Published:Updated:

விமானம் தரையிறங்கியபோது உடைந்த முன்சக்கரம்: அடுத்து நடந்தது என்ன? - திகில் வீடியோ!

விமானம்

விமானத்தின் வேகத்தைக் குறைக்க முயன்றதால், முன்சக்கரப் பகுதியிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.

Published:Updated:

விமானம் தரையிறங்கியபோது உடைந்த முன்சக்கரம்: அடுத்து நடந்தது என்ன? - திகில் வீடியோ!

விமானத்தின் வேகத்தைக் குறைக்க முயன்றதால், முன்சக்கரப் பகுதியிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.

விமானம்

அயர்லாந்தின் டப்ளின் (Dublin)  விமான நிலையத்தில், கடந்த 9-ம் தேதி ரியானேர் (Ryanair) ஜெட் விமானம் தரையிறங்கியபோது விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானது. அப்போது விமான நிலையத்தின் ஓடுபாதையில், விமானத்தின் வேகத்தைக் குறைக்க முயன்றதால், முன்சக்கரப் பகுதியிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. விமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டபோது, வலது பக்கம் சாய்ந்து நின்றது. இந்த பயங்கரச் சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக எந்தப் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. தரையிறங்கிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம், விமானத்தின் முன்சக்கரமும், தரையிறங்கும் இயந்திரமும் முற்றிலும் நொறுங்கியது தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, டப்ளின் விமான நிலைய தீயணைப்பு வீரர்களால் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு, பயணிகள் விரைவாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். விமான நிலைய முனையத்தில் அனைத்துப் பயணிகளையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து ரியானேர் விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"தரையிறங்கியபோது கியரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பச் சிக்கலால் இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும், ரியானேர் பொறியாளர்களால் ஆய்வுக்காக விமானம் விரைவில் பணிமனைக்கு இழுத்துச் செல்லப்படும்" எனத் தெரிவித்திருக்கிறது.