Published:Updated:

இரு சக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே சென்ற தம்பதி… யூடியூபர் செயலும், போலீஸ் ஆக்‌ஷனும்!

வீடியோ வைரல்
News
வீடியோ வைரல்

மும்பையில் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டே குளித்த தம்பதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:

இரு சக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே சென்ற தம்பதி… யூடியூபர் செயலும், போலீஸ் ஆக்‌ஷனும்!

மும்பையில் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டே குளித்த தம்பதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.

வீடியோ வைரல்
News
வீடியோ வைரல்

சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் வைரலாக பரவ வேண்டும் என்பதற்காகவே சிலர் பொது இடத்தில் எதையாவது வித்தியாசமாகச் செய்கின்றனர். மும்பையில் அது போன்று ஒரு தம்பதி வித்தியாசமாகச் செய்து போலீஸாரிடம் மாட்டிக்கொண்டனர். சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு பெண்ணும், ஆணும் இரு சக்கர வாகனத்தில் செல்கின்றனர். நடுரோட்டில் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தான் பக்கெட்டில் எடுத்து வந்திருந்த தண்ணீரைக்கொண்டு குளிக்க ஆரம்பிக்கிறார். அவர் பக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் கப்பில் தண்ணீர் எடுத்து தன் மீது ஊற்றிக்கொள்கிறார். அதோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டியர் மீதும் தண்ணீரை எடுத்து தலைவழியாக ஊற்றுகிறார்.

வீடியோ வைரல்
வீடியோ வைரல்

இருவரும் நடுரோட்டில் குளித்துக்கொள்கின்றனர். அவர்களின் செயலைப் பார்த்து அந்த வழியாக வந்தவர்களில் சிலர் சிரிக்க ஆரம்பிக்கின்றனர். சிலர் தங்களது மொபைல் போனில் இதை வீடியோ எடுக்கின்றனர். சிலர் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களின் செயலை வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து, அது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து மும்பை போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதில் அந்த வீடியோ மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகர் செக்டர் 17-ல் இருக்கும் சிக்னலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. அதோடு இந்த வீடியோவை சோஷுயல் மீடியாவில் பார்த்த சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டனர்.

போலீஸார் அதற்கு, `இது குறித்து டிராஃபிக் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும், வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ஆண், பெண் இருவரின் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக உல்லாஸ் நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது யூடியூபர் ஆதர்ஷ் சுக்லா என்று தெரியவந்தது. சுக்லா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஹெல்மெட் அணியாமல் சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக மன்னித்துவிடும்படி மும்பை போலீஸாரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

அதோடு அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்படியும், தனது செயலுக்காக அபராதம் கட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, `நான் கைதுசெய்யப்படுவேன் என்று தவறான தகவலை பரப்ப வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.