Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

ப்ஸ்மேஷ், ஸ்மூல் என சமூக வலைதளங்களை அவ்வப்போது எதாவது ஓர் மொபைல் அப்ளிகேஷன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அப்படி, சென்ற வாரம் சோஷியல் மீடியாவின் பாகுபலி ஆனது FACEAPP. புகைப்படங்களுக்கு ஏழு ஃபில்டர்தான் தருகிறது. ஆனால், ஒவ்வொன்றும் தசாவதார லெவல். ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்தால், அவரைச் சிரிக்க வைப்பது, வயதானவராக்குவது, டிஜிட்டல் ப்யூட்டி பார்லராகவே செயல்படுவது, ஆணைப் பெண்ணாக மாற்றுவது என ஓவர் டைம் பார்க்கிறது ஃபேஸ்ஆப். நெட்டிசன்ஸ் படங்களை அப்லோடு செய்ய சசிகலா தொடங்கி அஜித் வரை பலரின் கெட்அப்களை ஃபேஸ் ஆப்போடு இணைத்து ஒரு லோடு மீம்ஸ்களும் களம் இறங்கின.

வலைபாயுதே

facebook.com/boopath23
கடைசியா பண்ணிக்கலாம்னு ஒதுக்கி வச்ச விஷயத்தாலதான் முதல் அடி விழும்!

facebook.com/billa.mani
கிழிந்த வெண்சுவரை
தையலிட்டிருந்தது
எறும்புச் சாரை.

twitter.com/ameerfaj
வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு செல்லும். அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

twitter.com/jeytwit
டிவில சேனல் மாத்தாமல் ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டு இருந்தா... ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கனும். இல்ல மனசு சரியில்லாம இருக்கனும்

twitter.com/writernaayon
பெண்களிடம் ரகசியம் தங்காது என யார் சொன்னது?
அது தன்னைப் பற்றியதாய் இருந்தால் மூச்சுகூட விட மாட்டார்கள்!

வலைபாயுதே

twitter.com/iam_vinoth
கல்யாணம் பண்ணவனும் பொலம்புறான்... கல்யாணம் பண்ணாதவனும் பொலம்புறான். அப்போ எவன்தான்டா சந்தோசமா இருக்கறது?

facebook.com/nithyabharadhi
பழைய நட்புகளிடம் பேசும்போது தெளிவாகப் புரிகிறது. வாழ்க்கை எத்தனை மாற்றம் கண்டுவிட்டதென்று!

twitter.com/Itz_rajez
போற வழில, சட்ட கிழிஞ்சிருந்தவங்களை பார்த்துட்டு, சில்ற எதுனா தூக்கிப் போட்ராதீங்கடா... பாவம் அவங்க, நீட் எக்ஸாம் எழுத வந்தவய்ங்களாக்கூட இருக்கலாம்.

twitter.com/jeytwits
திகில் படங்கள்ல ஒரு பங்களாவ காட்டி அங்க ஒவ்வொருத்தரா மர்மமா சாகுற மாதிரி காட்டுவாங்க... அதெல்லாம் படத்துல மட்டும் தான் நடக்கும்னு நினைச்சேன்.

twitter.com/Kozhiyaar
எதைப் படிச்சா நல்ல மார்க் எடுக்கலாம்னு தெரிஞ்ச முதல் பெஞ்சைவிட, எதைப் படிச்சா ஃபெயில் ஆகமாட்டோம்னு தெரிஞ்ச கடைசி பெஞ்சுதான் வாழ்க்கையில் வெல்வது!

twitter.com/its_nabi
மிஸ் யூனு யாரைப் பார்த்துவேணாலும் ஈசியா சொல்லலாம். ஆனால், அந்த வார்த்தையின் முடிவில் நம் கண் முன்னே கண் கலங்கி நிற்கும் உறவு கிடைப்பது வரம்.

twitter.com/Dhrogi
புள்ளைக்கு நல்லபுத்திய சொல்லிக் கொடுங்கனு மனைவி சொன்னா அவங்களுக்குப் பிடிச்சதா சொல்லிக் கொடுக்கணும்னு அர்த்தம்.

twitter.com/bLaCkYTwitS
வேலை தேடுபவர்களும் உழைப்பாளிகளே!

வலைபாயுதே

twitter.com/Railganesan
10மீ. இடைவெளி விட்டு வரவும்னு பின்னாடி எழுதியிருக்கிற எந்த வாகனமும் தனக்கு முன்னாடி போற வாகனத்திலிருந்து 10மீ. இடைவெளி விட்டுச் செல்வதில்லை!

twitter.com/jeytwits
ஷங்கர் என்பார், ராஜமௌலி என்பார்... மோடியின் டைரக் ஷன் அறியாதோர்!

twitter.com/thoatta
கோலி 100 அடிப்பானா, கெயில் 100 அடிப்பானான்னு பார்க்கிற காலம் போய் டீம் 100 அடிக்குமான்னு ஏங்குற காலத்துல இருக்காங்க RCB எண்டர்டெயினர்ஸ்

twitter.com/pshiva475
நம்மைவிட மோசமான நிலைமையில இருப்பவனை பாத்துவரும் சந்தோஷத்தை விட நம்மைவிட, தொப்பை அதிகமா இருப்பவனை பாத்ததும் வரும் மகிழ்ச்சியின் `அளவே' தனிதான்.

twitter.com/Akniee1
இந்தக் காலத்தில முக்கால்வாசிப் பேருக்கு ஒரு வியாதி இருக்கு... அது அடுத்தவன் மூளை என்ன நினைக்குதுன்னு யோசிக்கிறதுதான்.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar 
உலகில் அதிகம் தொலைந்தவை கனவுகளாகத்தான் இருக்கும்!

twitter.com/mekalapugazh 
அம்மா-அப்பா போடும் சண்டையே...
குழந்தைகளின் முதல் உலகப்போர்!

twitter.com/teakkadai1
பிதாமகன் சூர்யா - சிம்ரன் ஆட்டம் ஓர் அட்டகாசமான டப்ஸ்மாஷ்.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar
 அமைதியாய் இருப்பதற்கே அதிக மெனக்கெட வேண்டி இருக்கிறது!

கருத்தா பேசுவாரு

வலைபாயுதே‘காமன்மேன்’ டிபியில் இருக்கும் கலக்கல் மேன் @thirumarant. வெத்தலைச் சொம்பு இல்லாத விர்ச்சுவல் நாட்டாமை. ட்விட்டர் சந்தில் எந்தப் பஞ்சாயத்தென்றாலும் தரவுகளோடும் தகவல்களோடும் வந்து தீர்த்து வைப்பவர்களுக்கு இவர்தான் முன்னோடி. ஆர்ப்பாட்டமின்றி எல்லா வயதினரோடும் நட்பு பாராட்டும் இவர், அப்பாய்ன்மென்ட் வாங்கிக்கொண்டுதான் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு ஐடி நிறுவன உயரதிகாரி. பாண்டிச்சேரிக்காரர் இப்போது சென்னையில்!