சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே...!

 Pooja Hegde: ரோஸ் இஸ் எ ரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
Pooja Hegde: ரோஸ் இஸ் எ ரோஸ்!

குளித்து முடித்ததும் வியர்த்தால் பரவாயில்லை. சென்னையில் தலைக்குக் குளித்துக்கொண்டிருக்கும் போதே வியர்க்கிறது.

facebook.com/sowmya.ragavan

திருமணம் முடிந்ததும் அந்த அலங்காரத்தோடயே ஓடி வந்து தேர்வு எழுதற பெண்கள் எத்தனை மார்க் எடுக்கறாங்கனு பார்க்க ஏதாவது தரவுகள் இருக்கா?

facebook.com/erodekathir

செங்கல்பட்டில் போதையில் காவல் நிலையத்தில் ஒரு நபர் அலம்பல் செய்ததாக ஒரு வீடியோ சுற்றுகிறது, அதையொட்டி வழக்கமான(!) மாவுக்கட்டு சம்பவம். இத்தனைக்கும் உயரம் குறைவான மாற்றுத்திறனாளியாக அவர் தோற்றம் அளிக்கிறார். சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்திருந்தாலே போதும். ஆனால் மாவுக்கட்டு செயலை பலரும் சிலாகிக்க வேறு செய்கின்றனர்.

அதே சமயம், சமீபத்தில் கோவையில் வாக்கிங் போன பெண்ணின் கழுத்தில் இருந்த நகையைக் காரில் வந்து பிடுங்க முயன்ற திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மாவுக்கட்டுகளை அறிவு ஒப்புக்கொள்ள மறுத்தாலும், மனது கொடூரமாக உயிராபத்து விளைவிக்க முயன்றவர்களுக்கு ஒருவகையில் இது சரியானதுதான் என்றே சொல்ல விரும்புகின்றது.

பலரின் பற்களைப் பிடுங்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை நாம் வசதியாக மறந்துவிட்டோம்.

Venkat Prabhu: விளையாட்டாவா, சீரியஸாவா?
Venkat Prabhu: விளையாட்டாவா, சீரியஸாவா?

facebook.com/gokul.prasad.7370

குளித்து முடித்ததும் வியர்த்தால் பரவாயில்லை. சென்னையில் தலைக்குக் குளித்துக்கொண்டிருக்கும் போதே வியர்க்கிறது.

facebook.com/umanathselvan

‘‘கசங்கிய 2000 நோட்டுக்களை வாங்கமாட்டாங்க நினைக்கிறேன் தம்பி...’’

‘‘ஏன் அண்ணா?’’

‘‘அதுல சிப் (chip) நசுங்கி இருக்கும்ல!’’

facebook.com/RS Prabu

ஆனைகட்டி அருகே உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் வடமாநில ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் யானை மிதித்து இறந்துவிட்டார். விடுதியில் தண்ணீர் இல்லாததால் அருகிலுள்ள உணவகத்தில் குடிக்கத் தண்ணீர் பிடிக்கப் போனவரை இரவு எட்டரை மணியளவில் அங்கு நின்றிருந்த யானை தூக்கிப் போட்டு விளையாடிவிட்டது. வளாகத்திற்குள் தெருவிளக்குகள் எரியவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த மாணவர் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையவோ, அபாயகரமான முறையில் யானையுடன் தற்படம் எடுக்கவோ முயலவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசுத் தரப்பில் இழப்பீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. செய்தி அவ்வளவுதான்.

