கவலைகளிலிருந்து விடுதலை
இயேசு இங்கே பரிந்துரைக்கிறபடி செய்ய முடியும் என்பதற்காக, ஒருவருடைய வாழ்க்கையை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றிய பாரம்பரிய கருத்துக்களை கேள்வி கேட்க வேண்டும். நம்முடைய சொந்த திட்டங்களுக்கு மாறாக, கடவுளுடைய அன்பில் நம் விசுவாசத்தை வைக்க வேண்டும்.
சில வசனங்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்:
வி. 21: உன் புதையல் எங்கே உள்ளதோ அங்கே தான் உன் இதயமும் உள்ளது. நம்மிடம் உள்ள புதையலை நம்மை விடு போகவிடுவதில்லை. நம்மை சுற்றி நடக்கும் செயல்களுக்கான எதிர்வினையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இதன் வழியாக நம் புதையலை அறிந்து கொள்ளலாம்.
வி. 22 - 23 : என்னுடைய அனுபவத்திலிருந்து புதையலானது நம்மை அதனோடு இணைத்து நம் உள்மனத்தின் ஒளியை மழுங்டித்து விடும். நல்ல செயல்கள் செய்வதற்கான அறிவை மறைத்து விடும். அறிவு மறைக்கப்பட்டு விடுவதில் கடவுள் பார்வை நம் மீது இருப்பது மறந்து,ஏதோ விலைமதிப்புள்ள பொருளினால் ஈர்க்கப்படுகிறோம். நம்முடைய தற்போதைய நிலை நமக்கு கிடைக்கப் போகும் புதையலோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இச்செயல் நம்மை பொறாமை கொள்ள செய்கிறது.
வி. 24 : கடவுளும் பணமும் ஒன்றுக்கொன்று இணக்கமானது அல்ல.. பணமானது மனிதனை நேர்மையற்றவனாக்கி விடுகிறது. பணம் மனிதனின் அடிமையாக இருக்க வேண்டுமே தவிர பணம் மனிதனை அடிமை படுத்தி விட கூடாது.
வி. 25: எனவே தான் சொல்கிறேன் எதையும் ஆவலோடு எதிர்பார்க்காதே .
சந்தோசம் மற்றும் பாதுகாப்பை விட பெரிய இன்பம் வாழ்க்கையில் இல்லை. கிடைக்குமா கிடைக்காதா என தெரியாத தேவை இல்லாத பொருளின் மீது ஆசை வைப்பது என்பது ஒருவரின் மதிப்புள்ள வாழ்க்கையை வீணாக்கி விடுவது போன்றதாகும் .
இயேசுவின் பாதுகாப்பான வாழ்கையாக இல்லை மாறாக அவரின் வாழ்க்கை மிகையானது. (மாத்த் 8, 2௦ ; லுக்கே 4: 29 -3௦ )
அபோஸ்தர்கள் சிறையிலிருக்கும் போது இயேசுவின் வரவினால் சங்கிலிகளில் இருந்து விடுவதை எண்ணி மகிழ்வர். ( ஆக்ட்ஸ் 16: 25 - 26)
வி. 26: பறவைகளை பாருங்கள் .... அவர்களுக்கு இறப்பு என்பது உண்டு. பறவைகளை போல நாம் இருக்க வேண்டுமா ? நம்முடைய பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில் தானோ? இறைவன் இருப்பதனால் நாம் எதை பற்றிய கவலை , தோல்வி மற்றும் பாதுகாப்பின்மை போன்றவைகள் இன்றி இருக்கின்றோம்.
இப்போதே மக்களுக்காக இறந்தால் கூட அது எனக்கு மன நிம்மதியை கொடுக்கும். ரோமன்ஸ் 6; லூக்கா 9:24-25 ;
வி. 28 லிலிஸ் மற்றும் வி. 30 தாவரங்களுக்கு வேறு வழியே இல்லை அவைகள் இருக்கும் இடத்திலுள்ள கால சூழ்நிலைக்கு ஏற்பவே வளர வேண்டும். இருந்தும் கூட அவை நன்றாக செழித்து வளர்ந்து வரையறுக்க இயலாத அழகை கொண்டுள்ளன .
கடவுள் தாவரத்தை மிகவும் அக்கறையோடு கவனித்து கொள்கிறார். மேலும் பலராலும் தாவரமானது பாதுகாக்கப்படுகிறது.
வி. 32: இறைவனுக்கு தெரியும் நமக்கு என்ன வேண்டும் என்பது எனவே அவருக்கு நம் மீது அக்கறை உண்டு. நாம் அனைவரும் ஒரு பாகனைப் போலவே.
வி. 33: இறைவனை உங்கள் வாழ்க்கையின் அரசனாக்குவதை உங்கள் வாழ்வின் குறிக்கோளாக கொள்ளுங்கள், எது நல்லதோ அதையே செய்யுங்கள், நீங்கள் செய்பவை உங்களுக்கே வந்து சேரும் என்பது சத்தியமான உண்மை. இறைவனின் வேலை நம்மை பார்த்து கொள்வதே, நம்மை விட அதிகமான அக்கறையோடு இறைவன் நம்மை பார்த்து கொள்கிறான் .
எல்லா முறையும் வெற்றி பெற அவசியம் இல்லை ஆனால் வெற்றி பெறும் வரை போராட வேண்டும். ( பில். 3:12)
வி. 34: எனவே நாளையை பற்றி சிந்திக்காமல் இன்றையை பற்றி யோசி. நாளை வேலையை நாளை பார்த்துக் கொள்ளட்டும் . இன்றைய கவலைகள் இன்றைக்குப் போதும். இதைப் புரிந்து கொண்டாலே பாதி கவலைகள் நீங்கி விடும்.
இயேசு இவற்றை எல்லாம் நம்மீது சுமையை ஏற்ற தரவில்லை ஆனால் இது நற்செய்தியை கொடுத்து நம்மை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் மற்றும் நம்மை நல்ல குழந்தைகளாக வளர வழி செய்யும்.
அப்படியென்றால் இனிமேல் வேலை செய்யத் தேவை இல்லையா திட்டமிடத் தேவை இல்லையா நம்பிக்கை அவசியமில்லையா ... அப்படி இல்லை. நம் வேலையில் உள்ள தோல்விகளையும் நம் திட்டத்தில் உள்ள இடையூறுகளையும் நம் நம்பிக்கையில் உள்ள குறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவையெல்லாம் கடவுள் நம்மை நல்வழியில் கொண்டு செல்வதற்கான வழிகளே.... இவை அனைத்தையும் நம் வாழ்வில் நம் திட்டத்தில் நம் நம்பிக்கையில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 2 டிம். 2:3-4 ; ப்ரோவ். 19:21 ; 21:31; பிசலம் 127 : 1-2 ; நம்பெர்ஸ் 22.
கடவுள் நம்மை நம் கவலைகளில் இருந்து விடுவிக்கிறார் . அவர் நம்மை எதிர்கால சிந்தனையிலிருந்து விலக்கு அளிக்கிறார். நம்மை நற்பாதையில் கொண்டு செல்கிறார். இவ்வாறு செய்யும் கடவுளை நாம் கூடுமானவரை தொழுது வணங்க வேண்டும். 1கோர். 4:2; 1 பீட்டர் 4 : 10
ஆர்னோல்ட் நீயுமைர்.
மொழிபெயர்ப்பு : ர.செகனாஸ் பேகம் (மாணவப் பத்திரிகையாளர்)
Source : http://solon.cma.univie.ac.at/sciandf/eng/worries.html