Published:Updated:

கைது நடவடிக்கையைத் தடுப்பதாகக் கூறி தாவூத் கூட்டாளியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு... போலீஸ் விசாரணை

ரூ.50 லட்சம் பறிப்பு... போலீஸ் விசாரணை

தாவூத் இப்ராஹிம் கூட்டாளியிடம் ரூபாய் 50 லட்சம் பறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கைது நடவடிக்கையைத் தடுப்பதாகக் கூறி தாவூத் கூட்டாளியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு... போலீஸ் விசாரணை

தாவூத் இப்ராஹிம் கூட்டாளியிடம் ரூபாய் 50 லட்சம் பறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
ரூ.50 லட்சம் பறிப்பு... போலீஸ் விசாரணை

மும்பையில் கடந்த மே மாதம் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்கு எதிராக மும்பை உட்பட 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின்போது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தாவூத் இப்ராஹிம் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் கூட்டாளியும், சோட்டாசகீல் மைத்துனருமான சலீம் குரேஷி என்று அழைக்கப்படும் சலீம் புரூட் கைதுசெய்யப்பட்டார். சலீம் புரூட் மும்பையில் சோட்டாசகீலின் தொழில் மற்றும் நிதி நிர்வாகத்தை கவனித்து வந்ததாகத் தெரிகிறது. சலீம் புரூட்டிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முக்கியத் தகவல் கிடைத்தது. குரேஷியிடம் ஒருவர் அமலாக்கப் பிரிவு கைதுசெய்வதிலிருந்து பாதுகாப்பதாகவும், தனக்கு டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகள் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

சலீம் குரேஷி
சலீம் குரேஷி

சலீம் குரேஷிஅதனை நம்பி குரேஷ் அந்த நபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்திருக்கிறார். விகாஷ் காலே என்ற அந்த நபர் ரூ.50 லட்சத்தை வாங்கிக்கொண்டு குரேஷியை டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். முக்கிய அரசியல்வாதியைப் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறியிருக்கிறார். சில நாள்கள் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் யாரையும் பார்க்காமல் மும்பைக்குச் செல்லும்படியும், கைது நடவடிக்கை குறித்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி குரேஷியை விகாஷ் காலே அனுப்பிவைத்தார்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

ஆனால் இப்போது குரேஷி கைதுசெய்யப்பட்டுவிட்டார். குரேஷி கொடுத்தத் தகவலின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விகாஷ் காலேயைக் கைதுசெய்து மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். குற்றப்பிரிவில் உள்ள மிரட்டிப் பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காலேயை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். காலேவுடன் எத்தனை பேர் சேர்ந்து இந்தக் காரியத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் காலேவின் பின்புலம் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.