Published:Updated:

``என்னைக் கண்டுபிடிக்கவே முடியாதே..!" - போலீஸிடமிருந்து தப்பிக்க சோலார் பேனலாக நடித்த கொள்ளையன்

கொள்ளையன்

காவல்துறையிடமிருந்து தப்பிக்க கட்டடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்களுக்கு அருகில் அசையாமல் படுத்துக்கொண்டு ஆட்டம்காட்டிய கொள்ளையன் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

``என்னைக் கண்டுபிடிக்கவே முடியாதே..!" - போலீஸிடமிருந்து தப்பிக்க சோலார் பேனலாக நடித்த கொள்ளையன்

காவல்துறையிடமிருந்து தப்பிக்க கட்டடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்களுக்கு அருகில் அசையாமல் படுத்துக்கொண்டு ஆட்டம்காட்டிய கொள்ளையன் கைதுசெய்யப்பட்டார்.

கொள்ளையன்

லண்டனில் குற்றச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கொள்ளையன் ஒருவனை காவல்துறையினர் அண்மையில் விரட்டிச் சென்றிருக்கின்றனர். அந்த நபர் குறுகிய சாலைகளில் ஓடியும், மாடிகளில் தாவிக் குதித்தும் காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த நபர் காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து மறைந்துவிட்டார். அதையடுத்து, தேசியக் காவல்துறையினரின் ஹெலிகாப்டர் மூலம் அந்த நபரைத் தேடும் பணி தொடங்கியது. அப்போது ஒரு கட்டடத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த  சோலார் பேனல்களுக்கு அருகில் ஒருவர் படுத்திருப்பது போன்று காவல்துறையினருக்குத் தெரிந்திருக்கிறது.

சோலார் பேனல்போல நடித்த கொள்ளையன்
சோலார் பேனல்போல நடித்த கொள்ளையன்

அசைவுகள் ஏதும் இல்லாதபோதிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், உடனே தொலைநோக்கி மூலம் பார்த்திருக்கின்றனர். அதில், அங்கே படுத்திருப்பது தாங்கள் தீவிரமாகத் தேடிவரும் நபர் என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர். ஆனால் அந்த நபரோ, `என்னை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது' என்பதுபோல அசையாமல் படுத்துக் கிடந்தார். அதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரைக் கைதுசெய்தனர்.

இது தொடர்பான புகைப்படத்தை தி நேஷனல் போலீஸ்  ஏர் சர்வீஸ் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்து, ``படுத்துக்கொண்டு சோலார் பேனல்போலப் பாசாங்கு செய்தால், `காவல்துறை என்னை ஒருபோதும் கண்டுபிடிக்கவே  முடியாது!' என்ற எண்ணத்தில் படுத்திருக்கிறார். பாவம் அவரது எண்ணம் தோற்றுவிட்டது.

இந்த ட்வீட்டைப் படிக்கும் கொள்ளையர்களுக்கு நட்புரீதியில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். மாடியின்மீது சோலார் பேனல்போல படுத்துக்கொண்டு நடித்து, எங்களையோ, எங்கள் கேமராவையோ ஏமாற்ற உங்களை வரவேற்கிறோம்" எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறது.