
சைபர் ஸ்பைடர்
facebook.com/nelsonxavier08: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக, ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சென்னையில் தரமான சாலைகள் போடப்பட்டன. செயற்கை வெள்ளத்துக்குப் பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் அதே இடத்தில் தரமான சாலைகள் போடப்பட்டன. நேற்று இரவு பார்க்கிறேன். தரமான சாலைகள் போடப்பட்ட அதே சாலைகளில் மீண்டும் தரமான சாலைகள் புதிதாகப் போடப்படுகின்றன. இந்தியாவிலேயே, ஏன் ஆசியாவிலேயே மாதத்துக்கு ஒருமுறை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தரமான சாலைகள் போடப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் எனக் கூறிக்கொண்டு...

facebook.com/Lara Dutta: விளையாட்டும்... நடிப்பும் (கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுடன் நடிகை லாரா தத்தா)
twitter.com/VignaSuresh: அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக் கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!
twitter.com/indra_siva: `வாழ்க்கையில எல்லாமே சரியா நடக்குது’னு கொஞ்சம் சந்தோஷப்படுறதுக்குள்ள, அடுத்த EMI வந்துருது!
twitter.com/meenammakayal: பிள்ளையின் பிறந்த நாளே... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறந்த நாள்!
twitter.com/sudhansts: வாழ்க்கையில பழம்தின்னு கொட்டையைப் போடலாம்னு பார்த்தா, வாழைப்பழத்தைக் கையில குடுத்துட்டுப் போயிடுறாரு கடவுள்!

twitter.com/indirajithguru: பையில் இருந்த சிகரெட் காணாமல்போகும் வரை, மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த விஷயம் பல தந்தைகளுக்குப் புரிவது இல்லை!
twitter.com/Baashhu: இப்பல்லாம் குழந்தைகள்கூட பேசிப் பழகவே பயமா இருக்கு. எருமை மாடு மாதிரி இருக்க, ஒரு பலூன்கூட ஊதத் தெரியாதாங்கிற ரேஞ்சுலதான் நம்மள டீல் பண்ணுதுக!
twitter.com/thoatta: வந்தவங்களை `பத்திரமா வீட்டுக்குத் திரும்பிப்போங்க’னு சொல்றதுக்கு ஒரு கோடி ரூபாய் செலவுல ஒரு மாநாடு... வாட் கேப்டன்?? :-/
twitter.com/hanihoney53: ஓசி சோறுனாகூட இவ்வளோ சந்தோஷம் வரலே, ஓசி WiFi-ன்னா மட்டும் அவ்வளோ சந்தோஷம்!
twitter.com/writercsk: மிடில் க்ளாஸ் என்பது, பொருளாதார நிலை அல்ல; அது ஒரு மனநிலை!
twitter.com/i_Soruba: `சாப்ட்டியா, கிளம்பிட்டியா, வீடு சேர்ந்தியா?’னு ரெகுலரா வர்ற கால்ஸ் வந்தா கடுப்பாவும், வராட்டி பயமாவும் இருக்கு!
twitter.com/su_boss2: `கேப்டன், யார்கூட கூட்டணி வைக்கப் போறார்?’னு எதிர்பார்த்துட்டு இருக்கிறவனைவிட, என்னென்ன காமெடி பண்ணப்போறார்னு எதிர் பார்த்துட்டு இருக்கிறவன்தான் அதிகம்!

twitter.com/teakkadai: வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!
twitter.com/withkaran: ஒருத்தர் காலை தெரியாம மிதிச்சுட்டா, உடனே தொட்டுக் கும்புடுற பழக்கம் மட்டும் இன்னும் போகவே இல்லை!
twitter.com/MrElani: சன் மியூசிக்குக்கு கால் பண்ணி, `என் மாமா பொண்ணு சரிதாவுக்கு ஒரு ஹாய் சொல்லிடுங்க’னு சொல்றான், ஏன்டா... அதை நீயே கால் பண்ணி சொல்ல முடியாதா?
facebook.com/nelsonxavier08: இந்தியாவில் தூய்மையான நகரம் என்பது, சாலைகளிலும் வீதிகளிலும் கண்ணுக்குத் தெரியும் குப்பைகளை எல்லாம் கூட்டி, கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கொண்டுபோய் மொத்தமாகக் கொட்டிவிட்டு வருவது என்றறிக!
facebook.com/vinayaga.moorthy.5070: நம்ம பத்திரிகைகளும் விஜயகாந்தும் சேர்ந்து, மக்கள் மனசுல `பாகிஸ்தான்’னாலே எதிரியா நினைக்கவெச்சுட்டாங்க. பாகிஸ்தான் மக்களை எதிரியாவே பார்க்கிறவங்க, அவங்க வாழ்க்கையில ஒரு பாகிஸ்தானியைக்கூட சந்திக்காதவங்களா இருப்பாங்க!