இன்று இன்னும் தலைமைச் செயலக செய்திக்குறிப்புகள், முதலமைச்சர் அலுவலக நிகழ்ச்சி நிரல், பல்வேறு அரசுத் துறைகளின் ட்விட்டர் கைப்பிடிகளைப் படித்து முதலமைச்சர் வாழ்க என்று பதிவு ஏதும் இடாததால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அமைப்புசாரா தற்சார்பு மது ஆதரவாளர்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

Silambarasan TR: சம்பவம் பெருசா இருக்கும்!
Silambarasan TR: சம்பவம் பெருசா இருக்கும்!

facebook.com/Vishvaksenan

முன்பெல்லாம் தமிழில் பெரிய வெற்றி பெற்ற படங்களை பிற மொழியில் ரீமேக் செய்வார்கள். அப்படி ரீமேக் செய்யும்போது தமிழின் க்ளாசிக் அந்தஸ்தில் இருக்கும் அந்தப் படத்தை கொத்திக் குதறி கந்தரகோலம் ஆக்கிவிடுவார்கள். உதாரணமாக ‘சேது'வைச் சொல்லலாம். அதை ரீமேக் செய்கிறேன் என்று எல்லா மொழியிலும் கந்தரகோலம் ஆக்கியிருப்பார்கள், இந்தியில் சல்மான்கான் வேறு காமெடி செய்தார், அதே போல் தெலுங்கு, கன்னடத்திலும். சில நேரம் இப்படி ரீமேக்கான படங்களை தமிழில் டப் செய்து கொண்டு வந்து டிவியில் போடுவார்கள். அதன் ஒரிஜினல் கிளாசிக் தமிழ் வெர்ஷன் பார்த்த நமக்கோ கடுப்பாக இருக்கும்.

இலை பரோட்டா அல்லது கிழி பரோட்டா சாப்பிட்டதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. பரோட்டாக்களில் சிறந்ததும், முதல் தரமான சுவையுடையதும், 365 நாட்களும் நம்மை சாப்பிட அடிமையாக்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கும் இருக்கும் தூத்துக்குடி பொரிச்ச ரொட்டியை, அதாவது பரோட்டாவை தொடர்ந்து சுவைத்தவர்களுக்கு, மற்ற ஊர் பரோட்டாக்கள் எல்லாமே டம்மியாகவும், இரண்டாம் தரமானதுமாகவே தெரியும். அவர்கள் பரிமாறும்போதே ரொட்டியைப் பிய்த்துப் போட்டுக் குவித்து, அதில் சால்னா, சேர்வையை ஊற்றி நனைத்து தருவார்கள். சிறிது நேரம் ஆறவிட்டால் பரோட்டா சால்னா, சேர்வையில் ஊறி சுவையாக இருக்கும். இதுதான் அங்கு பெரும்பாலான விவரம் தெரிந்தவர்கள் சாப்பிடும் முறை. இலை பரோட்டாவில் இந்த முறைக்கு இப்போதுதான் வந்திருக்கிறார்கள் போல! இதையும் இந்த விவரம் கெட்ட யூட்யூப் ஃபுடிக்கள் ஆகா ஓகோவென பரப்பிவிட, இங்கே திருநெல்வேலி வரை பரவிவிட்டது. அதையும் ஓட்டலில் விற்கிறார்கள், விவரம் இல்லாமல் அதிகக்காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒரிஜினலே இங்கே இருக்கிறது, அதைவிடுத்து இதன் ரீமேக் வெர்ஷனை மறுபடியும் இங்கே டப்பிங் செய்து விற்கும் கொடுமையை நொந்தேன். திருந்துங்கள் மக்களே, இந்த இலை பரோட்டா ஒரு ஸ்கேம்.

facebook.com/ramanujam.govindan

பத்து ரூபாய் காயினைக் கடைகளில் ஏத்துக்க மாட்டேங்கறாங்களே என்ற கவலையில் இருக்கும் என்னிடம் வந்து இரண்டாயிரம் ரூபாய் செல்லாதாமே எனக் கேட்கும் போது...

twitter.com/saranya121289

காரணமே இல்லாமல் உம்மென்று இருக்கும் உங்கள் மனைவியிடம் நீங்கள் காரணம் கேட்பதற்குப் பதிலாக, கரண்ட் கம்பியைத் தொட்டுப் பார்க்கலாம்...

twitter.com/Geeeethuma

ஆர்.சி.பி ஒரு மிடில் கிளாஸ் பையன் மாதிரிதான். அவன் நிறைய தோற்பான். கூட இருக்கிறவங்களால் நிறைய அவமானங்களைச் சந்திப்பான். ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான். அந்த நாள பெரிசா கொண்டாட ஒரு கூட்டம் காத்திட்டு இருக்கும் எப்பவும்!

twitter.com/sasitwittz

பேச்சுலரா இருந்தா ஈசியா நல்ல கம்பெனிலகூட வேலை கிடைக்குது. ஆனால் வீடு மட்டும் கிடைக்க மாட்டேங்குது..!

