
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
Meenamma Kayal
இந்தியா ஒரு பார்வை...
நம் மக்களுக்கு தவறுகள் செய்வது பிரச்னை இல்லை... அதை அடுத்தவர்கள் செய்வதுதான் பிரச்னை.
Kanmani Pandian
Happiness ஆக இருக்க போராடறதை விட contentment ஆக இருப்பதே better.
Toshila Umashankar
சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் என் தோழி (தெரிந்தவர் என்றுதான் சொல்லணும்) ஒருவரின் புகைப்படம் சில profileகளில் தவறாக உபயோகிக்கப் படுகிறது என்று கூறி இருந்தார். பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இதுபோன்ற அக்கிரம செயல்கள் எல்லாம் நடக்கும்தான். எல்லாவற்றையும் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்லா இடங் களிலும் புகைப்படம் கிடைக்கும், சில சில்லறை புத்தி உள்ள நபர்கள் இதைச் செய்வார்கள்.
இன்று என் புகைப்படம் வைத்து எதோ whatsapp Number link என்று எங்கேயோ கொடுத்திருக்கிறார்களாம். பகிர்ந்தமைக்கு நன்றி.
இதை எல்லாம் பற்றி தெரிந்து வைத்துக்கொள்வேனே தவிர, அதனால் ஒரு கவலையும் இல்லை. எல்லா இடத் திலும் போய் சண்டைக்கு நிக்கணும்னு அவசியம் இல்ல.
அப்புறம் அந்த புள்ளை (அவனோ அவளோ)யாவது whatsappக்கு reply பண்ணுமா... தெரில.

Vidhya Varadaraj
‘அந்த காலத்துல அந்த நோய் இல்ல, இந்த நோய் இல்ல... அதுக்கு காரணம் எல்லாரும் வயர்கூடை யூஸ் பண்ணதுதான். ஆகவே எல்லோரும் வயர் கூடை யூஸ் பண்ணுவோம், நோயை விரட்டுவோம்’ டைப் பதிவுகளைப் பார்க்கும்போது ஒண்ணு தோணும்.
அந்த காலத்தில நோயெல்லாம் இருந்திச்சு, அதுக்கு பேருதான் இல்ல. மருந்தும் இல்ல. சாவு ஒன்றே தீர்வு.
அமுதாயினி
நாலு பக்கத்து போஸ்ட்டுக்கு Just now-ல முப்பது லைக் போடுறானுங்க. டேய் பரமா மொத படிங்கடா...
Primya Crosswin
உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்ததே இல்லை என்றால் ஆசிர்வாதமான வாழ்வு வாழ்கிறீர்கள். வந்தும் வாழ்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்வை நீங்கள் ஆசிர்வதிக்கிறீர்கள்.
Shobana Narayanan
அதிகம் உரையாடும் மருத்துவரை நோயாளிகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதிகம் உரையாடும் நோயாளிகளை மருத்துவர்கள் விரும்புவதில்லை.
அதிகம் உரையாடும் கணவனை மனைவிக்கு பிடிக் கும். அதிகம் உரையாடும் மனைவியை கணவனுக்கு பிடிப்பதில்லை. (உரையாடல் வேறு. சண்டை வேறு. விளக்கத்திற்காக)
அதிகம் பேசும் உயரதிகாரியை சப்பார்டினேட்டுக்குப் பிடிக்கும். ஆனால் உயரதிகாரிக்கு சப்பார்டினேட் அதிகம் பேசினால் பிடிக்காது.
அதிகம் பேசும் கடைக்காரரை கஸ்டமருக்கு பிடிக் கும். ஆனால் கஸ்டமர் அதிகம் பேசினால் கடைக் காரருக்கு பிடிக்காது.
வக்கீல் - வழக்கு தந்தவர்
கலைஞர்கள் - ரசிகர்கள்
ஆசிரியர் - மாணவர்
இப்படி எல்லா தளத்திலும் இந்த உரையாடல் ஒரு வழியாய் இருப்பதையே உலகம் விரும்புகிறது. அதில் ஒரு அதிகாரம் மறைந்து ஆட்சி செலுத்துகிறது.
மெய்யன்புடனான உரையாடல் எங்கு நிகழ்கிறது?

Sowmya Ragavan
நீ அனுப்பும் குறுஞ்செய்தியை உன் குரலின் ஏற்ற இறக்கத்துடனே படித்து முடிக்கிறது என் மனம்.
Deepa Janakiraman
இன்றைக்கு அலுவலகத்துக்கு வருகையில் கேட்டுக்கு வெளியே ஒரு நாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் உடல்மொழியில் ஒரே பரபரப்பு. “உள்ளே இதன் குட்டி எதுவும் மாட்டிக்கொண்டு விட்டதா? அல்லது வேறெதுவுமா?” என்னால் எதையும் யூகிக்க முடியவில்லை. நான் கேட்டினைத் திறந்ததும் மிக வேகமாக கீழ் ஃப்ளோரில் இருக்கும் ஒரு வீட்டு வாசலில் போய் நின்று கொண்டது. அவர்கள் வளர்க்கும் நாய் அல்ல என்பது தெரியும். ஆனால், அந்த வீட்டு வாசலில் நிற்கையில் அத்தனை உறுதி அதன் முகத்தில். நான் எனது அலுவலகத்தின் வாசல்படியில் உட்கார்ந்துவிட்டேன். என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்கிற ஆர்வம். வாசலில் உட்கார்ந்திருந்த நாய் சற்று பொறுமை இழந்து குரைக்க ஆரம்பித்தது. யாரையோ உள்ளிருந்து வரும்படி அழைக்கிறது. கதவு மூடியிருந்தது. உள்ளிருந்து யாரும் வரவில்லை. நான் அதனிடம் “யார் வேணும் என்றேன்” அது என்னைத் திரும்பி ஒருமுறை மரியாதை நிமித்தம் பார்த்துவிட்டு மீண்டும் குரைத்தது. யாரும் வரவில்லை என்றதும் அதற்கு மீண்டும் பதற்றம் வரத் தொடங்கியது.

நான் அதற்கு உதவ எண்ணி அவர்கள் வீட்டு காலிங் பெல்லினை அழுத்தினேன். உள்ளிருந்து அந்த வீட்டில் இருக்கும் அம்மா வந்தார். அவர்களிடம் “இந்த நாய் உங்க வீட்டுக்கு வந்துருக்கு” என்றேன்..சொல்லிவிட்டு தான் யோசித்தேன் “வேற எப்படி இந்தச் செய்தியை சொல்லி யிருக்க முடியும்” என்று. அவர் என்னையும் நாயையும் ஒரே பார்வை கொண்டு பார்த்தார். பரவாயில்லை. நாங்கள் இரண்டு பேரும் அதே முகத்தோடு நின்று கொண்டிருந்தோம். நான் நாயைப் பார்த்தேன். அது என்னைப் பார்க்கவில்லை. அது வீட்டின் உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது நாயின் பதற்றம் அதிகமானது. உள்ளிருந்து வேறொரு ஒரு பெண் வந்தார். நாய் அவரைப் பார்த்ததும் குரைக்கத் தொடங்கியது. இருந்த இடத்தை ஒரு முறை சுற்றி வந்தது. “ஆசாமி இவர் தானா?” என்று எனக்கு புரிந்தது. வந்த பெண்ணுக்கு நாயைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம்.
“எப்படி வந்த?” என்றார். நாய் மீண்டும் இருந்த இடத்தைச் சுற்றியது.
அந்த நாயை ஒரு வாரத்துக்கு முன்பு தான் எடுத்து வளர்க்கத் தொடங்கியிருக்கிறார். காலில் அடிபட்டிருந்ததாம். இன்று அவர் தனது வண்டியில் எப்போதும் போல அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கிறார். இது பின்னாடியே வந்திருக்கிறது. அது பின்னால் வந்ததைக் கூட கவனிக்க வில்லை என்றார். ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓடியே வந்திருக்கிறது.
சரி வந்த வேலை முடிந்தது என்று அலுவலகத்துக்கு போய் வேலை பார்க்கத் தொடங்கினேன். நாய் பக்கத்துக்கு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தது. அந்தப் பெண் புறப்படுகை யில் நாயும் கிளம்பியது. நான் ஹாலில் அமர்ந்து அவர்கள் போவதைப் பார்த்தேன். என் அலுவலகத்தைக் கடந்து கேட்டினைத் திறக்கும்போது நாய் என்னைப் பார்த்து ஒருமுறை குரைத்தது. உண்மையில் இது சாத்தியம் தானா என்று தெரியவில்லை. என்னால் நம்பவே முடியவில்லை. நாய் வளர்ப்பவர்கள் அறியக்கூடும். அது என்னிடம் போய் வருகிறேன் என்று சொன்னதா?
நான் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.

மதுரை சத்யா
வாக்குவாதம் (Argument) என்பது மிகப்பெரிய போதை அது தனது பிடிவாதத்தை பலமாக்குகிறது என்பதை உணர்ந்தவர்கள் அந்த போதையை கைவிடுவதே இல்லை. அதே நேரம் அம்மாதிரியானவர்கள் தீர்வை நோக்கி நகர்வதும் இல்லை. போதை மனிதர்களிடமிருந்து விலகி நிற்பதும் கூட, அவரவர் நிம்மதிக்கான சிறந்த வழியாகும்.
Twitaholic
இவங்க தான் வாழ்க்கைனு நீங்க நினச்சவங்களுக்கு வேற வாழ்க்கை இருக்கும். உங்களுக்குனு ஒரு தொழில் வச்சுக்கோங்க உழைப்பை உறவுகள்ல போடாம பொழப் புல போட்டா சோகமா இருந்தா கூட நல்லா நாக்கு ருசியா வாங்கித் தின்னுட்டு சோகமா இருக்கலாம்.
Selva Bharathi
தான் எத்தனை அழகு என்று அறியாதவர்களாலேயே
இந்த உலகம் அழகாகிறது.