Published:Updated:

ருபெர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி எங்கேஜ்மென்ட் நிறுத்தம்! - கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனரா?

Rupert Murdoch, Ann Lesley Smith
News
Rupert Murdoch, Ann Lesley Smith

ருபெர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி ஸ்மித்தின் எங்கேஜ்மென்ட் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:

ருபெர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி எங்கேஜ்மென்ட் நிறுத்தம்! - கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனரா?

ருபெர்ட் முர்டாச் - ஆன் லெஸ்லி ஸ்மித்தின் எங்கேஜ்மென்ட் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Rupert Murdoch, Ann Lesley Smith
News
Rupert Murdoch, Ann Lesley Smith
பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் ஜாம்பவானாக விளங்குபவர் ருபெர்ட் முர்டாச் (Rupert Murdoch)

தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டாச், ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் இதுவரை நான்கு  பேரை திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்துப் பெற்றுள்ளார்.

Rupert Murdoch, Ann Lesley Smith
Rupert Murdoch, Ann Lesley Smith

இந்நிலையில் சமீபத்தில் தனது  92 வயதில் 5வது திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். இவை சமூக வலைதளங்களிலும் வைரலாகி வந்தன. இதுகுறித்து அவர் தனது சொந்த செய்தித்தாளான நியூயார்க் போஸ்டில் பேட்டி ஒன்றையும்  அளித்திருந்தார். அதில், “நான் மிகப் பதற்றமாக உணர்ந்தேன்.  நான் மீண்டும் காதலிக்க பயந்தேன். ஆனால், இதுவே என் கடைசிக் காதல் என்று எனக்குத் தெரியும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

நாட்டுப்புற பாடகராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியுமாக இருந்த 66 வயதுடைய ஆன் லெஸ்லி ஸ்மித் (Ann lesley smith) என்பவரை ருபெர்ட் முர்டாச் ஐந்தாவதாகத் திருமணம் செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்திருந்தார். “நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்" என்றும்  ருபெர்ட் முர்டாச் கூறியிருந்தார்.

Rupert Murdoch
Rupert Murdoch

ஆனால் தற்போது இவர்களின் எங்கேஜ்மென்ட் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ருபெர்ட் முர்டாச்சும் -ஆன் லெஸ்லி ஸ்மித்தும் தங்களது எங்கேஜ்மென்ட் குறித்து அறிவித்த சில வாரங்களிலே இந்த முடிவை எடுத்ததாக வேனிட்டி ஃபேர்( Vanity Fair) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் ருபெர்ட் முர்டாசிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான் இவர்களது எங்கேஜ்மென்ட் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.