 Pooja Hegde: ரோஸ் இஸ் எ ரோஸ்!
Pooja Hegde: ரோஸ் இஸ் எ ரோஸ்!

twitter.com/itz_radhi3

நாம் கஷ்டப்படும்போது கேட்காமலேயே அள்ளி அள்ளிக் கொடுக்கப்படும் பொருளுக்குப் பெயர்... அறிவுரை!

twitter.com/Greesedabba2

எம்.பி தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மண்ணையும் மக்களையும் விட்டுச் செல்ல விருப்பம் இல்லை: அண்ணாமலை

# எலெக்‌ஷன்ல தோக்கறதுக்கு எல்லாம் ஸ்டேட்டை விட்டுப் போகச் சொல்ல மாட்டாங்க சம்பந்தம்...

twitter.com/anisuji

மக்களே... டாஸ்மாக்கில 2,000 ரூபாய் நோட்டு வாங்கறதுக்குத் தடை ஏதும் இல்லையாம். கறுப்புப்பணம் வச்சிருக்கிறவங்க, வங்கில போய் க்யூல நின்னு அடிபடுறதுக்கு நோட்டுக்கு ஒரு கட்டிங் வாங்கிக் குடுத்து மாத்திக்கிட்டா புண்ணியமும் சேரும்.

twitter.com/asdbharathi

குறைவாக இருந்தால் மட்டும் அல்ல, அளவுக்கு அதிகமாக இருந்தாலும் தேர்ந்தெடுப்பது கடினம்.

twitter.com/Anvar_officia

ஒரு டீ குடிச்சிட்டு முடிவெடுக்கலாம் என்பவர்களுக்கு டீக்கடை சரியான தேர்வு. எடுத்த முடிவு சரிதானா என்பதை நிறைய நேரம் உட்கார்ந்து யோசிக்க சலூன்கடைதான் சரியான தீர்வு!

twitter.com/asdbharathi

‘நீதான் செய்ய வேண்டும்' என்பதைவிட, ‘உன்னால்தான் செய்ய முடியும்' என்ற வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.

twitter.com/Pablo_twtz

500, 1000 ரூபாய் செல்லாதுன்னு சொல்லி 2,000 ரூபாய் கொண்டு வந்தாங்களே... அதுவும் ஊழலை ஒழிக்கத்தான்! இப்ப 2,000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு சொல்லி திரும்ப வாங்குறாங்களே, அதுவும் ஊழலை ஒழிக்கத்தான்! இனி ஒரு வருஷம் கழிச்சு 1,000 ரூபாய் நோட்டு கொண்டு வரப் போறாங்களே, அதுவும் ஊழலை ஒழிக்கத்தான். எல்லாமே உங்களுக்காகத்தான்!

twitter.com/SanjaiGandhi:

2 அடி உயரத்தில் ஸ்பீக்கர் பாக்ஸ் இருக்கும். அதுக்குள்ளயே ஊஃபர், ட்வீட்டர்லாம் இருக்கும். தோட்டத்துல தண்ணி கட்றது, பாத்தி கட்றது, உரம், எரு வைக்கிறது, லொட்டு லொசுக்குன்னு மணிக்கணக்கில் செய்ய வேண்டிய வேலைகளின்போது, டேப் ரெக்கார்டர் & ஸ்பீக்கரை மோட்டார் ரூம் மேல வச்சி ஊருக்கே கேக்கற மாதிரி சவுண்ட் வச்சி வேலை செய்வோம். அதில் அதிகம் கேட்கப்பட்டது ‘விதி’ திரைக்கதை கேசட்தான். சில டி.ஆர் படங்கள். ஒவ்வொரு வரியும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு சீன் மாறும்போதும் டொட்டொடய்ங்னு ஒரு சவுண்ட் வேற சேர்த்திருப்பாங்க. ஒரு கேசட் தேஞ்சி புது கேசட்லாம் வாங்கியிருக்கோம். எதுக்குச் சொல்றேன்னா... சும்மா சொல்றேன்!

twitter.com/kirchand4

மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்: அண்ணாமலை

# 100வது ‘மன் கி பாத்' நிகழ்ச்சியை உலகம் பூரா கேட்டுச்சி... கர்நாடக மக்கள் மட்டும் கேக்கலையேப்பா!

Keerthy Suresh: ஏய் நைக், ஒழுங்கா போஸ் கொடு..!
Keerthy Suresh: ஏய் நைக், ஒழுங்கா போஸ் கொடு..!

twitter.com/LAKSHMANAN_KL

கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்.

# டாஸ்மாக் எனும் சத்து டானிக்கைத்தான் நெருங்கணுமோ தலைவரே?!

twitter.com/pachaiperumal23

கர்நாடக காங்கிரஸ் வெற்றியில் ராகுலின் உழைப்பிற்கு இணையாக கேஸ் சிலிண்டரும் உழைத்திருக்கிறது.

twitter.com/skpkaruna

சொந்தப் பங்காளிகளே கொல்ல முயன்றார்கள். எல்லாவற்றையும் இழந்து தனித்து விடப்பட்ட அந்த வீரனின் கண்களில் என்றுமே கலையாத கனவு ஒன்றிருந்தது. பின்னாளில் அவன் அதை அடைந்து உருவாக்கிய மொகலாய சாம்ராஜ்யம் அதன்பிறகு 350 ஆண்டுகளுக்கு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தது. விராட் கோலிதான் IPL கிரிக்கெட்ல பாபர். 15 ஆண்டுகளாகத் தன்னந்தனியாப் போராடுகிறான். மனம் தளராமல்...

twitter.com/Suyanalavaathi

‘‘கோடி ரூபா கொடுத்தாலும் சில விஷயங்கள் செய்ய மாட்டேன்...''

‘‘டேய், உனக்கு யார்டா இப்ப கோடி ரூபா தர்றேன்னு சொன்னா?''

twitter.com/naiyandi

முடிவு இல்லாத விவாதத்தின் இறுதியில் பிறப்பதுதான் தத்துவம்!

twitter.com/mrdevilFromhel1

ரெண்டாயிரம் ரூபாய்

நோட்டைப் போல்

வாழ்வில் வந்து போனவள்!

twitter.com/Itzcrazykichu

படத்துல விஜய் ஆண்டனிக்கு துபாய்ல ஏதோ ஆக்சிடென்ட் ஆகிக் கபாலம் கலங்கிருச்சுன்னு வரும். எனக்கென்னமோ அது உண்மைதானோன்னு தோணுது...

twitter.com/N4LLANANBAN

நூலில் ஆடும் பொம்மைகளுக்கு விரல்களின் வலி தெரிவதில்லை!

twitter.com/amuduarattai

அப்பாக்களின் தொல்லை இல்லையென்றால், பல மகன்கள் வேலைக்குச் சென்றிருக்கவே மாட்டார்கள். அம்மாக்களின் அன்பு இல்லையென்றால், பல மகன்கள் வீட்டிற்கு வரவே மாட்டார்கள்.

twitter.com/sasitwittz

சனி, ஞாயிறு நல்லா வெயில்ல ஊர் சுத்திட்டு திங்கட்கிழமை ஆபீஸுக்குள்ள போனா குளுகுளுன்னு குலுமணாலிக்கு வந்த மாதிரி இருக்கு!