சைபர் ஸ்பைடர்

twitter.com/vinmeenn:
பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே... ஆமா, வேற ஒண்ணும் இல்ல, Balance -தான்!
twitter.com/meenammakayal:
கீழே விழுந்த துணிகளை காலால் எடுப்பதில் தொடங்குகிறது... சோம்பேறித்தனம்!
twitter.com/Arunprakkash12:
நாம் இழுத்த வெள்ளைக் கோட்டை, 'சமாதானக் கோடு’ என நம்பிவந்த எறும்புகள் மடிந்து விழுந்தன!
twitter.com/imayavan340:
சென்னை வாசிகளின் தற்போதைய தத்துவ வார்த்தை... 'இதுவும் வடிந்துபோகும்!’
twitter.com/rajakumaari:
வேலை பார்க்கிறதுக்கு உடம்பு வளையிறதைவிட, செல்ஃபி எடுக்கத்தான் அதிகம் வளைக்கவேண்டியிருக்கு!

twitter.com/Nattu_G:
ரிட்டையர்மென்ட் காசில் வீடு வாங்கிய தலைமுறைக்கு, 30-வது வயதில் அப்பார்ட்மென்ட் வாங்கும் தலைமுறையைக் கண்டால் என்ன உணர்வு வரும்? # ஸ்டாலின்!
twitter.com/iTz_vijii:
ராஜதந்திரம் என்பது, கையில் கல் கிடைக்கும் வரை நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது!
twitter.com/geethuTwits:
இந்த விஞ்ஞானத்துல வலிக்காம ஊசி போடுறதைக் கண்டுபிடிச்சிருக்கலாமே... கைக்குழந்தைகளுக்காவது # தடுப்பூசி சோகங்கள்!
twitter.com/udanpirappe:
தக்காளி 100 ரூபாயாம், ஆப்பிள் 60 ரூபாயாம். பேசாம வீட்டுல பத்து நாளைக்கு 'ஆப்பிள் சட்னி’, 'ஆப்பிள் சாம்பார்’ வைக்கச் சொல்லிடவேண்டியதுதான்!
twitter.com/shortvino:
லவ் ஃபெயிலியர் ஆனா, தாடியை மட்டும் வளர்த்தா போதும். லவ் சக்சஸ் ஆகிட்டா, பொண்டாட்டி பிள்ளையையும் சேர்த்து வளர்க்கணும். ஸோ... யோசிச்சு முடிவெடுங்க!
twitter.com/ThowfiqS:
சென்னை மக்களே... உங்க வீட்டுப் பெண்கள் இனிமேல் இந்த மாதிரி மழை வெள்ளத்தால் கஷ்டப்படாமல் இருக்க, ராம்நாட் மாப்பிள்ளைக்கு பெண் தாருங்கள்!


twitter.com/Apallava:
ஏழை மாணவனுக்கு பணக்கார வாத்தியார் பாடம் நடத்தினால்... அது அரசுப் பள்ளி. அதே பணக்கார மாணவனுக்கு ஏழை வாத்தியார் பாடம் நடத்தினால்... தனியார் பள்ளி!
twitter.com/YAADHuMAAGE:
அம்மா குடுக்கிறதை எல்லாம் ஜெயா டி.வி-யில் மட்டும் காட்டுறாங்களே... உண்மையா குடுப்பாங்களா... இல்லை, வீடியோ எடுத்ததும் புடிங்கிக்குவாங்களா?
twitter.com/SiluvaM:
பெண் அழுகிறாள் என்றால், தன்னைத் தைரியப்படுத்துகிறாள் என அர்த்தம்; ஆண் அழுகிறான் என்றால், தன் தைரியத்தை இழந்துவிட்டான் என அர்த்தம்!
twitter.com/revathy_rr:
நினைவில் வீடுள்ள பெண்களுக்கு ஓய்வு என்பது சாத்தியமே இல்லை!
twitter.com/mpgiri:
ரஹ்மானே லாங் டிரைவ் போனா, ராஜா பாட்டுத்தான் கேட்பார்னு நினைக்கிறேன்!

twitter.com/thoatta:
மோடி, ஒபாமா, சீனப் பிரதமர், ஜப்பான் பிரதமர்னு ஆயிரம் பேரு மலேசியாவுல இப்ப இருந்தாலும், மக்கள் பார்க்கத் துடிக்கிறது என்னமோ ரஜினியைத் தான்!
facebook.com/saravana karthikeyanc:
ரெயின்கோட்டில் தொடங்கி ரெயின் போட்டுக்கு வந்துவிட்டது சென்னை மழை!
facebook.com/karthekarna:
ரியாலிட்டி ஷோக்களில் டான்ஸ் ஆடியவர்கள் எல்லாம் சீரியல்களில் செட்டில் ஆகிவிட்டார்கள் போலும். எந்த நாடகம் ஓடினாலும் 'இவ 'ஜோடி நம்பர் ஒன்’ல ரெண்டாவதா வந்தவ’, 'இவ 'மானாட மயிலாட’ல காலை உடைச்சுக்கிட்டவ’, 'இவனைத் தெரியுதா... கலா மாஸ்டர் அடிக்கடி கட்டிப்புடிப்பாளே...’ என, வீட்டில் உள்ள பெண்கள் உற்சாகமாகக் கத்துகிறார்கள்; அவர்களுடைய சரித்திரத்தையே புட்டுப்புட்டு வைக்கிறார்கள். பிரச்னை அது அல்ல... இடியாப்பம் கருகி இதுவரை யாராவது பார்த்திருக் கிறீர்களா?

facebook.com/swaravaithee:
காலையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன்... 'ஏரியின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் எவ்வளவோ கூட்டங்களில் பேசியிருக்கலாம். அதெல்லாம் செய்ய முடியாததை ஒரு மழை சாதித்துவிட்டது தோழர்!’
Whatsapp: உலகம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளது...
மோடி பயணித்த நாடுகள்; மோடி பயணிக்க உள்ள நாடுகள்!