Published:Updated:

பெண் தோழியை காக்பிட்டுக்குள் அழைத்துச் சென்ற விமானி; ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

ஏர் இந்தியா ( vikatan )

பெண் தோழியை விமானக் கட்டுப்பாட்டு அறைக்குள் (காக்பிட்) அழைத்துச் சென்ற விமானியின் உரிமம் 3 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:

பெண் தோழியை காக்பிட்டுக்குள் அழைத்துச் சென்ற விமானி; ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

பெண் தோழியை விமானக் கட்டுப்பாட்டு அறைக்குள் (காக்பிட்) அழைத்துச் சென்ற விமானியின் உரிமம் 3 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஏர் இந்தியா ( vikatan )

கடந்த பிப்ரவரி மாதம் துபாய் நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தின் கார்பிட்டில் தன்னுடைய பெண் தோழியை பயணிக்க செய்த விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பாதுகாப்பு மீறலாக இருந்தபோதிலும், ஏர் இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் புகார்தாரர் டி.ஜி.சி.ஏவை அணுகினார்.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்
ANI

இது தொடர்பாக விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகாரளித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக டி.ஜி.சி.ஏ. விசாரணை நடத்தியது. இந்த நிலையில், விமான விதிகள் 1937-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், டிஜிசிஏ விதிமுறைகளை மீறியதற்காகவும், விமானியின் (பைலட் இன் கமாண்ட்) பைலட் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுகிறது என டிஜிசிஏ தெரிவித்தது.

மேலும், பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தை கவனிக்காததற்காகவும், இந்த விவகாரத்தை திறம்பட தீர்க்காததற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.