லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: ஒருவரது நேரத்தை இப்படி அவமதிக்காதீர்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

மதுரை சத்யா

படிப்பதைப் பாகற்காயாக பாவிக் கும் இளைய மகளிடம் கொஞ்சம் கடுமையாகவே கேட்டுவிட்டேன், “ஸ்கூலுக்கு போகப் பிடிக்கலைனா சொல்லிரு” என.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “பிடிக்கலைனு உண்மை சொன்னாத் திட்டுவியாம்மா...” என அழுதபடியே கேட்கிறாள். கோபம் கரைந்து சிரித்துவிட்டேன்.

உண்மையில் நாம் உண்மை பேசு பவர்களையா விரும்புகிறோம்? நமக்குப் பிடித்ததுபோல் பேசுபவர்களைத்தானே விரும்புகிறோம்.

aishwaryarajini: அப்பாக்கு ஆக்‌ஷன் சொல்லுவோம்!
aishwaryarajini: அப்பாக்கு ஆக்‌ஷன் சொல்லுவோம்!

ரம்யா அருண் ராயன்

ஏறு நெற்றியின் நிர்வாணத்தை

நடுவுச்சி மயிரால்

இழுத்துப்போர்த்துகிற

முதிர்இளைஞனின்

சிகை பற்றியிழுக்கிறது

துச்சாதனக் காற்று.

Brinda

நகரத்தைவிட கிராமத்துல அதிகமா Power cut செய்றது, Posh areasவிட City suburbsல அதிகமா Power cut செய்றது எல்லாம் பக்கா Classism. எப்ப தான்டா திருந்துவீங்க.

Savitha

காலைல காபி, அப்புறம் டீ. மத்தியானம் தயிர், சாயந்தர டீ, ராத்திரி கடைஞ்ச மோர் எல்லாம் நிறுத் திடணும்.

வெய்ட் குறைக்கவா?

இல்ல.

கிச்சன்ல பாதி வேலையை குறைக்க...

#பால்பாத்திரம்விளக்கிபாழாப்போனோர்சங்கம்.

Uma Mohan

மறைந்துபோனவர்களுக்கான இருசொட்டுக் கண்ணீரை பேருந்தில் போகும்போதோ ஏதோ ஒரு விண்ணப்பத்துக்கான வரிசையில் நிற்கும்போதோ நேரத்தை வீணாக்காமல் சிந்திக்கொள்ளலாம்.

பானு அக்கா பல வருடங்களுக்கு முன்பே அப்படித் தான் செய்வாள். தேங்காய் நாரும் சாம்பலுமாக கிணற்றடியில் உருட்டித்தள்ளிக் கொண்டிருக்கையில் முழங்கையால் சேலையைத் தள்ளியபடி விசும்புவாள். அன்றைய துக்கத்துக்கா, என்றோ மறைந்த அத்தைக்கா என்றெல்லாம் யாரும் கண்டுபிடித்துவிட முடியாதபடி மூக்கு உறிஞ்சியபடி இழுவையாக. இப்போதும் இருக் கிறது இரண்டு சொட்டுக்கும் ஏதேதோ பங்கீடு.

keerthysureshofficial: தாய் இல்லாமல் நான் இல்லை!
keerthysureshofficial: தாய் இல்லாமல் நான் இல்லை!

Latha

வாழ்வில் நேரத்தைவிட உயர்ந்தது, விலை மதிப்பில்லாதது எதுவுமில்லை. அதனால்தான் கார், பங்களா, வேலைக்காரர்கள், பட்டு, வைரம் என்று பகட்டுடன் வாழ்ந்தாலும் தங்களுக்குள்ளாக நேரம் ஒதுக்க வியலாத இணையர்கள் நடுவில் பிணைப்பேற் படுவதில்லை!

ஒருவர் நம்மை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் என்றால் நமக்கான முக்கியத்துவத்தை அவர் நமக்கு அளிக்கிறார் என்றே அர்த்தம். அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்பதே பண்பு. ஒருவர் நம்மை பார்க்க வந்திருக்கும்போதோ, இல்லை நாம் அவரை பார்க்கச் சென்றிருக்கும்போதோ போனில் மணிக்கணக் காக யாருடனோ செய்தி அனுப்பிக்கொண்டிருப்பதோ, வேறு யாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பதற்கோ அவர் தனக்கான நேரத்தை நமக்காக ஒதுக்கவில்லை என்ற அடிப்படை உணர்வுகூட இல்லையெனில்... மறுமுறை அவர் நமக்கான நேரத்தை ஒதுக்குவதற்கு முன் சிந்தித்தே செயல்படுவார் என்பது புரிய வேண்டும்.

