Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan

ஆனந்த விகடன் இந்த இதழில்

ஆனந்த விகடன்


சென்னையிலிருந்து வெளியாகும் "தமிழில் வெளியாகும் முன்னணி வாரப் பத்திரிகைகளில் ஒன்று ஆனந்த விகடன்". பூதூர் வைத்தியநாதய்யரால் 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகையை அவரிடமிருந்து 1928-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார் எஸ்.எஸ்.வாசன். பின்னர் அவர் இதில் பல புதுமையான அம்சங்களைப் புகுத்தி, இதன் விற்பனை எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். தமிழ்ப் பத்திரிகைகளில் ஒரு முன்னோடியாக ஆனந்த விகடன் விளங்குகிறது. கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி),தேவன், சுஜாதா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு , நாடோடி, துமிலன், ஜெயகாந்தன், சாவி, மணியன், எஸ்.ராமகிருஷ்ணன் எனப் பல எழுத்தாளர்களுக்கும், மாலி, ராஜு, கோபுலு, மருது எனப் பல ஓவியர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இன்றைக்கும் பல புதுப் புது எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஊக்குவித்து வருகிறது. இலக்கியம், அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, வணிகம், மருத்துவம், ஆன்மிகம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளிலும் தனது கருத்தாக்கங்களை ஆனந்த விகடன் வெளிப்படுத்தி வருகிறது. இதனுடைய வளர்ச்சியாகவே இன்றைக்கு ஒவ்வொரு துறைக்கும் பிரத்யேகமாக தனி இதழ்களை அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். ஆனந்த விகடன் என்னும் தனி நிறுவனம் தற்போது விகடன் குழுமமாகச் செயல்பட்டு வருகிறது.

உங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து ஆனந்த விகடன் இதழ்களையும் படிக்கலாம்

ஆனந்த விகடன் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்