Published:Updated:

கம்போடியா: பண்ணைக்குச் சென்ற 72 வயது முதியவர்; 40 முதலைகள் கடித்துக் குதறிய `திகில்' சம்பவம்!

முதலை
News
முதலை ( pixabay )

40 முதலைகள் ஒன்று சேர்ந்து ஒரு முதியவரைக் கடித்துக் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கம்போடியா: பண்ணைக்குச் சென்ற 72 வயது முதியவர்; 40 முதலைகள் கடித்துக் குதறிய `திகில்' சம்பவம்!

40 முதலைகள் ஒன்று சேர்ந்து ஒரு முதியவரைக் கடித்துக் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலை
News
முதலை ( pixabay )

கம்போடியாவைச் சேர்ந்த லுவான் நாம் (Luan Nam) என்ற 72 வயதான நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை சியம் ரீப்பில் (Siem Reap) இருக்கும் அவருக்குச் சொந்தமான முதலைப் பண்ணைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கே அவரின் பண்ணையில் இருந்த முதலை ஒன்று முட்டைகளைப் இட்டிருக்கிறது. அவர், தாய் முதலையை கூண்டிலிருந்து வெளியே இழுத்து, முட்டைகளைச் சேகரிக்க முயன்றிருக்கிறார். இதற்காக அவர் அங்கே இருந்த குச்சி ஒன்றை எடுத்து முதலையை விரட்ட முயற்சி செய்திருக்கிறார்.

அப்போது குச்சியைப் பிடித்த முதலை, அவரை வேகமாக இழுத்திருக்கிறது. இதில் தடுமாறிய அவர், கீழே விழுந்த நிலையில், அங்கிருந்த சுமார் 40 முதலைகள் அவரைச் சுற்றி வளைத்துவிட்டது. முதலைகள் ஒன்றுகூடி அவரைக் கடித்துக் குதறியிருக்கிறது. வலியால் துடித்த அவர், சில மணி நேரத்திலேயே பரிதமாபாக உயிரிழந்தார்.

 மரணம்
மரணம்

இது தொடர்பாக சியம் ரீப் பகுதியின் தலைமைக் காவலர் மேய் சேவரி,``சியம் ரீப் பகுதியைச் சுற்றி முதலைப் பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. முதலையின் முட்டை, தோல், இறைச்சிக்காக மக்கள் அதை அதிகமாக வளர்க்கின்றனர். இதுபோல 2019-ம் ஆண்டும், இரண்டு வயது சிறுமி ஒருவர் தவறுதலாக அவர்களது முதலைப் பண்ணைக்கு அருகே சென்றபோது, முதலைகள் கடித்துக் கொல்லப்பட்டார்" என்று கூறியிருக்கிறார்.