Published:Updated:

'கிண்டல் பண்ணின சமூகம் இப்போ பெருமையா பேசுது!' - சாதித்த கதை பகிரும் சம்யுக்தா!

விகடன் டீம்

மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமல்ல... கறுப்பா இருக்கிறவங்க, குண்டா இருக்கிறவங்க, மாற்றுத்திறனாளிகள்னு கொஞ்சம் வித்தியாசமா இருக்கிற எல்லோருக்குமே சமூகத்தில் புறக்கணிப்புகள் இருக்குது.

samyuktha vijayan
samyuktha vijayan

பொள்ளாச்சிதான் என் பூர்வீகம். டெய்லர் வேலை செய்துவந்த எங்கப்பா, குடும்ப வறுமையை மீறி என்னையும் அண்ணன் தம்பிகளையும் கான்வென்ட்டில் படிக்க வெச்சாங்க. வித்தியாசமாக இருந்த என் உடல்மொழி மற்றும் பழக்கவழக்கங்களைப் பத்தி குடும்பத்தினர் எந்தக் குறையும் சொன்னதில்லை. டான்ஸ் உட்பட நான் ஆசைப்பட்ட விஷயங்களைக் கத்துக்க ஊக்கம் கொடுத்தாங்க. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k7nQ10

இன்ஜினீயரிங் கவுன்சலிங்ல, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரில் 100-வது இடம் பிடிச்சேன். கோவை பி.எஸ்.ஜி காலேஜ்ல இன்ஜினீயரிங் படிச்சேன். பெண் தன்மையுள்ள என் செயல்பாடுகளால் நிறைய புறக்கணிப்புகளை எதிர்கொண்டேன். இதனாலேயே முதல் வருஷம் படிப்பில் சரியா கவனம்செலுத்த முடியலை.

'என்னைக் கிண்டல் செய்தவங்க முன்னாடி நல்ல நிலைக்கு உயர்ந்து காட்டணும்; அது, படிப்பால் மட்டுமே சாத்தியமாகும்'னு உறுதியா நம்பினேன். நல்லா படிச்சு, கேம்பஸ் இன்டர்வியூல தனியார் நிறுவனத்துல வேலை வாங்கினேன். அந்த நிறுவனத்திலும், அமேசான் நிறுவனத்தின் சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளிலும் தொழில்நுட்ப வல்லுநராக சில ஆண்டுகள் வேலை செஞ்சேன்.

ஒரு வருஷம் கழிச்சு என் தம்பி கல்யாணத்துக்குப் போனேன். 'இதுதான் என் பொண்ணு'ன்னு எங்கம்மா எல்லோர்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க.

2010-ம் ஆண்டில், சில வருத்தங்களுடன் வெளிநாடு போயிட்டேன். மீண்டும் இந்தியா திரும்பியதிலிருந்து தொடர்ந்து மதிப்புடன் வாழ்கிறேன்" - பெருமிதத்துடன் பேசும் சம்யுக்தா விஜயன், சமூகப் புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி சாதித்திருக்கும் முன்னோடி திருநங்கை. அமேசான் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர், இப்போது ஸ்விகி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்பத் திட்ட மேலாளராக பெங்களூரில் பொறுப்பேற்றிருக்கிறார்.

"திருநங்கையா மாறிய பிறகு, 2016-ம் ஆண்டு தீபாவளிக்கு ஊருக்குப் போனேன். எல்லோரும் என்னை சந்தோஷமா வரவேற்றாங்க, கவனிச்சுக்கிட்டாங்க. பிறகு ஒரு வருஷம் கழிச்சு என் தம்பி கல்யாணத்துக்குப் போனேன். 'இதுதான் என் பொண்ணு'ன்னு எங்கம்மா எல்லோர்கிட்டயும் என்னை அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க. இதுக்கிடையே, என் பெயரை மாத்திக்கலாம்னு அம்மாகிட்ட ஆலோசனை கேட்டேன். 'நீ பொண்ணா பிறந்திருந்தா சம்யுக்தானு பெயர் வெச்சிருப்பேன்'னு சொன்னாங்க. அதே பெயரை வெச்சுக்கிட்டேன். இப்போ நான் நானாகவே இருக்கிறேன்; உழைக்கிறேன்; வெற்றிபெற்றிருக்கேன்.

samyuktha vijayan
samyuktha vijayan

மூன்றாம் பாலினத்தவர்கள் மட்டுமல்ல... கறுப்பா இருக்கிறவங்க, குண்டா இருக்கிறவங்க, மாற்றுத்திறனாளிகள்னு கொஞ்சம் வித்தியாசமா இருக்கிற எல்லோருக்குமே சமூகத்தில் புறக்கணிப்புகள் இருக்குது. கிண்டல் பண்றவங்களுக்கு நம்ம வலி தெரியாது. அதே நேரம், நம்மளோட குறைபாடுகள்னு அவங்க நினைக்கிற விஷயங்களைத் தாண்டி நாம நல்ல நிலைக்கு உயர்ந்துட்டா, கிண்டல் பண்ணிய சமூகம் நம்மை பெருமையா பேச ஆரம்பிச்சுடும். இதுக்கு நானும் ஓர் உதாரணம் என்பதில் பெருமிதம். அப்படி ஓர் இடத்துக்கு வர புலம்பல் எந்த வகையிலும் பயன் தராது. திறமையை வளர்த்துக்கணும்; நிறைய உழைக்கணும். உயர்வு நிச்சயம் வரும்!" என்றார்.

- சம்யுக்தா உடனான முழுமையான உரையாடலை அவள் விகடன் இதழில் வாசிக்க > நான் நானாகவே பெற்ற வெற்றி இது! - சம்யுக்தா விஜயன் https://www.vikatan.com/lifestyle/women/samyuktha-vijayan-shares-her-success-story

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/