Published:Updated:

சொந்தத்தில் திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய் வருமா? கண்கள் பத்திரம் - 15

மாலைக்கண் நோய்

அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும்.

சொந்தத்தில் திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய் வருமா? கண்கள் பத்திரம் - 15

அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும்.

Published:Updated:
மாலைக்கண் நோய்

``மாலைக்கண் நோய்.... இந்தப் பிரச்னையை காமெடியாக அணுகிய தமிழ்ப்படங்கள் உங்களுக்கு நினைவிருக்கலாம். உண்மையில் அது நகைச்சுவையாகக் கடந்துபோகக் கூடிய பிரச்னை அல்ல. சில விஷயங்களில் முன்னெச்சரிக்கையோடு இருந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

அதென்ன மாலைக்கண் நோய்.... அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்.... அதை குணப்படுத்த முடியுமா? விளக்கமாகப் பார்ப்போம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

``மாலைக்கண் பாதிப்பை ரெட்டினைட்டிஸ் பிக்மென்ட்டோஸா' (Retinitis pigmentosa) என்று சொல்கிறோம். சொந்தத்தில் திருமணம் செய்வதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மாலைக்கண் நோய் பாதிக்கலாம்.

இந்த நோயின் ஆரம்பகட்டத்தில் குழந்தைக்கு பகல் வேளையில் கண் நன்றாகத் தெரியும். இருட்ட ஆரம்பித்த பிறகும் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையிலும் அந்தக் குழந்தை பார்வை சரியாக இல்லாமல் மிகவும் சிரமப்படும். ஒரு கட்டத்தில் இருட்டில் செல்லவே பயப்படும். அதைவைத்துதான் பெற்றோருக்கு முதலில் சந்தேகமே வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பந்தப்பட்ட குழந்தைக்கு கண்களில் மட்டும்தான் பிரச்னையா அல்லது உடலில் வேறு பாதிப்புகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியிருக்கும். அதாவது இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் மாதிரி மாலைக்கண் பாதிப்போடு தொடர்புடைய வேறு பாதிப்புகளும் இருக்கலாம். எனவே குழந்தைக்கு மாலைக்கண் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கிற பெற்றோர், முதலில் மரபணு பரிசோதனை செய்துபார்த்து மாலைக்கண் நோயை உறுதிப்படுத்துவதோடு, அது எந்த வகையான மாலைக்கண் பாதிப்பு என்றும் கண்டுபிடிக்க வேண்டும்.

கண்
கண்

அரிதாக சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே `லீபர் கன்ஜீனிட்டல் அமரௌசிஸ்' (Leber congenital amaurosis (LCA) எனப்படும் பாதிப்பு வரலாம். இந்தப் பிரச்னை உள்ள குழந்தை கண்களை அசைத்துக்கொண்டும், விரல்களால் கண்களைத் தேய்த்துக்கொண்டும், குத்திக்கொண்டும் இருக்கும். பிறவியிலேயே ஏற்படும் இந்த பாதிப்புக்கு சிகிச்சைகளே கிடையாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

100 பேர் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 70 பேருக்கு நேர் பார்வை நன்றாகவே இருக்கும். ஆனால் பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கும். மீதமுள்ள 30 பேருக்கு நடுப் பார்வை குறைவதால் எழுதுவதும், படிப்பதும் குறைந்துவிடும். ஏனெனில் கண்ணின் மையப்பகுதியான மேகுலா வழியாகத்தான் எழுதுவது, படிப்பதெல்லாம் நடக்கிறது. அந்தப் பகுதியில் `மேகுலோபதி' (maculopathy) எனும் பாதிப்பு வந்திருக்கும்.

கண் பரிசோதனை
கண் பரிசோதனை

சில நேரங்களில் அந்தப் பகுதியில் நீர் கோக்கலாம். அதை `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி' (OCT ) எனும் டெஸ்ட்டின் மூலம்தான் கண்டறிய வேண்டும். அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும். `செலஃபேன் மேகுலோபதி' (Cellophane maculopathy) எனப்படும் இதை விட்ரெக்டமி எனும் அறுவைசிகிச்சையின் மூலம்தான் நீக்க வேண்டியிருக்கும்.

விழித்திரையின் மையப்பகுதி அழிய ஆரம்பித்துவிட்டால் அதற்கு சிகிச்சை கிடையாது. சாதாரண கண்ணாடிகளின் மூலம் சரி செய்ய முடியாத பிரச்னையை 'லோ விஷுவல் எய்ட்ஸ்' (Low visual aids) எனப்படுகிற மேக்னிஃபையிங் லென்ஸ் வைத்து சரி செய்யலாம்.

தவிர்க்க முடியுமா?

சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

வாசகர் கேள்வி

``என் வயது 35. நான் கணினி துறையில் பணிபுரிகிறேன். என் கண்கள் அடிக்கடி சிவந்துவிடுகின்றன. டாக்டரிடம் பரிசோதனை செய்ததில் எனக்கு Meibomian gland dysfunction (MGD) எனும் பிரச்னை உள்ளதாகச் சொன்னார். கண்ணில் உருவாகும் எண்ணெய் போன்ற திரவம், கண்ணீர் ஆவியாவதைத் தடுக்கும் என்றும், எனக்கு போதிய அளவில் எண்ணெய் சுரக்கவில்லை என்றும் டாக்டர் சொன்னார். இதற்கு ஏதும் தீர்வு உண்டா?

- விகடன் இணையத்திலிருந்து

கதவுகளின் இணைப்புகளில் உராய்வுக்காக எண்ணெய் விடுவதுபோல கண்களுக்கும் உயவுத்தன்மைக்காக எண்ணெய் தேவை. அந்த எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள்தான் 'மெய்போமியன் கிளாண்ட்ஸ்' எனப்படும். அதிலிருந்து சுரக்கும் எண்ணெய் வெளியே வந்து கண்ணீரோடு கலந்து கண்ணீரை பலப்படுத்தும். சிலருக்கு, குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வோருக்கு கண்களை இமைக்க மறப்பதால் இந்தச் சுரப்பு இருக்காது. அதனால் கண்ணீர் பலமிழந்து இருக்கும். இதற்கு மிகச் சிறந்த தீர்வு கண்களுக்கான பயிற்சிகள்.

கண்
கண்

சின்ன டவலை அயர்ன் செய்து சூடாக்கி கண்களின் மேல் வைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு விரல்களால் மென்மையாக கண்களின் மேல் மசாஜ் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை உங்கள் கண் மருத்துவர் கற்றுத் தருவார். தவிர உங்கள் கண்ணீரின் தரத்தைப் பரிசோதித்து அதற்கேற்ப டிராப்ஸ் பரிந்துரைப்பார். தேவைப்பட்டால் ஒமேகா 3 மற்றும் 6 மாத்திரைகள் பரிந்துரைப்பார். தவிர கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism