிட சக்திவாய்ந்த ஒன்று இல்லை; அது உடலுறவு தரும் உணர்வை விட மேலானது. கதையைச் சொல்ல வேண்டுமென்ற ஆர்வம், மனித வாழ்க்கையின் மிக அடிப்படையான வேண்டுகோள் என்று நான் நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு நான் வாஷிங்டனில் உள்ள தேசிய ஹோலோகாஸ்ட் மியூசியத்திற்கு சென்றேன். நான் உடைந்து போனேன், மேலும் சிந்திக்கும் திறனை இழந்தேன், கதைகூறலின் முக்கியத்துவம் மற்றும் கட்டுப்பாடுகளை விளக்க சித்திரவதை முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள், அதே போல் முகாம்களை விடுவிப்பதற்காக வந்த வீரர்கள் அனைவரும் ஒரு கதையைப் பற்றிக் கூற வேண்டியிருந்தது. அவர்களில் பலர் சொன்னார்கள் - "வார்த்தைகள் இதை வெளிப்படுத்த முடியாது" என்று வலியுறுத்திக் கூறினார்கள். யுத்தத்தில் வீரர்கள், தவறாக பயன்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இணையான துன்பத்தை அனுபவிக்கின்றனர்; அவர்கள் சொல்லவேண்டும், நேராக பதிவு செய்யவேண்டும், அவர்கள் பேய்களிடமிருந்து தங்களை விடுவுதுக் கொண்டு அவர்களை பற்றிய சொல்லபடாத கதைகளை சொல்ல வேண்டும். அவர்கள் அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்றால் அவர்கள் ஓவியம் அல்லது வேலை அல்லது அவர்களின் பிரிந்த உடல்கள் மற்றும் உயிர்கள்,  கண்ணீர் அல்லது அமைதி அல்லது தோல்வி அல்லது சுய அழிவு அல்லது ஹீரோயிசம் என ஒவ்வொன்றும் ஒரு கதையை சொல்ல முயற்சிக்கிறது. ஹோலோகாஸ்ட் மியூசியத்தில், ஆயிரக்கணக்கான மற்றும் நூற்றுக்கணக்கான இறந்த மற்றும் வருதம்மிக்க முகங்களைப் பார்த்த பின்னர்,  யூதர்களின் சமுதாய அடையாளங்களைப் பார்த்த பின்னர் - சில நூறு ஆண்டுகள் பழமையானது - முற்றிலும் அழிக்கப்பட்ட, விறகுக்கட்டைகள் போல அடுக்கிவைக்கப்பட்ட  சிதைந்த சடலங்களைப் பார்த்தப்பின், துப்பாக்கிச் சூடுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் நீண்ட வரிசைகள்,  ஏற்கனவே ஒரு கடுமையான கொடூரமான கொடூரமயமான சடலங்களின் சுடுகாடாக,  உயிர் இன்னும் இழக்காமல் துடித்துக்கொண்டிருக்கும் உடல்கள்,  மருத்துவ பரிசோதனைகளின் குளிர்-இரத்ததான படங்கள்,  பாதிக்கப்பட்டவர்களின் கூட்ட வரிசைகள், முடிகள் நிறைந்த பைகள், ஆயிரக்கணக்கான கால்களற்ற காலணிகள், என்னை அழவைத்த மரத்தால் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட பச்சைநிற பட்டாம்பூச்சி பொம்மை— சித்திரவதை முகாமின் வலதுப்புறம் தயாரிக்கப்பட்டது— எந்த தந்திரத்தாலோ முகாமின் மறுபக்கம் கட்டப்பட்டுள சின்ன குழந்தைக்கு கடத்தப்பட்டேன். நான் அருங்காட்சியகத்தில் உள்ள அனைவரும் பார்க்கும் அளவுக்கு, கட்டுப்பாடற்று அழுதேன், அந்த குழந்தையோ அதன் பெற்றோரோ உயிருடன் இருப்பார்களா? இரண்டுக்கும் வாய்ப்புகள் குறைவானது என நம்புகிறேன், அந்த பட்டாம்பூச்சி சொன்ன கதை, மிக எளிமையானது, யாரும் புரிந்துகொள்ளக்கூடியது, அனைவராலும் கேட்கப்பட்டது.

கதைகளுக்கு அளவற்ற சக்திகள் கொண்டவை. அவை குணமடையச் செய்யும்; கற்பிக்கும்; அமைதியும் ஆற்றலும் அளிக்கும்; சமூக மக்களை ஒன்றாக இணைக்கும்.  ஆனால் அவற்றுக்கு காயப்படுத்தும் சக்தியும் உண்டு—ஒடுக்குமுறையை நியாயபடுத்தும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வன்முறையும் பாகுபாடும் தவறுகளும் அவற்றை நியாயப்படுத்தும் ஒரு கதையோடு இணைந்துள்ளன, நாஜீக்களின் கதை, டாமினோ கருத்தியல், “வீட்டின் தேவதை” என பெண்களின் விதி, “ஹாம்களின் புத்திரர்கள்” என அமெரிக்க ஆப்ரிக்கர் பிரிந்து கிடப்பது என அனைத்தும் அவ்வகையினது. ஒருவன் பள்ளி குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் அவர் உடை அணிதிருந்த விதம், இதை விரும்புவதாக உள்ளது, எனவே அவர்தான் இதைத் தொங்கினார் என்று சொன்னான். இந்த கதைகளில் சில, என் குயும்பி கதைகளைப் போல, அந்த நிகழ்வின் துளைகளைக் கொண்டு சொல்பவர்களால் எடுத்து செல்லப்படும், அவற்றில் பல ஏற்கனவே உள்ள கதைளின் மேலேயே கட்டப்படும், சில கதாசிரியர்கள் மரபு சார்ந்தவற்றுக்கு ஆதரவளிப்பர். பிசாசுகள் கூட மேற்கோள்களை உருவாக்கும்—இலக்கியம் சொல்லும், ஏனெனில் நமது கலாச்சாரத்தில் பைபிளைப் போன்று தவறாக பயன்படுத்தப்பட்ட புத்தகம் எதுவுமில்லை. 

என்னுடிய பார்வையின்படி, கதைகள் மற்றும் கதைசொல்லலின் இயல்பு பற்றி விழிப்புடன் இருப்பது ஒரு அடிப்படை கட்டாயமாகும். நான் கிருத்துவத்தை நம்பும் வகையிலே, பார்வையாளார்களாகிய நீங்களும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. வார்த்தை என்ற சொல் “வா” எனத் தொடங்குவது இல்லை என நான் சொன்னதுபோல், மனிதனின் படைப்புகளாகிய கதைகளும், தவறுகளுக்கு உள்ளாகலாம். ஆனால் ஒருவர் பைபிளை கதைகளின் புத்தகமாக நம்பலாம், இன்னொருவர் நம்பாமாலும் போகலாம். பைபிளிலுள்ள சில அல்லது எல்லா கதைகளும் கடவுளால் ஊக்கமடைந்தன என நீங்கள் நம்பினாலும்,  அவை மனிதர்களால் எழுதப்பட்டு,  மனிதர்களால் சீரமைக்கப்பட்டு,  மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. ஜான் போஸ்வெல், தனது புத்தகத்தில் கிறித்துவம், சமூக சகிப்புத்தன்மை மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றில், கொரிந்தியர் 6: 9 மற்றும் 1 தீமோத்தேயு 1:10 ஆகியவற்றின் மொழி ஓரினச்சேர்க்கை,  மேலும் ஆதியாகமம் 19,  சோதோம் அழிவு, கூட ஓரினச்சேர்க்கை குறிக்கிறது; இந்த வார்த்தைகள் பல வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் கிரேக்க வார்த்தைகளின் சமூக மற்றும் உரை சூழல் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கதைகள் மற்றும் கதைசொல்லிகள் மற்றவர்கள் ஈர்கப்படுகிரார்களோ இல்லையோ வரம்புகளுக்கு உட்பட வேண்டும். உண்மை கதைகளை கூட,  நான் நிரூபிக்க முயன்றபோது, தவிர்க்கமுடியாமல் முக்கிய உண்மைகளை விட்டு வெளியேறினேன்; அனைத்து கதைகளும் பல விளக்கங்களுக்கு உட்பட்டவை. (கதைகள் உண்மையாக கூட இருக்கலாம், வெறுமனே பொய்யாக  நான் சேர்க்கலாம்.) எனவே எந்த ஒரு கதையுமே போதுமானதாக இல்லை; பல கதைகளுக்கும், கதைசொல்லிகளும் உண்மைக்கு தேவைப்படுகிறது, அவற்றுள் சில முரண்பாடுகள் கூட இருக்கலாம்,  இவை அனைத்தும் புதிய தலைமுறையினரால் தொடர்ந்து திரும்பவும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நம்முடைய அறநெறியானது உண்மைகள், பொய்கள் மற்றும் முரண்பாடுகளின் சிக்கலான வலைப்பின்னலினை உருவாக்குகிறது, எந்த ஒரு கதையையும் நாம் நம்புவதற்கு முன்பே ஒரு தயக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இது நமக்கு உதவுகிறது. இறக்கும் மதிப்புள்ள ஒரு கதை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது, ஆனால் கொலை செய்வதல்,  சித்திரவதை செய்தல்,  கற்பழித்தல்,  பிறர் மீது பாரபட்சம் காட்டுதல் போன்றவற்றுக்கு எந்த கதையும் வேலை செய்யாதென நான் உறுதியாக நம்புகிறேன். கதை கற்றுகொடுப்பதை எப்போது நம்புவது, நம்பகூடாது என்பதும், புதியதாக கதையை படிப்பதும், அதை வேறொருவருக்கு எதிராக படிப்பதும் அவரவர் விருப்பம். உதாரணமாக, உங்கள் உறவினரின் நேசம், கொரிந்தியர் அல்லது தீமோத்தேயுவின் ஒரு சிறந்த சொற்றொடரை விட முக்கியமானவற்றை கற்றுக்கொடுக்கும். சில நேரங்களில் தார்மீக ரீதியாக நாம் பழைய கதைகளை மறுக்கிறோம்,  மேலும் புதிய கதைகளை தற்காலத்தின் வாழ்க்கைக்கு மிக அதிகமாக ஒப்புக்கொள்கிறோம். அதனால் தான்,  இறுதியாக,  நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல - ஏனென்றால் பைபிளிலுள்ள மிகுந்த செல்வக் கொழிப்புள்ளவை எல்லாக் கதைகளும் கூட போதாது; உலகில் உள்ள எல்லா கதைகளை தவிர வேறு எதுவும் போதாதவை. உலகில் உள்ள அனைத்து கதைகளும்,  ஏன் அவைகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி கூட எனக்குத் தெரியாது, ஆனால் அவை ஒரு பெரிய நதி நீரைப் போல என் வழியாக ஓடுகின்றன. மேலும் அவை உங்கள் வழியாகவும் ஓடுகின்றன.

