லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

உங்க `பக்கெட் லிஸ்ட்'ல இருக்கிறதையெல்லாம் செய்யணுமா? - சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்

லைக் கமென்ட் ஷேர்

Saravanakarthikeyan Chinnadurai

தக்கன பிழைப்பதில்லை.பிழைப் பதையே தக்கது என்கிறோம்.

Musthafa Qasimi

கவலைக்கு நீ விருந்தோம்பல் செய்யும் காலமெல்லாம் அது உன்னை விட்டுப் போகாது.

Erode Kathir

உங்கள் நம்பிக்கையைக் குலைத்த யாரேனும் நினைவுக்கு வருகின்றனரா? நன்றாகப் பாருங்கள்... உடன் நின்றோரின் நம்பிக்கையைக் குலைப்பதோடு அவர்கள் நின்றுவிடுவதில்லை. நம்பிக்கையைக் குலைத்ததற்கு தனித்ததொரு நியாயம் கற்பிக்கும் கடமையையும் செய்துவிட்டுத்தான் ஓய்ந்திருப்பர்.

Karthik

21 வயதில் திருமணம் முடித்து குழந்தை பெற்று வளர்க்கும் அளவுக்குப் பெண்ணுக்கு பக்குவம் இருக்கும் என்று நம்பும் பெற்றவர் களால், திருமணம் ஆகாத பெண் 27 வயதிலும் விவரம் தெரியாத பக்குவமற்ற ஒருத்தியாகத்தான் இருப்பாள் என்றும் நம்ப முடிவது தான் முரண்.

shreyaghoshal: இசை வண்ணம்...
shreyaghoshal: இசை வண்ணம்...

பரமேசுவரி

நடக்க நடக்க

வளர்ந்தபடி இருக்கும்

இந்தப் பாதை

எதிரில் நீ

சிரித்தபடி நிற்கிறாய்

ஓரடி எடுத்து வைத்தால்

உன்னை அடைவேனா

நீயும் வரலாம்தானே..!

Gunavathy

ஓரிருவர் யோசித்தாலும் கூட, இது வெற்றி.

நீண்ட உடல்நல சிக்கல், ஆட்டோ இம்யூன் நிலைகள் என தொடர்ச்சி யான சிக்கல்களை எதிர்கொண்ட போதும், எந்த விதமான முயற்சியும் செய்யாமல், அசட்டையாக திரிந்ததன் விளைவை அதிகமாக உணர்ந்திருக் கிறேன்.

நிறைய கனவுகள், கடமைகள் எல்லாம் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கு மில்லையா? இந்த விஷயங்களை யெல்லாம் செய்ய தீர்மானமாக உழைக்க வேண்டும் என நினைக் கிறீர்கள்தானே?

அதற்கு முன்பாக, Prioritize Health. Take baby steps towards maintaining or improving good health. இதில் யாரும் யாரையும் முழுதாக கண்காணித்துக்கொண்டே இருக்கமுடியாது. Prioritize your own health PLEASE.இல்லை யெனில் எவ்வளவு பெரிய திட்டங் களானாலும் சரி... நிஜமாகவே கேலிக் குரியவை... Prioritize HEALTH, You Dear Women.

sivaangi.krish: மிஸ் குக்!
sivaangi.krish: மிஸ் குக்!

Shobana Narayanan

ஒரு ஆணுடன் வாழும் வரைதான் சிறப்பான வாழ்வு, தனித்திருப்பது இயலாது என நம்பிக்கொண்டிருத்தல்,

பொருளாதார சுதந்திரமற்று எதையும் கற்றுக்கொள்ள விரும்பாமல் அவர் பாத்துப்பார் என்னும் மனப்பான்மை, வண்டி கூட ஓட்டத்தெரியாமல் அங்க டிராப் பண்ணுங்க... இங்க பிக்பண்ணுங்க என வாழ்தல்,

என் மகன் நா பிசைஞ்சு வச்சாத்தான் சாப்பிடுவான் என்று பெருமை கொள்ளுதல், நா இல்லேன்னா வீடு படுத்துரும் என உறுதியாக நம்புதல், நம்ம சாதி் சனத்தோட பழக்கவழக்கங்களை ஒரு போதும் மீறக் கூடாது என்றும், மதப்பழக்கம், வீட்டுப்பழக்கம் என அனைத்து பழக்கங்களையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளல்,

அரசியலில் பங்கெடுக்காமை, செய்தித்தாள் கூட படிக்காமை... இவையெல்லாம் பெண்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட தடைகள். இதனை மீற முயலும் போதுதான் ஆணின் தடை வருகிறது. இதில் உழலும் வரை ஆண் தள்ளி நின்று தான் ரசிக்கிறான். வெளிவருகிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. எழ வேண்டும் என்ற எண்ணமாவது வருகிறதா என்பதே களம் காண முதல் படி. சார்ந்தோர் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்! (பெண்கள் வளரணும்னு நினைக்கும், உழைக்கும் ஆண்களுக்கும் வாழ்த்து பொருந்தும்).

trishakrishnan: பார்ட் 2 ஆன் த வே...
trishakrishnan: பார்ட் 2 ஆன் த வே...

Primya Crosswin

மடி மாற்றிக் கொள்ளப்படுகிற சிசு

பிரக்ஞை இன்றி உறங்குற வரையில்

அசவுகரியங்கள் அதற்கு இல்லை...

துயில் கலைந்த பின்

தாயல்லாத மடி உறுத்த

வீறிடுகிறது...

எல்லா துயிலும்

ஏதாவது ஓர் தருணத்தில்

கலைந்து விடத்தான் வேண்டும்!

பா. திருச்செந்தாழை

பதிலுக்குப் பதில் பேசத்தெரியாதவர்கள் துளி கண்ணீருடன் நின்றுவிடுகிறார்கள். உலகில் எவ்வளவு ஆழ்ந்த பதில் அது.

Kamali Panneerselvam

தாயாக, மகளாக, காதலியாக, மனைவியாக, தோழியாக எல்லாம் வாழ்ந்தாச்சு... வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். பெண்ணாக அவரவர் விருப்பப்படி வாழ முடிகிறதா என்றால் பெரும்பாலான பெண்களால் முடிவதில்லை. அதனால் ஒரு பெண்ணாக அவள் விருப்பப்படி படிக்க, வேலைக்குச் செல்ல, காதலிக்க, விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள, தன் தேவைகளுக்கு யாரையும் சாராமல் வாழ வாழ்த்துகள்.

ஆண்கள் மட்டும் என்னவாம் விருப்பப்படியா வாழ்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு... யார் வேண்டாம் என்றது?! வாழுங்க... வாழ விடுங்க!

Happy women’s Day.

farina_azad_official: பையனுக்கும் கன்னத்துல குழிவிழுமா?!
farina_azad_official: பையனுக்கும் கன்னத்துல குழிவிழுமா?!

Latha

உறவில் இருக்கும் இருவரில் ஒருவர் அந்த உறவு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அந்த உறவு அவசியமற்றது தான். ஏன் அவர்களுக்கு வேண்டாம் என்ற ஆராய்ச்சி அவசியமற்றது. அவர்கள் வாக்கிலிருந்து தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு பலனும் இல்லை. வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் காலம் வரும் காத்திருக்கத் தேவையில்லை. அவர்களுக்கு ஏன் வேண்டாம் என்பது இங்கு முக்கியமில்லை. இருவரும் மனமுவந்து இருக்கும் உறவு தான் இங்கு முக்கியம். அவருக்கு வேண்டாம் என்றால் நமக்கும் வேண்டாம் தான்; அதில் அவர் முழுமையாக இல்லாத போது அவருடன் நாம் எதற்கு இருக்க வேண்டும்? ஓர் உறவில் இருவரும் ஆத்மார்த்தமாக இணைந்திருக்க வேண்டும். ஒருவருக்கு அந்த உறவில் இணைந்திருக்க விருப்பமில்லையெனில் எதுவும் தொலைந்துவிடுவதில்லை. ஒருவருக்கு சரியில்லாத உறவு இன்னொருவருக்கும் ஏற்புடைய தற்றதுதான். அடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு போவோம்.

சரண்யா

எல்லாம் தெரிந்தது போல் பேசுவதற்கு, எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

கடைநிலை ஊழியன்

ஞாயிற்றுக்கிழமை நைட்டானா, ‘நாளைக்கு வேலைக்குப் போகணுமே’னு தோணாத மாதிரி ஒரு வேலைல சேரணும் சார்.

nesamithran

எவ்வளவு நேசித்திருக்கிறோம் என்பது அழும் போதுதான் நமக்கே தெரிகிறது.