வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
'ஐ லவ்யூ.'. முதன் முதலில் தனக்கானவரிடமிருந்து கேட்டபோது வெட்கமடைய வைத்திருக்கும்...சில நேரம் யார் முதலில் கூறுவது என பரிதவிக்கவும் வைத்திருக்கும்.. அன்பானவர்கள் தன்னிடம் கூறக் கேட்கும்போது பாசத்தை உணர வைத்திருக்கும்... முன்பெல்லாம் தவறு என அறிவுறுத்தப்பட்ட இந்த வார்த்தை... குறித்தான சிலரின் பார்வை தற்போது மாறி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆக' ஐ லவ் யூ' எனும் இந்த வார்த்தைக்கு தான் எவ்வளவு மதிப்பு ...அதைப்பற்றி யோசித்தபோது எனக்குள் தோன்றியது தான் இந்த பதிவு.
கம்பீரம், தைரியம், தன்னம்பிக்கை ,அன்பு, மயிலிறகால் வருடுவது போன்ற கண்டிப்பு, பாசம், காதல், நட்பு, ஒழுக்கம்... இப்படி எல்லாமும் கலந்திருக்கும் ஒரே ஒரு வார்த்தை 'லவ் யூ'. இந்த வார்த்தை வாழ்க்கையில் எத்தனையோ அற்புதமான மேஜிக்குகளை நடத்தும்.!

'லவ் யூ 'என்ற வார்த்தையை முதன் முதலில் பனிரெண்டாவது வயதில் கேட்டேன். ஆம்.. கணிதப் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அப்பாவிடம் காண்பிக்க பயந்து, உடம்பு சரியில்லை என்று சொல்லி இரண்டு நாட்கள் பள்ளிக்கு போகாமல் இருந்ததை தெரிந்து கொண்ட அப்பா, என்னை தனியே அழைத்து, 'லவ் யூ டா' செல்லம் ..இந்த முறை கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்தால் என்ன? அடுத்த முறை வாங்கினால் போச்சு! எதுவாக இருந்தாலும் தைரியமாக அப்பா, அம்மாவிடம் சொல்லு..'' என்று என்னை அணைத்து நெற்றியில் முத்தமிட,' எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோர்களிடம் முதலில் சொல்வது நல்லது என்பது புரியவைத்தது.'
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிசினஸ் மேக்ஸில் எனது நெருங்கிய தோழி(பெயர் வேண்டாமே) தோல்வியைத் தழுவி இருந்தாள். நான்கு நாட்களாக என்னிடம் பேசவே இல்லை. நான்காவது நாள் பெல் அடித்ததும், ( எல்லோரும் சென்றபின்) அவளை அணைத்து' லவ் யூ பா 'ன்னு சொன்ன மறு நொடி அவள் கண்களில் இருந்து கண்ணீர். பேரன்பு என்பது அதுதானோ!

எதற்கெடுத்தாலும் உதாரணங்களை சொல்லி விளக்குவதோடு மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய மாமாவிடம் நான் சொன்ன,' ஐ லவ் யு' கள் வாழ்க்கையில் உயரக் கற்றுக் கொடுத்தது.
வார்த்தைகளின் எல்லைகளைப் பொறுத்து அதனுடைய வாழ்நாள் காலம் அதிகரிக்கும் என்பதை சொல்லி, வார்த்தைகளில் கவனமாக இருக்க கற்றுக் கொடுத்த என்னவருக்கு சொன்ன,' ஐ லவ் யு 'கள் உறவுகளில் பலரையும் என்னை தோழமையுடன் பார்க்க வைத்தது.
எப்படி ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதையும் ,இப்படித்தான் வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது 'பணம்' அல்ல' மனம்' என்று கூறிய உடன்பிறவா அண்ணனுக்கு 'சொன்ன ஐ லவ் யூ'க்கள் ஒழுக்கப் பாடத்தை கற்றுக் கொள்ள உதவியது.

எதிர்பாராமல் தோல்விகளைத் தழுவும் போது ஏமாற்றம் என நினையாமல், மாற்றம் என நினைக்க... அது மனதிற்குள் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நண்பர் ஒருவருக்கு ' லவ் யூ 'சொன்னபோது , வெற்றிபெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது புரிந்தது.
ஆரோக்கியம் தான் மிகப்பெரிய சொத்து. நம்பிக்கையே மிகச்சிறந்த நண்பன் என்று அடிக்கடி சொல்லும் குடும்ப மருத்துவருக்கு ,'லவ் யூ' சொன்னபோது மனநிறைவே மிகப்பெரிய புதையல் என்பது தெரிந்தது.
இப்படி... நான் சொன்ன/சொல்லும் ஒவ்வொரு 'லவ் யூ 'களும் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது. இந்த 'லவ் யூ 'கள் யாரையும் குறை சொல்வதில்லை! மனம் நிறைந்து பாராட்டக் கற்றுக் கொடுக்கிறது. நேர்மறையான சக்தியை எனக்குள் பரப்புகிறது.

மொத்தத்தில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் கமலின் 'கட்டிப்புடி' வைத்தியம் போலத்தான் இந்த 'ஐ லவ் யூ' களும்! உறவுகளாகட்டும் நட்புகளாகட்டும் அவர்களைப் பாராட்டியோ அல்லது அவர்களின் செயலைப் பாராட்டியோ 'லவ் யூ' ன்னு சொல்ல... வாழ்க்கை அழகான வானவில்லைப் போல் வர்ணஜாலம் காட்டும்.
கணவர் நமக்கு பிடித்த புத்தகத்தைப் பரிசளிக்கும் போதோ, அல்லது நாம் சப்பாத்தி தேய்க்க அவர் சுடும் போதோ, நமக்கு விக்கல் எடுக்கும் போது நாம் கேட்காமலேயே தண்ணீர் தரும் போதோ... ' லவ் யூ' ன்னு சொல்லித்தான் பாருங்களேன்! (ரொமான்ஸ் கூடும்)

அட போங்கப்பா, இதெல்லாம் எங்க வீட்ல யாரும் செய்யறது இல்ல?! அப்படின்னு( நீங்க சொல்ற )உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.நோ.ப்ராப்ளம்.
வாழ்க்கை த்துணையை தினம் ஒரு முறையாவது கட்டி அணைத்து' ஐ லவ் யூ ப்பா"ன்னு நீங்க சொல்லுங்களேன்.அந்த 'லவ் யூ'என்று ஒற்றை வார்த்தை லாஜிக் இல்லாத மேஜிக் செய்யும் உங்கள் வாழ்க்கையில்!
இவ்வளவு சொல்லிட்டு உங்களுக்கெல்லாம் 'லவ் யூ' சொல்லாமலா!... உங்கள் அனைவருக்கும் அழகான' லவ் யூ'.சொல்லி ராயல் சல்யூட் வைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.