இதற்கிடையில், அங்கே சிலுவை உள்ளது, அங்கே தன்னைப் பற்றிய கதைகளை சொல்லத்த, எந்த கதைகளையும் வைத்திருக்காத குயும்பியும் உள்ளார். இருவரும் இணையானவர்கள் அல்ல. இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? நீங்கள் அவர்களைப்பற்றி சொல்லும் கதை, நான் சொல்லும் கதையிலிருந்து வேறுபட்டது. என்னால் உங்களுக்கு கதை சொல்ல முடியும், என் மகன் கேட்டால், அவனுக்கு சொல்ல முடியும்—என்னால் சிலுவை முதல் குயும்பி வரை எளிமையாக எடுத்துசெல்வேன் எதிர்ப்பாகவோ அல்லது புதுமையாகவோ அவனை எளிமையாக பார்க்க வைப்பேன். அவனுக்கு அது போதாது என்றால், நான் ஒரு புதிய கதையை உருவாக்குவேன்.

அதை வைத்து நான் உங்களுக்கு ஒரு புதிய தளத்தை திறந்து வைக்கிறேன், நீங்கள் உங்கள் சொந்த கதைகளை சொல்லலாம், அல்லது கேள்வி கேட்கலாம். இது ஒரு நேர்மையான விவாதமாக இருக்குமென நான் நினைக்கிறேன், அதனால் உங்களை குறுக்கிக் கொள்ளாமல் உங்களது கேள்விகளைக் கேளுங்கள் அல்லது உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். நீங்கள் விரும்பிய கேள்விகளைக் கேளுங்கள், எளிமையான உணர்வோடு அறிக்கைகள் உருவாக்குங்கள், பார்வையாளர்களில் உள்ள மற்றவர்களிடமும் பேசுங்கள், மேலும் பல. கேட்டுகொண்டிருந்தமைக்கு நன்றி. 

© 1996 by Wes Chapman.

மொழிபெயர்ப்பு : ச.கலைச்செல்வன் (மாணவப் பத்திரிகையாளர்)

Source : http://sun.iwu.edu/~wchapman/stories.html