Published:Updated:

75 வயது ஆண், 70 வயதுப் பெண்ணின் காதல் திருமணம்; முதியோர் இல்லத்தில் கோலாகலம்!

முதியோர்கள் திருமணம்

முதியோர் இல்லத்தை நடத்தும் பாபாசாஹேப் கூறுகையில், ’இருவரும் காதலிப்பதாகத் தெரிந்தவுடன் அவர்களிடம் இது குறித்துப் பேசினோம். அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் சட்டப்படி திருமணம் செய்து வைத்தோம்’ என்று தெரிவித்தார்.

Published:Updated:

75 வயது ஆண், 70 வயதுப் பெண்ணின் காதல் திருமணம்; முதியோர் இல்லத்தில் கோலாகலம்!

முதியோர் இல்லத்தை நடத்தும் பாபாசாஹேப் கூறுகையில், ’இருவரும் காதலிப்பதாகத் தெரிந்தவுடன் அவர்களிடம் இது குறித்துப் பேசினோம். அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் சட்டப்படி திருமணம் செய்து வைத்தோம்’ என்று தெரிவித்தார்.

முதியோர்கள் திருமணம்

வயதான காலத்தில் கவனிப்பாரற்று இருக்கும் முதியவர்கள் பலர், தம்பதியாக முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதுவும் கணவனோ, மனைவியோ இறந்து விட்டால் துணையின் நிலை இன்னும் மோசம். அப்படி பாதிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த இருவர், வயோதிகத்தில் காதலித்து, அந்த முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், ஷிரோல் தாலுகாவில் இருக்கும் கோசர்வாத் என்ற இடத்தில் உள்ள ஜானகி முதியோர் இல்லத்தில்தான் இந்த கொண்டாட்ட காட்சி.

பாபுராவ் - அனுஷ்யா
பாபுராவ் - அனுஷ்யா

ஜானகி முதியோர் இல்லத்தில் பாபுராவ் (75) தங்கியிருந்தார். புனேயை சேர்ந்த அனுஷ்யாவும் (70) இங்கு தங்கி இருந்தார். வயதானாலும் இருவரும் தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் இந்த ஆசிரமத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் பேசிக்கொண்டபோதும், தங்கள் வாழ்க்கை கதைகளை பகிர்ந்து கொண்ட போதும் ஒரு நல்ல நட்புறவு உண்டானது. பாபுராவ், அனுஷ்யாவை விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். அவரும் சம்மதிக்கவே, இருவரும் முதியோர் இல்லத்தில், கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பாபுராவ் கூறுகையில், `முதியோர் இல்லத்திற்கு வரும் வரை நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். இப்போது அனுஷ்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார். அனுஷ்யா கூறுகையில், `பாபுராவ் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்னதும் அது குறித்து உடனே முடிவு எடுக்கவில்லை. 8 நாள்கள் கழித்துத்தான் எனது முடிவை தெரிவித்தேன். இப்போது நான் எடுத்துள்ள முடிவு சரியானது என்று உணர்கிறேன்’ என்றார்.

முதியோர் இல்லத்தை நடத்தும் பாபாசாஹேப் கூறுகையில், `இருவரும் காதலிப்பதாகத் தெரிந்தவுடன் அவர்களிடம் இது குறித்து பேசினோம். அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் சட்டப்படி திருமணம் செய்து வைத்தோம்’ என்று தெரிவித்தார்.

அனுஷ்யாவும், பாபுராவும் தங்கள் துணைகளை இழந்து முதியோர் இல்லத்திற்கு வந்தனர். இனி இறக்கும் வரை ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க முடிவு செய்துள்ளனர்.