சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

twitter.com/HAJAMYDEENNKS 

தமிழ்நாட்டில் பண்டிகைகள் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், இடைத்தேர்தல்...!

twitter.com/Thaadikkaran

நமக்குன்னு டிரெஸ் எடுக்கப் போனா ஒரு டிரெஸ்ஸும் பிடிக்கிறதில்லை; கூட இருக்கிறவனுக்கு டிரெஸ் எடுக்கப் போனா துணிக்கடையே பிடிக்குது!

facebook.com/Brinda Keats

வர வர இந்தத் தமிழ்நாட்டு ஆண்களுக்கு வெட்கம் இல்லாம போயிடிச்சி. ‘சார், உங்க பனியன் ஸ்ட்ராப் தெரியுது. சரி பண்ணுங்கனு’ சொல்றேன், சரி பண்ணாம முறைச்சிட்டுப் போறான். எல்லாம் கலிகாலம்!

வலைபாயுதே

twitter.com/thoatta 

அவனவன் டெங்குல செத்துக்கிட்டிருக்கான், இவங்க சிங்கக்குட்டிக்குப் பேர் வச்சு, காது குத்தி, கெடா வெட்டிக்கிட்டிருக்காய்ங்க!

வலைபாயுதே



twitter.com/HAJAMYDEENNKS 

டெங்கு மரணங்களையும் பயத்தையும் தாண்டி மக்கள் கொஞ்சம் சிரிக்கிறாங்கன்னா அதுக்கு நம் அமைச்சர்கள்தான் முழுக் காரணம்!

twitter.com/smhrkalifa

நம் கோபங்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பது நம் தாயிடம் மட்டுமே.

twitter.com/Kannan_Twitz

பொய்களிலேயே ஆகச்சிறந்த பொய்!

‘எல்லாருமே சொல்றாங்க.’

வலைபாயுதே

facebook.com/Vijayasankar Ramachandran

கவிழவேண்டிய ஆட்சியைக் காத்து நிற்பவர்கள், குஜராத்தில் நடக்க வேண்டிய தேர்தலை நடத்தத் தயங்குபவர்கள் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி நியாயமான ஆட்டம் ஆடுவார்கள் என்று தோன்றவில்லை. இன்னும் இந்த ஆட்சியின் தன்மை குறித்து வாதங்கள் நடத்திக்கொண்டிருப்பவர்களைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை.

twitter.com/ameerfaj 

ஹோட்டல்ல சாப்பிட இடம் கிடைக்கலனா, சாப்பிடறவன் தட்டைக் குறுகுறுனு பார்த்தால்போதும்,  இடம் எளிதில் கிடைத்துவிடும் என்பதை அறிக!

twitter.com/nathanjkamalan

வசதிகள் இல்லாவிட்டாலும் சொந்தமான வீடு என்ற கர்வம் கிராமவாசிகளிடம் மட்டுமே இருக்கிறது!

twitter.com/saravananucfc

பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்ல, ஆனால் சொல்ற அளவுக்கு இருக்கு வாழ்க்கை.

வலைபாயுதே

twitter.com/karunaiimaLar

சம்பாதிக்க ஆரம்பிக்காத வரை எல்லாப் பண்டிகையையும் சந்தோஷமா கொண்டாடியிருப்போம்!

twitter.com/umakrishh

என் மௌனங்கள் யாவும் உனக்கான கவன ஈர்ப்புத் தீர்மானங்களே... வந்து என்னவென்றுதான் கேளேன்...

பேசமாட்டேன் என்றாவது பேசிவிடுவேன்!

twitter.com/HAJAMYDEENNKS


கிராமத்து டீக்கடைகள் ஒரு அறிவு வளர்ப்பு மையம்...!

வலைபாயுதே

twitter.com/Tamil_Zhinii

கல்யாணத்த பண்ணிப் பார்! வீட்ட கட்டிப்பாருங்கறதோட நிறுத்தாம, பண்டிகை சமயத்துல வீட்ட சுத்தம் பண்ணிப் பாருங்கறதையும் சேர்த்துடலாம்!!!

twitter.com/Tamizha_Hiphop

ஒவ்வொரு உண்டியலும் சேமித்து வைத்துள்ளது ஓரிரு சில்லறைகளையும் ஓராயிரம் ஆசைகளையும்...

twitter.com/Kozhiyaar

பின்னிரவிற்குப் பின்னான ஆண்களின் விழிப்பு, ஒன்று காதல் பிரச்னையாக இருக்கும், இல்லை காசு பிரச்னையாக இருக்கும்!

twitter.com/ajmalnks

வக்கீல்களின் குறுக்குக் கேள்விகளுக்கு இணையானவை குழந்தைகள் கேட்கும் குறுக்குக் கேள்விகளும்.

வலைபாயுதே

twitter.com/abuthahir707

நம்ம ஆளுங்கட்சில இருக்குற விஞ்ஞானிகளை வெச்சி நம்மளே ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பலாம்போல!

twitter.com/manipmp

நல்ல வேளை, டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லல!

facebook.com/tvignesh49

​முன்னாடியெல்லாம் தமிழ்நாட்டுல கல்லெறிஞ்சா இன்ஜினீயர் மேல விழும். இனி அந்தக் கல் போட்டோகிராபர்கள் மேல விழும் நாள் வெகுதொலைவில் இல்லை!