Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

facebook.com/NaveenKumarNadarajah:

மனைவி: ''உங்களுக்கு காபி வேணுமா?''

நான்: ''இல்லம்மா... வேணாம்.''

மனைவி: ''ஏன்?''

நான்: ''நீ டயர்டா இருப்பேன்னு சொன்னேன். போட்டுக் கொடுத்தா குடிப்பேன்.''

மனைவி: ''இல்லை... பால் கொஞ்சம் மிச்சம் இருக்கு. எப்படியும் கீழேதான் ஊத்தணும், அதான் கேட்டேன்.''

சற்றுமுன் நடந்த அசம்பாவிதம்!

twitter.com/Siva_D_offl: அஜித் - விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள்; தெரிந்துவிட்டால் ஆயுத சப்ளையை ஆரம்பித்து விடுவார்கள்!

twitter.com/mekalapugazh:  'பெரியார், தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?’ என்பவர்களுக்கு, வட இந்தியா தினமும் ஒரு பதில் தந்துகொண்டிருக்கிறது!

twitter.com/Thillu_twits: வெற்றியடைய ஆசைப்படுகிறோம். ஆனால், போராடத் தயங்குகிறோம்!

twitter.com/teakkadai: கேரம்ல மூன்று பேர் மட்டும் ஆடும்போது, எதிர்ல ஆள் இல்லாம உட்கார்ந்து  இருக்கிறவனுக்கு இருக்கிற எல்லா டிஸ்அட்வான்டேஜஸும் சூர்யாவுக்கு இருக்கு!

twitter.com/kaviintamizh:  ரோட்ல தம் அடிக்கிறவங்களை சாதாரணமா கடந்து போறாங்க. கடலைமிட்டாய் வாங்கித் திங்கிறவங்களைத்தான் குறுகுறுனு பார்க்கிறானுங்க!

twitter.com/udaya_Jisnu:  எந்த வரிசையில் நாம் நின்றாலும், நமக்கு முன்னால் நிற்பவன் சோம்பேறியாகவும் பின்னால் இருப்பவன் அவசரக் காரனாகவும் இருக்கிறான்!

twitter.com/azhagi_: 'ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்துள்ளார் மனோரமா!’ - யாருக்குத் தெரியும் ஆறாவது முதலமைச்சருடன்கூட ஏற்கெனவே நடிச்சிருக்கலாம்!

வலைபாயுதே V 2.0

twitter.com/i_Soruba:  'நாம எல்லாம் இந்த வயதில் இப்படியா இருந்தோம்!’ என தினம் தினம் வியக்க வைக்கிறார்கள் குழந்தைகள்:)

twitter.com/beingnandhu : நல்லது பண்ணா கைதட்டாத எந்தச் சாமியும், கெட்டது பண்ணா கண்ணைக் குத்தாது!

twitter.com/Rajarocketrocky:  ஒரு மாதம் முழுவதும் மழை பெய்தாலும் தாங்குகிற பூமியை, ஒரு மணி நேர மழைக்குத் தாங்காதவாறு மாற்றிவிட்டதுதான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சாதனை!

twitter.com/Nivas_sankar: சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தா, அது எனக்குக் கத்துக்குடுத்தது ஒண்ணே ஒண்ணுதான். நாம வாழணும்னா நேரா நேரத்துக்குச் சாப்பிடணும்!

twitter.com/gokila_honey:  சூப்பர் ஸ்டார்: உங்களுக்கு வரதட்சணையா என்ன வேணும் கேளுங்க?

தனுஷ்: நீங்க நடிச்ச படங்களோட டைட்டில் எல்லாத்தையும் எனக்கு எழுதி குடுத்துடுங்க!

twitter.com/deepishtalks : ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்கள வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்கள வியந்து பார்க்கற நிலைமைக்கு ஆளாகிட்டோம்.

twitter.com/Sricalifornia:  பிடிக்காதவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு மட்டும் ஆதாரம் தேவைப்படுவது இல்லை.

twitter.com/npgeetha: ''ஏன்மா என்னை நண்டு கடிச்சது?'' ''அது தூங்கும்போது நீ வளையைத் தோண்டி எழுப்பிவிட்டேல்ல அதான்'' ''என்னை எழுப்பினா நான் கடிக்கவா செய்றேன்?''

வலைபாயுதே V 2.0

facebook.com/g4gunaa:

'நிலா... மழை வருது உள்ளே வந்துடு...

சளி புடிச்சிக்கும்.'

'ஜில் தண்ணி குடிக்கக் கூடாதுடா...

சளி புடிச்சிக்கும்.'

'குளிரடிக்குது பாரு. ஸ்வெட்டர் போட்டுக்கோ நிலா. அப்புறம்

சளி புடிச்சிக்கும்.'

'சாக்லேட் ஒண்ணு போதும் குட்டிம்மா...

சளி புடிச்சிக்கும்.'

'பஞ்சுமிட்டாய் எல்லாம் வேணாம்டா...

சளி புடிச்சிக்கும்.'

எதற்கெடுத்தாலும் இதையே சொல்லிச் சொல்லி -

''குட்டிமா... அப்பாவுக்கு ஒரு முத்தா குடுறா...''

''வேணம்பா...

சளி புடிச்சுக்கும்!''