சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

facebook.com/saravanan.chandran.77:

எங்கோ படித்தது. எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்வது... அது ஓர் ஆப்பிரிக்கக் காடு. ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு சிங்கம் அங்கு விழித்து எழுகிறது. அதற்குத் தெரியும் இந்தக் காட்டிலேயே வேகமாக ஓடக்கூடிய மானைவிட வேகமாக ஓட வேண்டும். இல்லையெனில், மவனே பட்டினிதான். அதே காட்டில் இன்னொரு மானும் விழிக்கிறது. அதிவேகமாக ஓடக்கூடிய சிங்கத்தைவிட வேகமாக ஓடாவிட்டால், மவனே சாவுதான். நீங்கள் மானாக இருக்கிறீர்களா... சிங்கமாக இருக்கப்போகிறீர்களா? அது கேள்வி அல்ல. காலையில் எழுந்ததும் ஓடத் தொடங்க வேண்டும். அதுதான் முக்கியம்!

twitter.com/9pocfEysiyqjZId: 
இந்தி கற்காததால் தமிழகம் நிறைய இழந்துள்ளது - பொன்னார்.

# பானிபூரி சாப்பிடும்போது இந்தி தெரியாததால், எக்ஸ்ட்ரா பானிபூரியை இழந்துள்ளோம்!

twitter.com/Kannan_Twitz:  கடவுளுக்கு அப்புறம் தூணிலும் துரும்பிலும் இருப்பது சி.சி.டி.வி கேமராதான்!

twitter.com/pshiva475: லேடீஸ் துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்ட இருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற ரெண்டு மெத்தட்ஸ்... இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா, இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

twitter.com/sundartsp:  நடிகர்களுக்கு வயசாவதைவிட, அவர் ரசிகர்களுக்கு வயசாவதுதான் அவர்களுக்குப் பெரிய பிரச்னை!

twitter.com/kiramaththan
:  கடவுளாலேயே செகண்ட் லாங்வேஜ் கத்துக்க முடியலைன்னா, நாங்க மட்டும் எப்படிடா தேர்டு லாங்வேஜ் கத்துக்க முடியும்?:)

twitter.com/meera_twits : எல்.கே.ஜி போற குழந்தையைத் தூங்கவைக்கிறது ரொம்ப ஈஸி. ஹோம்வொர்க் எழுத எடுத்ததும் தூங்கியாச்சு!

twitter.com/mrithulaM:
`என் அப்பாவே தேவலாம்’னு எனக்கு உணர்த்தினவர்தான் என் பிள்ளைகளின் அப்பா!

வலைபாயுதே

twitter.com/meenammakayal: எவ்வளவு தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தாலும், ஒரு கண்ணை அம்மா மேல் வைத்தே இருக்கிறார்கள் குழந்தைகள்!

twitter.com/sundartsp: முன்னாடி எல்லாம் தெருவிலே இருக்கும் பொண்ணுங்க பேர் கண்டுபிடிக்கக் கஷ்டப்படணும். இப்ப அவங்க அப்பனுங்களே கார்ல  எழுதிடுறாங்க!

twitter.com/supersugumar
:  `வந்துட்டேன்னு  சொல்லு... ஆபீஸ்ல இருந்து திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. சீரியல் பார்த்துட்டு இருக்கிற உன் அம்மாகிட்ட போய்ச் சொல்லு... பசிக்குதுடா!’

twitter.com/kumarfaculty: 
`ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

twitter.com/mekalapugazh: 
மதியம் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்ற பள்ளிக்காலமும் இருந்தது என்பது, இந்தத் தலைமுறைக்கு நம்ப முடியாத தகவலில்தானே வரும்!

twitter.com/cablesanka
r மதர்ஸ் டேக்கு ரகசியமாக கிஃப்ட் வாங்கிவைக்கும் புள்ளைங்க,  ஃபாதர்ஸ் டேக்கு வந்து `என்ன ட்ரீட்?’னு கேக்குதுங்க. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா!

twitter.com/urs_priya:  கணவனை ஒரு சின்ன வேலையைச் செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)

twitter.com/kathirpaappy:  ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே எல்லாம் ஒரே நாள்ல வைக்கணும். ஏன்னா ரெண்டு பேரும் ஒரே நாள்லதானே ஃபாதர் - மதர் ஆகிருப்பாங்க!

twitter.com/NKKannan1:
  கரைவேட்டி என்பது...`Party’Wear உடைகளில் ஒன்று!

வலைபாயுதே

facebook.com/rasanaikkaaran:

பாஸ் அனுப்பிய ஒரு வார அவுட் ஆஃப் ஆபீஸ் இமெயிலை, 'இன்று ஸ்கூல் லீவு' நோட்டீஸ் போர்டைத் திரும்பத் திரும்பப் படிக்கும் சிறுவனின் குதூகலத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன்.

facebook.com/guru.shree.16:

இழவு ரெண்டு பேருமே 0-0 இருந்தா குழப்பம்தான். ஒருத்தன் கோல் போட்டப்புறம்தான் தெரியுது, ஓ வெள்ளைச் சட்டைதான் ஹங்கேரியா! ‪#EURO2016‬

facebook.com/shanmugame:

இந்தியாவிலேயே விலை மதிப்புமிக்க ஆவணம்... தமிழனின் ரேஷன் கார்டுதான்.

facebook.com/mani.pmp.5:

சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஆண்கள் வாங்கும் முதல் ஆடம்பரப் பொருள்... ‘பாடிஸ்பிரே’.


facebook.com/sa.na.kannan:
இன்று, கே டி.வி-யில், `துள்ளாத மனமும் துள்ளும்’. இந்தப் படத்தின் கதை என்ன? சந்திக்காத, அறிமுகம் இல்லாத ஓர் ஆணின் குரலை விரும்புகிறாள் ஒரு பெண். பார்வை பறிபோன பின்னரும், குரல் வழியாகவே அந்த ஆணை அடையாளம் காண்கிறாள். ஆனால், படத்தில் நடப்பது என்ன? எங்கேயோ இருந்து `இன்னிசை பாடிவரும்...’ பாடலை விஜய் பாடுவார். உன்னிகிருஷ்ணன் குரல். சிம்ரனும் அந்தக் குரலை விரும்ப ஆரம்பிப்பார். ரைட்டு.

சிம்ரனின் கவிதை `ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளியாகும். சிம்ரன் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் இருப்பார்; விஜய் இந்தப் பக்கம். கவிதை வெளியானதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக, `மேகமாய் வந்து போகிறேன்...’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்?

எஸ்.பி.பி போல பாடியிருக்கும் ராஜேஷ் என்கிற புதிய பாடகரின் குரலில். அந்தப் பக்க காம்பவுண்டில் இருந்து இந்தப் பாடலைக் கேட்கும் சிம்ரன், இது உன்னிகிருஷ்ணன் குரல் அல்ல. ராஜேஷ் குரல் என்றுதானே நினைத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, தமக்கு மிகவும் பரிச்சயமான குரல், அதாவது உன்னிகிருஷ்ணன் குரல் என சந்தோஷமாகி, அவரும் அழகாக ஸ்டெப்கள் வைத்து ஆடுவார். என்னய்யா நியாயம் இது?

வலைபாயுதே

சரி போகட்டும்... விஜய்யால் சிம்ரனின் பார்வை பறிபோய்விடும். ஒரு திருமண விழாவில், `இருபது கோடி நிலவுகள் கூடி...’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? சிம்ரன் கேட்டுப் பழகிய உன்னிகிருஷ்ணன் குரலிலோ, ராஜேஷ் குரலிலோ அல்ல. புதிதாக ஒருவர்... அதாவது ஹரிஹரன் குரலில்! (இதற்கு முன்னர்... கோபால் என்ற ஒரு பாடகரின் குரலில் `பளபளக்குது புது நோட்டு...’ என்ற ஒரு பாடலையும் விஜய் பாடுவார். அந்தப் பாடலை சிம்ரன் கேட்காததால் லூஸில் விட்டுவிடுவோம்.) ஹரிஹரன் குரலில் `இருபது கோடி நிலவுகள் கூடி...’ பாடலைக் கேட்கும் பார்வையற்றவரான சிம்ரன், உடனே இது விஜய்தானே பாடுவது என்பதுபோல அக்கம்பக்கத்தில் விசாரிப்பார். அது எப்படி உன்னிகிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்று ஆகும்? சிம்ரன் மேடம், பார்வை மட்டும்தானே போச்சு?

கடைசியில் சிம்ரனுக்குப் பார்வை சரியாகிவிடும். கலெக்டர் ஆகிவிடுவார். க்ளைமாக்ஸிலும், விஜய்க்கு தம் குரல் மூலமாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டிய நெருக்கடி. நல்லவேளை, அப்போது பார்த்து `இன்னிசை பாடி வரும்...’ என உதித் நாராயணன் பாடவில்லை. முதலில் பாடிய உன்னிகிருஷ்ணனே இந்தப் பாடலையும் பாடுவார். சுபம்.

குரல் வழியாகவே ஹீரோ மீது ஹீரோயின் காதல்கொள்கிறார் என்ற ஒரு கதையில்தான் இத்தனை ஓட்டை உடைசல்கள். பாடல், சண்டைக் காட்சிகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதற்காக இத்தனை எல்லை மீறல்களா?