தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: எல்லோர் கையிலிருந்தும் கேளாமல் ஒரு கவளம் உண்டிருக்கிறேன்!

பிரியா பவானி ஷங்கர், த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி ஷங்கர், த்ரிஷா

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Kavin Malar

இனி ஜி.பே பயன்படுத்தக் கூடாது என்கிற ஞானோதயம் தோன்றியதால் கையிலிருந்து காசு கொடுத்தே எதையும் வாங்குவது என முடிவு செய்தேன். ஜிபேயில் செலவு செய்தால் கணக்கே தெரிய மாட்டேன் என்கிறது. மாதக் கடைசிக்கு சில நாட்கள் இருக்கை யில் திடீரென்று ‘insufficient funds’ எனக் காட்டி எங்காவது மானத்தை வாங்கும். எனவே இனி ஜி.பேக்கு நோ சொல்வது என ஒரு வாரம் முன்பு முடிவெடுத்து உடனே 500 ரூபாய் நோட்டு ஒன்றை ஏ.டி.எம் மில் எடுத்தேன்.

ஆட்டோவில் ஏறி இறங்குகையில் 500 ரூபாயை நீட்டினால், ‘சில்லறை இல்லயே’ என உதட்டைப் பிதுக் கினார் ஆட்டோக்காரர். சரி... ஜிபே பண்ணிடுறேன் என ஜிபேயில் அனுப்பினேன்

டீக்கடையில் பத்து ரூபாய்க்கு டீ குடித்துவிட்டு 500 ரூபாய் கொடுக்க சங்கடமாக இருந்தது. அங்கேயும் ஜிபே.

பால் பாக்கெட் வாங்கிவிட்டு 500 ரூபாயை நீட்டினால் கடைக்காரர் ஜிபே செய்யச் சொன்னார்.

இன்னொரு ஆட்டோக்காரர் 500க்கு சில்லறை இல்லை அத்தோடு ஜிபேயும் இல்லை எனச் சொல்ல, நண்பர்களிடம் காசு வாங்கி அவரிடம் தந்துவிட்டு தொகையை ஜிபே செய்தேன்.

இது அல்லாமல் காசு கொண்டுபோக மறந்து மொபைலோடு கைவீசி நடந்து டீக்கடைக்கோ வேறு கடைக்கோ போவது. அங்கே போய் மறுபடி ஜி.பே. இப்படி ஒரு வாரகாலமாக 500 ரூபாயை அப்படியே புத்தம் புதிதாக வைத்திருக்கும் என்னை வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்?

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

Primya Crosswin

தினமும் எதையாவது எழுதி விடுவது கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வாடிக்கையாகி விட்டது. இதில் வரும் அத்தனை துயரும், காதலும், இழப்பும், இன்பமும் எனக்கே நிகழ்ந்ததன்று. அவ்வாறு நிகழ்ந்தால் நான் உயிர் வாழ சாத்தியம் இல்லை. இங்கிருக்கிற எல்லார் கையிலிருந்தும் ஒரு கவளம் கேளாமல் உண்டிருக்கிறேன்... எல்லார் வாழ்விலிருந்தும் ஒரு வலியை விழுங்கி யிருக்கிறேன். இது எனக்கு வலிக்கிறது. மொழியில் என் வலியைக் காண வேண்டும் என்பார்கள் சிலர். இந்த காதலை காலத்துக்கும் நீர்த்துப் போகாது நான் வைத்துக்கொள்ள வேண்டுமெனின் மொழியைத் தவிர அதற்கு வழியில்லையென வருவார் சிலர். இது எப்படி ஆகிற்று என தெரியவில்லை. நான் ஒரு மரம் போல பலர் செதுக்கிய இதய வடிவங்களுடனும், பெயர்களுடனும், பிள்ளையில்லாதவர்கள் கட்டிய தொட்டில்களுடனும், வளையல்களுடனும், இன்னும் நான் பிரித்துப் பார்க்காத கோரிக்கைச் சீட்டுக்களை இறைவனிடம் எடுத்துச் செல்ப வளாக ஒரு கவிதைக்காரியாக நிற்கிறேன்.

