Published:Updated:

Influencer Talk: "நீ கறுப்பா இருக்க, கேமரா முன்னாடி வர வேண்டாம்னு சொன்னாங்க!"- இன்ஃபுளூயன்சர் ஆசிக்

ஆசிக்

"ஒரு வருஷத்துக்கு முன்னாடி புது போன் வாங்கிருந்தப்போ சும்மா ஒரு ரீலீஸ் பண்ணிப் போட்டேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன்." - இன்ஃபுளூயன்சர் ஆசிக்

Published:Updated:

Influencer Talk: "நீ கறுப்பா இருக்க, கேமரா முன்னாடி வர வேண்டாம்னு சொன்னாங்க!"- இன்ஃபுளூயன்சர் ஆசிக்

"ஒரு வருஷத்துக்கு முன்னாடி புது போன் வாங்கிருந்தப்போ சும்மா ஒரு ரீலீஸ் பண்ணிப் போட்டேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன்." - இன்ஃபுளூயன்சர் ஆசிக்

ஆசிக்
நிறங்களை வச்சு மனுஷங்களை எடை போடுவது காலம் காலமா நடந்துட்டு இருக்க ஒண்ணுதான். குறிப்பா கேமரா முன்னாடி, அந்த கேமரா லென்ஸ்க்கு முன்னும் பின்னும் நடக்கிற காட்சிகளே ஆயிரம் கதைகள் சொல்லும். ஆனால் அப்படிப்பட்ட இடர்பாடுகளுக்குள் தொலைந்து போய்விடாமல் அதன் மீது கால் பதித்துப் பயணிப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி நாம் சந்தித்துப் பேசின ஒரு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்ஸர்தான் ஆசிக்.

“நான் இன்ஸ்டாக்கு முன்னாடி ஒரு வானொலி நிலையத்துல ஷோ புரொடியூசரா இருந்தேன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே போய்ட்டேன். கிட்டத்தட்ட இரண்டரை வருஷம் இன்டர்ன்ஷிப் பண்ணேன். நான்தான் அங்க இன்ஸ்டா ஹேண்டில் பண்ணினேன். அப்புறம் அங்கே இருந்து வேற ஒரு நிறுவனத்துக்கு மாறினேன். அங்க உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு மட்டம் தட்டி உட்கார வச்சுட்டாங்க. எனக்கு என்ன நல்லா வரும்னு எனக்குப் பண்ணிக்காட்டதான் தெரியும், சொல்லிப் புரிய வைக்கத் தெரியாது.

ஆசிக்
ஆசிக்

அங்க அது மட்டும் இல்லாம, 'நீ கறுப்பா இருக்க... நீ கேமரா முன்னாடி எல்லாம் வர வேண்டாம். கன்டென்ட் மட்டும் கொடு. வேற யாராவது நடிக்கட்டும். உன் மூஞ்சிய பாத்தா எனக்கு நிறைய வியூஸ் போகாது. உன் மூஞ்சிய நீ கண்ணாடியில் பார்த்திருக்கியான்னு கேட்டாங்க. நான் மனதளவில் ரொம்பவே உடைஞ்சிட்டேன். அப்புறம் எங்க ஆடிஷன் போனாலும் என்ன பார்க்கிறப்போ, என்னப் பத்தி சொன்ன அந்தக் குரல் மட்டும்தான் என்னைச் சுத்தி ஒலிச்சுக்கிட்டே இருக்கும். அப்புறம் அவங்க சொன்ன மாதிரி எனக்கு அதெல்லாம் வராது போலனு நானே நினைச்சுட்டு, எழுதி மட்டும் கொடுத்துட்டு இருந்தேன்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி புது போன் வாங்கிருந்தப்போ சும்மா ஒரு ரீலீஸ் பண்ணிப் போட்டேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து பண்ண ஆரம்பிச்சேன். என் மூஞ்சிக்கு நிறைய வியூஸ் போகாதுன்னு சொன்னவங்க முன்னாடி, எனனோட வீடியோஸ் 1 லட்சம் வியூஸ் போனது ரொம்ப சந்தோஷம். நான் இப்போ வேலைப் பாக்குற நிறுவனத்தோட சி.இ.ஓ என்னோட ரீல்ஸைப் பார்த்துட்டு பாராட்டுனது கூடுதல் சந்தோஷம். அதுதான் எனக்கு ரொம்ப பெரிய ஊக்கமா இருந்துச்சு.

ஆசிக்
ஆசிக்

என்டர்டெயின் பண்ணணும். முதல்ல என்ன நான் சந்தோஷமா வச்சுக்கதான் இது பண்றேன். முடிஞ்ச அளவு எல்லாரையும் ஜாலியா சிரிக்க வைக்கணும். எனக்கு நடக்குற விஷயங்களை, கொஞ்சம் நகைச்சுவையோட சில டயலாக் போட்டு, சில சமயங்களில் நானே பேசி எடிட் பண்ணிப் போடுவேன். ஒரு இடத்துக்குப் போறப்போ எல்லாரும் போட்டோ எடுப்பாங்க. அதே மாதிரி நான் ரீல்ஸ் எடுப்பேன். பத்து இருபது நிமிஷத்திலேயே அதை எடிட் பண்ணிப் போட்டுருவேன். இப்படித்தான் என்னால ஒரு வருஷத்திலேயே 500க்கும் மேற்பட்ட வீடியோஸ் போட முடிந்தது. அதுக்காக கன்டன்ட்டோட தரத்தை என்னைக்குமே குறைக்கமாட்டேன்.

எந்த மாதிரி வீடியோஸ் அதிகமா மக்கள் பிடிச்சு பாக்கறாங்க, ஷேர் பண்றாங்கன்னு பார்ப்பேன். அடுத்து அத பண்ண மாட்டேன். ஏன்னா எனக்கு எல்லா தரப்பு மக்களையும் என்டர்டெயின் பண்ணனும்னு ஆசை. என்னுடைய எல்லா வீடியோக்களுக்கும் லைக் போட்ட ஒரே ஆள் என் அப்பாதான்” எனச் சொல்லும் போதே குரலில் அவ்வளவு மனநிறைவு.

ஆசிக்
ஆசிக்

"என்னால தொட்டு ஃபீல் பண்ண முடியுற, நான் பயன்படுத்தி நல்லா இருக்குன்னு தோன்றத மட்டும்தான் கொலாப் (விளம்பரம்) பண்ணுவேன். ஒரே நாள்ல வெள்ளையாகலாம், முடி கொட்றத நிப்பாட்டலாம்-னு வர்ற பொருள்களை எல்லாம் நிச்சயமா புரொமோட் பண்ண மாட்டேன்.

நான் யோசிக்கிறத தைரியமா சொல்ல முடியிற சுதந்திரத்தை எனக்கு இன்ஸ்டாதான் கொடுத்துச்சு” என அவர் சொல்லும் போதே அடுத்து இதை இன்னும் நல்லபடியாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் வேகமும் தெரிந்தன.