கண்ணெதிரில் நமக்காக உட்கார்ந்திருக்கும் நபரின் நேரத்தை எடுத்து எங்கோ தொலைவில் இருக்கும் நபருக்குக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு யார் நமக்கு உரிமை அளிப்பது? அதை அவர் நேரத்தை எடுத்துக்கொள்ளாமலேயே செய்திருக்கலாமே! இருக்கும் இடத்தில் உங்களுடன் இருக்கும், உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்கியிருக்கும் நபருக்கு முழுமையாக உங்கள் நேரத்தை கொடுங்கள். அந்தந்த நேரத்து முழுமைகள்தான் வாழ்க்கை (ஒரு அவசரம், இல்லை ஒரு முக்கியமான விஷயம் என்றால் அவரிடம் சொல்லி விட்டு பேசுவதிலோ, இல்லை செய்தி அனுப்புவதிலோ தவறில்லை).

Primya Crosswin

விதவைத் தங்கைக்காக

மனைவியின்

மிஞ்சியின் சதங்கைகளைக்

கழட்டச் சொல்பவன்

அண்ணன்...

அண்ணன் மனைவிக்கு

கொல்லையின்

ஜாதிமல்லியை

நெருங்கத் தொடுத்துக்

கொண்டிருப்பவள்

தங்கை!

krithi.shetty_official: கில்லிங் கண்ணு!
krithi.shetty_official: கில்லிங் கண்ணு!

தமிழ்ச்செல்வி தி

அகிலின் வகுப்புத் தோழர்கள் வீட்டுக்கு வந்திருக் கிறார்கள். ஐந்து பெண்கள், ஒரு பையன் என்று சிறு எண்ணிக்கை கொண்ட வகுப்பு. பத்து வருடங்களாக ஒரே வகுப்பில் இருந்ததால் எல்லோருடைய வீடுகளுமே ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு மாதிரி. பெற்றோர்களும் நெருங்கிய உறவினர்கள் போலத்தான்.

இன்னும் இரண்டு மாதத்தில் கல்வியின் பொருட்டு கர்நாடகா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, ஹரியானா, நியூயார்க் என வெவ்வேறு ஊர்களுக்குச் செல்லப் போகிறார்கள். ஒன்றாக இருக்கக் கிடைத்த இந்தக் குறைந்த காலத்தை விதவிதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு இரண்டு மணி வரை தூங்காமல் ஒரே அதகளம். வழக்கமாக அமைதியாக இருக்கும் எங்கள் வீட்டிலிருந்து இவ்வளவு சத்தமான பாடல்களும், சிரிப்பும் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் கலவரமாகி இருப்பார்கள். ஆனாலும் காலையில் சீக்கிர மாக எழுந்து, குளித்து, சாப்பிட்டு விட்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் வாக்குச் செலுத்துவதற்காக ஓடி விட்டார்கள்.

இந்த ஈராயிரக் குழவிகளுக்கு பெற்றோரிடமிருந்து/ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த சுதந்திரமும், அன்பும், நல்ல கல்வியும் அவர்களை அன்பானவர்களாக, சுய சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அதேசமயம் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த சூழலும், வாய்ப்பும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்காது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். பெற்றோர்களும், அரசும், கல்வியாளர்களும், சமூகமும் இணைந்து பயணித்தால் தான் அது முடியும். மதிப்பெண்களுக்கும், அதிக ஊதியத் துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நல்ல குடி மக்களை உருவாக்கவும் நாம் தர வேண்டும்.

எண்ணம் வந்துவிட்டால் போதும், செயல் எளிதாகி விடும்.

kanimozhikarunanidhiofficial: த்ரோபேக்!
kanimozhikarunanidhiofficial: த்ரோபேக்!

Johncy

அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத ஏழைகளிடம் மட்டுமேதான்.. சட்டம் தன் கடமையை சரியாகச் செய்யும்!

Radhika

கடந்த காலத்தில் நாம் எவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்று இன்றும் நாம் உணரவில்லை என்றால், இன்னமும் நாம் முட்டாள்களே!

Kavitha durai

சூடா குடிக்கிற டீக்கு கைப்பிடி இல்லாத க்ளாஸூ.

ஜில்லுனு குடிக்கிற ஜூஸூக்கு கைப்பிடியோட க்ளாஸூ.

இதான்ங்க வாழ்க்கை.

புர்தா...