சில சமயம் ஒரோர் கவிதைகளை எழுதிய பின், இதில் இருப்பது நீங்களே தான் என்று நானே போய் சிலரிடம் சொன்னது கூட உண்டு. சிலர் தாமாக, இது எனக்காக எழுதியது போலவே இருக்கிறது என்பார்கள். பிள்ளைகள் வயிறார உண்ட பிறகும் பாத்திரத்தில் பதுக்கப்பட்டிருக்கும் ஈரலை அப்பாவின் தட்டில் அம்மா வைக்கிறபோது அவர்களுக்கிடையில் சம்பாஷனை எதுவும் நிகழாது. அப்பா தலையை உயர்த்தி அம்மாவை ஒரு பார்வை பார்ப்பார்... அவ்வளவுதான் அவர்கள் காதல். போலவே, இங்கு நான் எழுதும் வரிகள் யாருக் கானவையோ அவரோ/அவளோ தானாக அதை கிரகித்துக்கொண்டார் என்பதை ஒரு இதயக்குறியின் மூலமாகவோ, ஒரு நீல விருப்பக்குறியீடு மூலமாகவோ உணர்கிற அளவு தெளிவு இப்போது உண்டாகியிருக்கிறது. எனக்கு எல்லாரையும் நேசிக்க வேண்டும் போலிருக்கிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் ஏற்றுக்கொள்ளப் பிடித்திருக்கிறது. என்னால் இன்னொருவரை பழிக்கவே முடியாது என்று கண்டு கொண்டேன். நான் இங்கு தப்பிப் பிழைப்பது வெகுசிரமம்... அணைவதற்கு முன் சற்று பிரகாசித்துக் கொள்கிறேன். அவ்வளவு தான்!

அதிதி
அதிதி

Saffi Nazreen

எங்கப்பா பேர phoneல ஆதிகுணசேகரன் change பண்ணிட்டேன். Bcz அவரு Xerox தான் இவரு.

Nivethitha Sivasothy

முதல் முதலாக ஒரு காதல் கடிதத்தை ஒரு ஆண் என் கைகளுக்குள் திணித்துவிட்டு வேறேதும் பேசாமல் ஓடி மறைந்த ஒரு நாளில் அத்தனை பயந்து கண்ணீர் சிந்தியதாய்க்கூட ஞாபகம். அந்தக் கடிதத்தை திறந்து பார்ப்பதற்கும் கூட தைரியமில்லாத 13 வயது சிறுமியாக இருந்தேன். வாழ்வில் அதற்குப் பின் பலரால் நேசிக்கப் பட்டிருக்கிறேன். நேரடியாக காதலைச் சொல்ல தயங்கித் தயங்கி அணுகும் ஆண்களின் கண்களை நேர் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த முதல் அனுபவம் என்பதை பல நாள் பதட்டங்களின் பின்தான் கடக்க முடிந்தது.

அந்தக் காதல் கடிதத்தை அண்ணாவிடம்தான் கொண்டுபோய் முதல் முதலில் காட்டினேன். இந்தப் படங்களில் எல்லாம் வருவதுபோல ஒரு சண்டைக்காட்சி என்பதுதான் என் மன நிலையாக இருந்தது. ஆனால் நடந்தது என்னவோ வேறு. அந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தவன் சொன்னது, “வாழ்க்கை இதுபோல உனக்கு பல அனுபவங்களை தரலாம், பலரும் உன்னை அணுக லாம். எல்லாத்தையும் வீட்ல வந்து சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதே இல்லை. இது இயல் பாய் நடக்கும் ஒன்று. அதை உன் அனுபவத்தின் அடிப்படையில் இயல்பாகவே கடந்துபோக முயற்சிசெய்'' என்பதுதான்.

