
சைபர் ஸ்பைடர்

facebook.com/ Bala Ji : வாட்ஸ்அப்பில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பெயர் இருக்கும் வரையே, நல விசாரிப்புகளும் வணக்கங்களும் இருக்கும்.
facebook.com/ Hariramprasath Ramasamy: `தீபாவளிக்கு அஜித், விஜய் படம் எல்லாம் வரலை'னு ஃபேன்ஸ் பீல் பண்ணிட்டு இருந்தாங்களாம். அதைப் பார்த்துச் சிரிச்சுட்டுப் போனானாம் சிம்பு ரசிகன் ஒருத்தன். அட அட அட... என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்!
facebook.com/ David Exim: ஆரஞ்சுப் பழத்தோல் சாப்பிட்ட இடத்துலேயே இருந்தா, சாப்பிட்டது பொண்ணு; சுற்றிச் சுற்றி இருந்தா, சாப்பிட்டது பையன். டஸ்ட்பின்ல எறியுறேன்னு வீடு முழுக்க இருந்தா நானு!
#வீட்டம்மா கண்டுபிடிப்புகள்.
twitter.com/kanavukadhalan : வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா, பத்து நிமிஷம் கண்ண மூடி யோசிக்கணும், `யார் மேல பழியைத் தூக்கிப் போடலாம்!'னு.
twitter.com/bri2o: சிலர் சாம்பார் வைப்பதே ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடத்தான் என நினைக்கிறேன்.
twitter.com/bommaiya: சாதாரண மொளகா வெடிக்கு, வண்டியை நிறுத்தி அது வெடிச்ச பிறகு வண்டியைக் கிளப்பிட்டுப் போறாங்க. இதையே சிக்னல்கள்ல ஏன்டா செய்ய மாட்றீங்க?
twitter.com/amas32 : முட்டாளா இருக்க, அறிவு கம்மியா இருக்கணும்னு அவசியம் இல்லை; அதிக அன்பு காட்டினாக்கூட போதும்!
twitter.com/ bommaiya: மகள்: பழிக்குப்பழின்னா என்னாப்பா?
நான்: நம்ம பலகாரத்தைப் பக்கத்து வீட்டுக்குக் கொடுக்கிறதும், பதிலுக்கு அவங்க பலகாரத்தை நமக்குக் கொடுக்கிறதும்தான்.
twitter.com/ Piramachari: தீபாவளிக்கு வெடியும் புதுத் துணியும் எடுக்கிறது தானேடா இவ்ளோ நாளா இருந்தது... இப்ப என்னடா தங்க நகை எல்லாம் எடுக்கணும்கிறீங்க?

twitter.com/ Kannan_Twitz : உனக்கு பெரிய ஆபத்து வரும்னு யாராவது சொன்னா, நம்பி வருத்தப்படுற மனசுதான்... நீ பெரிய கோடீஸ்வரனாகப்போறேன்னு சொன்னா நம்பாம சிரிக்குது.
#என்னா_டிசைனோ
twitter.com/ lakschumi: தீபாவளிக்கு வந்த வெடியில் கார்த்திகைக்கும் பங்கு வெச்ச பள்ளிக்கால நினைவே போதும்!
twitter.com/ Ulaganandha: என் பாட்டி தீபாவளிக்கு மட்டும்தான் இட்லி சுடுவாங்களாம்; எங்க அம்மா தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் இட்லி சுட மாட்டாங்க! # இதான் ஜெனரேஷன் கேப்.
twitter.com/ jeba_idiot: ஒரே ஒரு பிஜிலி வெடிக்காக சாலையில் இரு பக்க வாகனங்களையும் நிறுத்தி, இறுதியில் அது வெடிக்காமல்போக கண்டதுண்டா... ஆயிரம் தற்கொலைக்குச் சமம்!
twitter.com/ udanpirappe: ஒரு தலைப்பைக் கொடுத்து அந்தத் தலைப்பை ஒட்டியே பேசணுங்கிற விதியைக் கடைப்பிடிக்கிற ஒரே ஜீவன், Jaya newsதான். உலக நியுஸ்லகூட `அம்மா'னு சேர்த்துடுறான்!
twitter.com/kalasal: எதிர்பாராத நேரத்தில் பெய்யும் பெருமழைக்கு, கவலைகளைக் கரைக்கும் வலிமை உண்டு!