Published:Updated:

"அவர் என்னிடம் அன்பைத்தவிர எதையும் கேட்கவில்லை!" - நடிகை ஜாக்குலின் பற்றி சுகேஷ் உருக்கம்

ஜாக்குலினுடன் சுகேஷ்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்னிடம் அன்பைத்தவிர எதையும் கேட்கவில்லை என்று மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

"அவர் என்னிடம் அன்பைத்தவிர எதையும் கேட்கவில்லை!" - நடிகை ஜாக்குலின் பற்றி சுகேஷ் உருக்கம்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்னிடம் அன்பைத்தவிர எதையும் கேட்கவில்லை என்று மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஜாக்குலினுடன் சுகேஷ்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளான். ஜாக்குலினுக்கு இவ்வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கால் ஜாக்குலின் பாலிவுட் எதிர்காலமே பாதிக்கப்பட்டு இருக்கிறது.

"அவர் என்னிடம் அன்பைத்தவிர எதையும் கேட்கவில்லை!" - நடிகை ஜாக்குலின் பற்றி சுகேஷ் உருக்கம்

சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது ஏராளமான நடிகைகளை வரவழைத்து பேசியதோடு பணம் மற்றும் பரிசுப்பொருள்களை கொடுத்தான். இதில் நடிகை ஜாக்குலினுடன் மட்டுமே சுகேஷ் காதல் உறவு வைத்திருந்தான். ஜாக்குலினும் சுகேஷை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிறையில் இருந்து கொண்டு ஜாக்குலினுக்கு ஆதரவாக சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறான். அதில், "பணமோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பது மிக மிக துரதிஷ்டவசமானது. எங்களுக்குள் உறவு இருந்தது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பரிசுப்பொருள்கள் கொடுத்தேன் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் என்னிடம் அன்பு மற்றும் ஆதரவை தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நான் செலவு செய்த ஒவ்வொரு ரூபாயும் நான் சட்டப்பூர்வமாக சம்பாதித்தது ஆகும். எனக்கு எதிரான வழக்கு ஒரு சதியாகும்.

2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்" என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளான். இக்கடிதத்தை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறான். சுகேஷ் குற்றச்செயல்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமலாக்கப் பிரிவிடம் ஜாக்குலின் தெரிவித்துள்ளார். அதே சமயம் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, அபூர்வமான பூனைக்குட்டி, ஆடம்பர பேக்களை சுகேஷிடமிருந்து பெற்றதை ஜாக்குலின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் உறுதிபடுத்தி இருக்கிறார்.