ஆண்டுகள் கடந்துவிட்டது, காதல் பற்றிய பார்வை மாறியிருக்கிறது. என்றோ பார்த்து சிலாகித்த காதல் படங்களை இப்பொழுது பார்த்தால் சிரிப்பு வருகிறது. காதல் என்ற பெயரில் அனேக உரிமை எடுத்துக்கொள்ளும் காதலர்களைப் பார்த்தால் விலகி நடக்கத் தோன்றுகிறது. ஒரு காலத்தில்...

அதுதான் காதல் என்றுவேறு நம்பிக்கொண்டிருந்தேன். பள்ளிக்காலங்களில் காதலித்துவிட்டால், இவள் இன்னா ளின் காதலி என்றுதான் பெயராகிப்போகும். சொந்த அடையாளம் இல்லாதுபோய்விடும் என்பது மட்டும் என் அறிவின் நிலைப்பாடாய் இருந்ததால் என்னை நேசித்தவர்களை எல்லாம் தவிர்த்திருக்கிறேன்.

சின்னச் சின்ன ஞாபகச் சின்னங்களாய் மட்டும் மாறிப்போன மனிதர்களாக ஆகிப்போனவர்கள்.

இந்நாளில் காதல் என்பது ஒரு மனிதனை தன் நிலையிலேயே தக்கவைத்துக்கொள்தல் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்ற கேள்விக் கான பதில்கள் இத்தனை ஆண்டுகளில் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நேசிக்கப்படுகிறோம் என்று தெரியும்போது ஏற்படும் ஒரு அலாதியான உணர்வு மட்டும் அப்படியே இன்னும், இன்றும் அதே பதின் பருவ வாசனைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

த்ரிஷா
த்ரிஷா

Brindha Sethu

மோசமான வாழ்வில் இருந்து, அது மோசமான வாழ்வு என்று உணர்ந்த கொஞ்ச காலத்திலேயே போராடி விடுபட சிலரால் முடியும்; சிலருக்கு இன்னும் காலம் எடுக்கும்; சிலருக்கு புரிந்தால் கூட விடுபட முடியாது.

எல்லோருக்கும் சுகமான நீரோடை போன்ற வாழ்க்கை அமைவதில்லை அப்படி அமையாததற்கு யாரும் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் தற்காப்புக் கலை பயின்றவர்களுக்கு இது நன்றாகத் தெரியும், வலி தாங்குவதும் வலிமையாக ஆவதற்கான ஒரு பயிற்சிதான்; ஒரு பகுதிதான்.

Kasthuri Raji Subramanian

PS2 பட விழால த்ரிஷா அழகா இருக்கா... ஆமா..

ஜெயம் ரவி... ஆமா..

கார்த்தி... ஆமா..

விக்ரம்... ஆமா..

அப்புறம் என்ன த்ரிஷா போட்டோவை மட்டும் ‘வயசா னாலும் இன்னும் அழகான்னு’ கேப்ஷன் போடுறீங்க?! அந்த லிஸ்ட்ல இருக்கற ஹீரோ எல்லாருக்கும் 24 தான் ஆச்சா?

Kalyani Elamaran

ஒருத்தர் கூட ஒருத்தர் வாழுறது சாதாரண வாழ்க்கை. ஒருத்தருக்காக ஒருத்தர் வாழுறதே அன்பான வாழ்க்கை.

பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர்

Dhivya

மொத்தக் கவலைகளையும்

திசைக்கொன்றாக பறக்கச்செய்து

எனை இறகாய் மிதக்க வைக்கும்

அவ்வொற்றை பார்வை உனது.

Johncy

சொல்லும் விஷயத்தைவிட சொல்லும் விதம்தான் அதிகம் கவனிக்கப்படுகிறது.

வர்ஷா

தகுதி அற்ற ஒருவரை நாம் நம்பியதற்கான தண்டனை தான் நம்பிக்கை துரோகம்.

தகுதி அற்ற விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதன் பலன்தான் தன்னம்பிக்கை.