Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விளம்பரம் எடுத்து, அது சோஷியல் மீடியாக்களில் பரவி, உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் கிளம்ப, 24 மணி நேரத்தில் அந்த வீடியோவே தூக்கி அடிக்கப்பட்டதுதான் கடந்த வாரத்தின் உலக ட்ரெண்டிங். அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இதில் மிக முக்கியமானது `பிளாக் லைவ்ஸ் மேட்டர் மூவ்மென்ட்'. இனவெறிக்கு எதிரான இந்தப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டு `ஜம்ப் இன்' என்ற தலைப்பில் விளம்பரம் தயாரித்து வெளியிட்டது பெப்சி. இளைஞர்கள் எல்லோரும் போராடிக்கொண்டிருக்க, மாடல் ஒருவர் போலீஸுக்கு பெப்சி கொடுத்து சிம்பிளாகப் போராட்டத்தை முடித்துவைப்பதுபோன்ற விளம்பரம்தான் அது. `மக்கள் யோசிக்கும் கோணத்தில் நாங்கள் யோசிக்கவில்லை' என்று விளம்பரத்தைத் தடைசெய்து மன்னிப்பும் கேட்டது பெப்சி. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று போராட்டங்களை இழிவுபடுத்தும் பெப்சி விளம்பரம் இந்தியாவிலும் வெளியானது; தமிழிலும் ஒளிபரப்பானது. ஆனால், இங்கே இதுபோன்று எந்தக் கண்டனக் குரல்களும் எழவில்லை.

வலைபாயுதே

twitter.com/deebanece: நம்ம சொந்தக்காரன் எல்லாரும் ஹோம் தியேட்டர் மாதிரி. நாம ஒரு விஷயத்தைச் சொன்னா, அதை அப்படியே நாலா பிரிச்சு நாலு பக்கங்களுக்கும் சொல்வாங்க.

twitter.com/TheJIGSAW: காலையில் எழுந்து தொலைக்காட்சியில் `பள்ளிகள் விடுமுறை' என்ற செய்தியைப் பார்த்ததும் மீண்டும் சந்தோஷத்தில் தூங்கச் செல்லும் குழந்தையின் மனநிலையில் தீபா.

twitter.com/drnathiyakrishn:
கங்கை அமரன் எல்லாம் பாவம்யா... சும்மா இருந்த மனுஷனை MLA ஆக்குறேன்னு கூட்டிட்டு வந்து, April Fool பண்ணிவிட்டிருக்காங்க.

வலைபாயுதே

twitter.com/twittornewton: ஒரே நேரத்தில் முகநூலிலும் ட்விட்டரிலும் பதிவிடுவது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் படத்தை ரிலீஸ் பண்ணுவதுபோல. சிலது அங்கே ஹிட்... சிலது இங்கே!

twitter.com/Nunmathiyon:
எப்போதும்போல் இருங்கள், எதிரிகளைக் குழப்ப அதைவிடச் சிறந்த உபாயம் வேறொன்றும் இல்லை.

twitter.com/ikrthik: செத்த பிறகு உங்கள் மனதில் வாழ்ந்தென்ன பிரயோஜனம்? இப்போது இங்குதான் இருக்கிறேன்!

twitter.com/iamkarthikeyank: வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னை வந்தாலும் அந்தப் பிரச்னைகள் எல்லாம் வேற ஒருத்தனுக்கு வந்ததா நினைச்சு யோசிச்சா போதும், உடனே தீர்வு கிடைக்கும்.

வலைபாயுதே

twitter.com/surya_ofcl: ஒரு தவறு செய்துவிட்ட பிறகு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லை என்றால், உங்கள் மனசாட்சி தவறுகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டது என்று பொருள்.

twitter.com/twittornewton:
மகனைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ரெண்டு பேருக்கும் வேற வேற பிராண்ட் ஜட்டி வாங்க வேண்டும் என்பது.

twitter.com/BoopatyMurugesh: தேர்தலுக்கு முன்னதாகவே 89 கோடி செலவில் மக்கள் நலத்திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்தார் டி.டி.வி. தினகரன். பொதுமக்கள் மகிழ்ச்சி - ஜெயா டிவி.

twitter.com/thalabathe: தோனி கிளவுஸ் மாட்டிக்கிட்டு கிரவுண்ட்ல இறங்குறது, எங்களுக்கு அழகர் ஆத்துல இறங்குற மாதிரி.

facebook.com/prabhu.ramasamy.73:
காபி ஷாப்ல இருந்து கிளம்பும்போது கார் கண்ணாடியைத் தட்டி காவலாளி கேட்டார், `டீ குடிக்கக் காசு கிடைக்குமா?' என்று.

வலைபாயுதே

facebook.com/suguna.diwakar: கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக தமிழகத்தில் உள்ள இந்துத்துவவாதிகள் கொந்தளிக்கிறார்கள். வடநாட்டு இந்துத்துவவாதிகளோ, அதே கமலின் மகள் அக்‌ஷரா நடிக்கும் இந்திப் படம் இந்தியக் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாகக் கொந்தளிக்கிறார்கள். அதாவது, அக்‌ஷரா படத்தில் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண் கர்ப்பமாவதைப்போல் காட்டப்படுகிறதாம். அட, அதுதானே மகாபாரதம்! அது இந்தியக் கலாசாரத்துக்கு எதிரானது என்றால், இப்போது மகாபாரதத்தை இழிவுபடுத்துவது யார்?

facebook.com/Santhosh Narayanan:


நகரம்
என் தாத்தாவுக்கு ஒரு ஹவுஸ் இருந்தது.
என் அப்பாவுக்கு ஒரு ஹவுஸ் இருந்தது.
எனக்கு ஒரு ஹவுஸ் ஓனர் இருக்கிறார்.

facebook.com/Raajaa Chandrasekar: எங்கேயாவது எதையாவது வைத்து விடுகிறேன். இந்த முறை என்னை!

வலைபாயுதே

கருத்தா பேசுவாரு!

ட்விட்டரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்புகொள்ளும் கலகல ஐடி roflmaxx. சொந்தப் பெயர் வினோத். பார்க்க ‘பேங்க் ஆபீஸராட்டம் இருப்பார். வேலையும் அதுதான்' என்கிறார்கள் அவரது நண்பர்கள். ‘சொந்த ஊர் நாகர்கோவில்தானே?' என்றால், ‘ல்ல... நாரோயிலு’ என்பார். டாப்பிகல் விஷயங்களில் தர லோக்கலாக எகிறியடிப்பார். இவர் ட்வீட்களில் எள்ளலோடு, சமூகக் கண்ணோட்டமும் இருக்கும். நீங்க விளையாடுங்க ப்ரோ!