Published:Updated:

குப்பைக்காக சண்டை; தூய்மைப் பணியாளரை நோக்கிச் சுட்ட தொழிலதிபர்!

தொழிலதிபர் மகேஷ் படேல்

நடந்தவை அனைத்தையும் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, அது வைரலானது. தூய்மைப் பணியாளர்கள் பலர் இணைந்து, மகேஷ் படேல் மீதும், அவர் மகன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Published:Updated:

குப்பைக்காக சண்டை; தூய்மைப் பணியாளரை நோக்கிச் சுட்ட தொழிலதிபர்!

நடந்தவை அனைத்தையும் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, அது வைரலானது. தூய்மைப் பணியாளர்கள் பலர் இணைந்து, மகேஷ் படேல் மீதும், அவர் மகன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொழிலதிபர் மகேஷ் படேல்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருபவர் தொழிலதிபர் மகேஷ் படேல். இவர் அப்பகுதியின் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவின் நெருங்கிய உறவினர். மகேஷின் மனைவிக்கும் தூய்மைப் பணியாளருக்கும் இடையே, ஈரமான குப்பை மற்றும் காய்ந்த குப்பையை பிரித்து வைக்காதது தொடர்பாக விவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான விவாதத்தின் போது மகேஷ் படேலும் அவரின் மகனும் அந்த இடத்துக்கு வந்துள்ளனர்.

தொழிலதிபர் மகேஷ் படேல்
தொழிலதிபர் மகேஷ் படேல்

அப்போது மகேஷின் குடும்பமே தூய்மைப் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன் வீட்டுக்குள் சென்ற மகேஷ் துப்பாக்கியுடன் வெளியில் வந்து தூய்மைப் பணியாளரை நோக்கிக் காண்பித்து மிரட்டியுள்ளார். பின்னர் யாரும் இல்லாத இடத்தை குறிபார்த்து, துப்பாக்கியால் சுட்டும் உள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்தப் பணியாளர் அங்கிருந்து தன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இத்துடன் இந்தப் பிரச்னை முடியவில்லை. இந்த அனைத்து சம்பவங்களையும் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் வைரலாகி வருகிறது. மேலும் தூய்மைப் பணியாளர்கள் பலர் இணைந்து துப்பாக்கி காட்டிய மகேஷ் படேல் மீதும், பணியாளரை உயிருடன் புதைத்து விடுவதாக மிரட்டிய அவர் மகன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொழிலதிபர் மகேஷ் படேல்
தொழிலதிபர் மகேஷ் படேல்

ஆனால் மகேஷ் படேல் முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினர் என்பதால் அவர் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலான பிறகு பேசிய காவல்துறை அதிகாரி ஆஷிஷ் மிஷ்ரா, “இந்தச் சம்பவத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பதை விசாரித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.