சைபர் ஸ்பைடர்
facebook.com/guru.shree.16:
வந்த வெள்ளத்தில் நண்பர் வீட்டில் தரைத்தளம் மூழ்கிவிட்டது. காஸ்ட்லியான பொருட்கள் எல்லாவற் றையும் எடுத்துக்கொண்டு முதல் தளத்துக்குச் சென்றுவிட்டனர் நண்பர் குடும்பத்தினர். பாவம்... மழையும் விட வில்லை; வெள்ளமும் வடியவில்லை. நண்பரின் அம்மா கேட்டாராம்... `ஏன்டா... பட்டுப் புடைவைகளை மட்டும் எடுத்து வந்தியே... இந்த நைட்டிக்கு மாத்து நைட்டி எடுத்துட்டு வந்தியா? பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு ஹெலிகாப்டரைப் பார்த்து பொட்டலம் கேட்டா, என்னடா நினைப்பான் பைலட்?’ என்று!
facebook.com/bhopathy : அரசாங்கம், `நல்லது செய்றோம்’னு நம்மளை ஏமாற்றி வரி வாங்குது. கார்ப்பரேட், வரி கட்டாம அரசை ஏமாற்றி கம்பெனி ஆரம்பிக்கிறான். நாம ஆபீஸ்ல வேலைபார்க்காம அவனை ஏமாற்றி சம்பளம் வாங்குறோம். வாழ்க்கை ஒரு வட்டம்டா!
facebook.com/guru.shree.16: பண்டிகைங்க வந்தால்தான் நாம எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் இருக்கோம்னே தெரியுது!
facebook.com/bhopathy: ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாகக் கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை’னு ரஜினி சொல்றார். ஆனா பாருங்க... கலைஞரும் அம்மாவும்தான் மாறி மாறி சி.எம் ஆகுறாங்க!
facebook.com/ArumugaSelvamV: ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

twitter.com/Ulaganandha:
நண்பன்: என்ன பாட்டுடா கேட்கிற?
மீ: குளிருக்கு ஹெட்போன் மாட்டிருக் கேன் மாப்ள. # த்தூ!
twitter.com/MrElani Universal Cop: ஆம்... க்ளைமாக்ஸ்ல அனிருத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுதான் கதை. # `சிங்கம்-3’
twitter.com/srinileaks:
பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தினாலே, பாதித் தவறுகள் குறைந்துவிடும் என அவதானிக் கிறேன்!
twitter.com/thedonashok: ஒரு கசாப்புக் கடையில் ரெண்டு ஆடுகளை வெட்டிப் பார்த்திருக்கேன். ஆனா, ஒரே ஆட்டை ரெண்டு கசாப்புக் கடைகளில் வெட்டுறதை நேற்றுதான் பார்த்தேன். # நாஞ்சில் சம்பத்!
twitter.com/chevazhagan1: என் காதல் கதையை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, ‘என்னங்க, கதையில ஒரு ட்விஸ்ட்டுகூட இல்லை’ என்கிறாள். # அடிப்பாவி... அந்தத் திருப்புமுனையே நீதான்டி!
twitter.com/venkatesh6mugam: ‘நெப்போலியன்’ உள்ளே போனதும் ‘சாக்ரடீஸ்’ வெளியே வருகிறார்!
twitter.com/pasakkarapaiyan: நம் ஊரில் எப்போதும் இருக்கும் ஒரு ஆஃபர், ‘இங்கே கட்டினா 100; கோர்ட்ல கட்டினா 500’!
twitter.com/mani_kuttans: இந்தச் சமூகம், வீட்ல உள்ள நாய்க்குச் சாப்பாடு வெச்சுட்டு, ரோட்ல போற நாயை கல்லால் அடிக்கும்!

twitter.com/sanraj2416: பத்து பேரும் ஓடிவந்து கோல்கீப்பரைத் திட்டுறானுங்க... ‘ஏன்டா விட்டுட்ட?’ `அடேய்... நீங்க பத்து பேரும் விட்ட பிறகுதானடா அவன் விட்டான்!
twitter.com/Itz_rajez: ‘ `அம்மா... தாயே... பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தா போடுங்கம்மா’னு பிச்சை கேட்கிற காலம், ரொம்பத் தூரத்தில் இல்லை’ என்று அவதானிக்கிறேன்!
twitter.com/yugarajesh2: சூர்யா, நிஜமாவே சிங்கமாக மாறுகிற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பார்போல! # `சிங்கம்-3’
twitter.com/naiyandi: நீண்ட நேரம் பயணம்செய்து உறவினர் வீட்டுக்குச் சென்றேன்... டி.வி பார்த்துவிட்டு வந்தேன்!
twitter.com/chevazhagan1: சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக்கு கேட் கிறான்!
twitter.com/withkaran: மிக்ஸிக்கு ஒரு சைலன்ஸர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்கிறேன்’னு காலையிலயே எழுப்பிவிட்டுறாங்க!
twitter.com/Raj_leaks: ‘உங்க நம்பர் தாங்களேன்...’ என்பதன் அப்டேட்டட் வெர்ஷன்தான் ‘வாட்ஸ்அப்ல இருக்கீங்களா?’ எனக் கேட்பது!

twitter.com/GoofyCoder: ஹெல்மெட்டை வீட்டில் வைத்துச் செல்லாதீர்கள்... திரும்ப எடுக்க வர முடியாதுபோனாலும் போகலாம்!
twitter.com/Asalttu: அழுக்குச் சட்டை, கிழிந்த வேட்டி அணிந்து ஒரு முதியவர் முன்னால் சைக்கிளில் செல்கிறார். எத்தனை கனவுகளுடன் இவர் இளமைக் காலத்தைத் தொடங்கியிருப்பார்!
twitter.com/chevazhagan1: திருமலைநாயக்கர் பிறந்த நாள், இந்த ஆண்டு முதல் கொண் டாடப்படும் - ஜெ # ஏன்... அவர் போன வருஷம்தான் பிறந்தாரா?

twitter.com/Ulaganandha: ‘10 எண்றதுக்குள்ள’ படம் விஜய் டி.வி-கிட்ட இருக்கா..?! எண்ட கர்த்தாவே... 2016 பூரா எண்ணு வானே அந்தப் பாழப்போனவன்!